BREAKING NEWS
Search

உலகில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்… அவர் ரஜினி சார்! – ஷாரூக்கான்

உலகில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்… அவர் ரஜினி சார்! – ஷாரூக்கான்

DSC_4952-copy

சென்னை: இந்த உலகில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அவர் ரஜினி சார் மட்டுமே என்றார் பாலிவுட் முன்னணி நாயகன் ஷாரூக்கான்.

ஷாருக்கான் – தீபிகா படுகோன் நடித்து திரைக்கு வரவிருக்கிறது ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படம். இந்தப் படத்துக்கான அனைத்து விழாக்களும் முதலில் சென்னையில் நடப்பது போலவே ஏற்பாடு செய்துள்ளார் ஷாருக்கான்.

படத்தின் நாயகி தீபிகா படுகோனேவுடன் இன்று சென்னை வந்த ஷாரூக்கான், விழாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

“என் அம்மா பிறந்த ஊர் ஹைதராபாத். தீபிகாவுக்கு சொந்த ஊர் பெங்களூர். இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ் தமிழ். இந்தப்படம் சம்பந்தப்பட்டவர்கள் தென் இந்தியர்கள். தென் இந்தியர்கள் எல்லோரும் இணைந்து ஒரு இந்தி சினிமா செய்திருக்கிறோம்.

தமிழ்நாட்டில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அஜீத் எனக்கு நல்ல நண்பர். மணிரத்னம்,சந்தோஷ் சிவன் என்று என் மனதுக்குப் பிடித்த நண்பர்கள் இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள்,” என்றார்.

தீபிகா படுகோனிடம், “கோச்சடையான், சென்னை எக்ஸ்பிரஸ் என்று இரண்டு சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்திருக்கிறீர்கள். நீங்கள் பணியாற்றிய விதத்தில் யார் பெஸ்ட் என்று நினைக்கீர்கள்?” என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

தீபிகா சற்று தயங்க, உடனே வந்த ஷாருக்கான் மைக் பிடித்து, “இந்த கேள்விக்கு தீபிகாவால் பதில் சொல்ல முடியாது. நானே சொல்கிறேன்.

உலகில் ஒரே சூப்பர் ஸ்டார்…

உலகத்திற்கு ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அவர் ரஜினி சார்தான். இது எல்லோருக்கும் தெரியும். ரஜினி சாருக்கு ஜப்பானில் இருக்கும் ரசிகர்களை கண்டு நான் வியந்திருக்கிறேன்.

srk-deepika

தனித்துவம் வாய்ந்த அந்த மனிதரை கொண்டாடுவதற்கு ஒரு வாய்ப்பு அமைந்தது. அதனால்தான் லுங்கி டான்ஸ் ஒன்றுக்கு ஆடியுள்ளேன். இந்த பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலுக்கும் படத்திற்கும் சம்பந்தம் இல்லையென்றாலும் ரஜினி சாருக்கு என்னால் முடிந்த ஒன்றைச் செய்த திருப்தி இருக்கிறது,” என்றார்.

-என்வழி ஸ்பெஷல்
13 thoughts on “உலகில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்… அவர் ரஜினி சார்! – ஷாரூக்கான்

 1. குமரன்

  ///“என் அம்மா பிறந்த ஊர் ஹைதராபாத். தீபிகாவுக்கு சொந்த ஊர் பெங்களூர். இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ் தமிழ். இந்தப்படம் சம்பந்தப்பட்டவர்கள் தென் இந்தியர்கள். தென் இந்தியர்கள் எல்லோரும் இணைந்து ஒரு இந்தி சினிமா செய்திருக்கிறோம்.///

  ///உலகத்திற்கு ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அவர் ரஜினி சார்தான். இது எல்லோருக்கும் தெரியும். ரஜினி சாருக்கு ஜப்பானில் இருக்கும் ரசிகர்களை கண்டு நான் வியந்திருக்கிறேன்.///

  இதைக் கேட்டு சத்தியராஜ் (புரட்சித் தமிழன்!!!) தன தலையை (!) எங்கே கொண்டுபோய் வைத்துக் கொள்வார்?

 2. mugilan

  இந்த மானம் கெட்ட சத்யராஜ் விஜய் கு நல்ல ஜால்ரா போடுவான் அவன போய் பெரிய ஆளுன்னு சொலுவான் இப்ப sharukh கான் சொன்னத கேட்டு இந்த விஜய் சத்யராஜ் யன்ன பணுவங்க லா
  சூப்பர் sharukh சார் தலைவர் தான் ஒரே superstar

 3. kumaran

  சத்யராஜ் தலையை தொங்க போட்டு சிலவருடங்கள் ஆகிவிட்டது குமரன் சார்

 4. r.v.saravanan

  உலகத்திற்கு ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அவர் ரஜினி சார்தான்.
  இது எல்லோருக்கும் தெரியும்.

  நல்லா சொல்லுங்க ஷாருக். நீங்க எட்டியிருக்கும் உயரத்தை பாதி கூட எட்ட இயலாத சில பேருக்கு இது தெரியவேயில்ல (தெரியாத மாதிரி காட்டிக்கிறாங்க)

 5. Aryan

  ஷாருக் கான் மாதிரி ஒரு மார்க்கெட்டிங் மாஸ்டர் mind யாருக்கும் இல்ல, சில லட்சம் செலவழிச்சி பல கோடிகள அள்ளுற டெக்னிக்க நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்குராறு, ரஜினிய ஒரு சீன்ல காட்டி (அது ஒரிஜினல் ரஜினி இல்லனுறது வேற கதை) ரா one னு ஒரு மொக்க படத்த தமிழ் நாட்டுலயும் மார்க்கெட் பண்ணுனாரு, இப்போ சென்னை எக்ஸ்பிரஸ்ஸ ஓட வைக்குறதுக்கு இப்படி ஒரு சீன போடுறாரு, ராசா தன்னோட படத்த ஓட வைக்குறதுக்கு இவன் என்னவேணும்னாலும் செய்வான், உலகத்திற்கு ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டும் தான்னுறது இவன் சொல்லி தெரியவேண்டியது இல்ல.

 6. rajni rasikan

  சார், கொஞ்சம் சினிமாவை விட்டு வெளியில வாங்க. நாட்டு நடப்பை பாருங்க.

 7. Nanda

  Nice to see thalaivar banner in “Lungi dance”… I don’t see any tamil actor did this before.. Thanks Mr. Sharuk.

 8. velusamy

  @ குமரன்
  //சத்யராஜ் தலையை தொங்க போட்டு சிலவருடங்கள் ஆகிவிட்டது குமரன் சார்

  என்னங்க பண்றது ?! தமிழர்கள் எல்லாம் தமிழ் நாட்டில் தலை தொங்கபோட்டுகிட்டு தான் வாழ வேண்டி இருக்கு… மற்றவர்கள் இங்க ஆளும்போது நாங்க வேற என்ன செய்ய முடியும் ?

 9. enkaruthu

  //தமிழர்கள் எல்லாம் தமிழ் நாட்டில் தலை தொங்கபோட்டுகிட்டு தான் வாழ வேண்டி இருக்கு…//

  அடேகப்பா உங்கள் தமிழ் பற்றை பார்த்து புல்லரிக்குதப்பா.அவ்வளவு தமிழ் பற்று உள்ள இந்த சத்யராஜ் என்ன டேசுக்கு கேரளாவை சேர்ந்த நகை கடை விளம்பரங்களிலும் வெளி மாநில திரைப்படங்களிலும் நடிக்கிறார்.

 10. kabilan.k

  வேலாயுதம் சார் நல்ல காமெடி பண்றாரு !!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *