BREAKING NEWS
Search

இந்தியில் முதல் முறையாகப் சொந்தக் குரலில் பாடிய சூப்பர் ஸ்டார்!

rajini1

ந்தியில் முதல் முறையாகப் சொந்தக் குரலில் பாடிய சூப்பர் ஸ்டார்!

சூப்பர் ஸ்டார் ரஜினி தன் கோச்சடையான் படத்துக்காக ரஹ்மான் இசையில் ஒரு பாடல் பாடினார் என்பது ரொம்ப பழைய செய்தி.

இதோ… ஒரு புதிய செய்தி. கோச்சடையானின் இந்திப் பதிப்புக்காக தன் சொந்தக் குரலில் ரஹ்மான் இசையில் ஒரு பாடல் பாடினார் ரஜினி. தமிழில் வைரமுத்து எழுதியிருந்த இந்தப் பாடலை இர்ஷத் கமில் என்பவர் இந்தியில் எழுத, நேற்று பதிவு செய்தார் ரஹ்மான்.

பொதுவாக தான் எந்த மொழியில் நடித்தாலும் தன் சொந்தக் குரலில் டப்பிங் பேசுவதுதான் ரஜினி வழக்கம். அவருக்கு இந்தி மிக நன்றாகத் தெரியும். அந்தாகானூன் தொடங்கி இதுவரை அவரது அனைத்து இந்திப் படங்களிலும் அவரே பேசியுள்ளார்.

ஆனால் இந்தியில் பாடுவது இதுதான் முதல் முறை. தமிழில் மன்னன் படத்தில் இளையராஜா இசையில் ஒரு பாடல் பாடியிருந்த ரஜினி, இப்போது கோச்சடையானுக்காக ரஹ்மான் இசையில் பாடியுள்ளார்.

கோச்சடையான் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இப்போது இரண்டாவது பகுதிக்கான டப்பிங் நடக்கிறது.

ஜூன் முதல் வாரத்தில் படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்று தெரிகிறது.

-என்வழி ஸ்பெஷல்




8 thoughts on “இந்தியில் முதல் முறையாகப் சொந்தக் குரலில் பாடிய சூப்பர் ஸ்டார்!

  1. kumaran

    கோச்சடையான் வெற்றி பெற்றால், நிச்சயம் அடுத்த படத்தை உடனே துவங்குவார் !

  2. vasanthan

    தலைவா உங்கள் பாடல் கேட்க ,படத்தை காண ஆவலாக உள்ளோம் ,விரைவில் வருக ,தகவலுக்கு நன்றி வினோ

  3. kesavan

    தாய் மொழியல்லாத தமிழிலேயே தலைவர் பேசி கலக்கும் போது, மராத்தி மொழி தெரிந்த தலைவருக்கு ஹிந்தியில் பாடுவது ஒன்றும் சிரமம் அல்ல.

  4. vasanthan

    உங்கள் படத்தையும் ,பாட்டையும் ,பார்க்கவும் கேட்கவும் ஆவலாகு உள்ளோம் ,தலைவா விரயைந்து வாருங்கள் ,,,,,,,,,,,,,,,,,,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *