‘சூப்பர் கேலக்ஸி’ ரஜினி!
ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் அல்ல… அவர் ஒரு சூப்பர் கேலக்ஸி என்றார் நடிகர் அக்ஷய் குமார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படத்தின் முதல் தோற்ற வெளியீட்டு விழாவில், ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்த அனுபவம் குறித்து அக்ஷய் குமாரிடம் கேட்டார் இயக்குநர் கரண் ஜோஹர்.
அவர் கூறுகையில், “ரஜினி சார் ஒரு லெஜன்ட். அவர் மீது நான் பெரும் மதிப்பு வைத்திருப்பவன். அவருடன் நடிப்பேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை. இந்த வேடத்துக்காக என்னைத் தேர்வு செய்ததற்காக ஷங்கர் சார், ரஜினி சாருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ரஜினி சார் ஒரு சூப்பர் ஸ்டார் அல்ல… அவர் ஒரு சூப்பர் கேலக்ஸி. அவர் ஒருவர்தான் இந்த உலகில் இத்தனை வசீகரமானவர்.
கண்ணாடி அணிவது, சிகரெட்டை தூக்கிப் போட்டுப் பிடிப்பது, கோட் அணிவது, அதை ஸ்டைலாக விலக்கி விட்டு நடப்பது… இதையெல்லாம் ரஜினி சாரைப் பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்,” என்றார்.
-என்வழி
சூப்பர் கேலக்சி ரஜினி …. இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது!