BREAKING NEWS
Search

ரஜினி சார் நீங்க சிஎம் ஆகணும்… இதுதான் எல்லோருடைய ஆசையும்.. என் ஒரே தலைவர் நீங்கதான்! – அதிர வைத்த அமீர் பேச்சு

ரஜினி சார் நீங்க சிஎம் ஆகணும்… இதுதான் எல்லோருடைய ஆசையும்.. என் ஒரே தலைவர் நீங்கதான்! – அதிர வைத்த அமீர் பேச்சு

IMG_9464

சென்னை: ரஜினி சார், நீங்க தமிழ்நாட்டோட முதல்வர் ஆகணும். அதைத்தான் நாங்க எல்லோரும் எதிர்ப்பார்க்கிறோம். என் வாழ்நாளில் நான் தலைவர் என்று உச்சரிக்கும் ஒரே தலைவர் நீங்கள் மட்டும்தான், என்றார் இயக்குநர் அமீர்.

அமீரின் இந்தப் பேச்சு ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்துவிட்டது.

தலைவர் ரஜினியின் லிங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடந்தது.

இந்த விழாவில் இயக்குநர் அமீர் கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சு கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதைப் பிரதிபலிப்பதாக அமைந்தது.

அவரது பேச்சு (ஒரு பகுதி):

ரஜினி சார்.. இங்கே பேசின எல்லாரும் பூடகமா ஒரு விஷயத்தைச் சொல்லிட்டுப் போனாங்க. நம்ம சேரன், விஜயகுமார் எல்லாம் சொன்னாங்க. அது வேற ஒண்ணுமில்ல.. நீங்க தமிழ்நாட்டோட சிஎம் ஆகணும்.. இதுதான் எல்லோருடைய ஆசையும் (அமீர் இதைச் சொல்லி முடிக்க, அரங்கம் அதிர்ந்து அடங்க சில நிமிடங்கள் தேவைப்பட்டது!!)

சார், இந்த நம்பிக்கை பொய்யாக இருக்குமா? இங்கே நீங்கள் பார்க்கிற சில ஆயிரம் பேர் மட்டும் இப்படி கேட்கவில்லை.. வெளியில், இந்த தமிழ்நாட்டில் உள்ள மொத்தப் பேரும் இப்படித்தான் சார் ஆசைப்படுகிறார்கள்.

30 ஆண்டுகளாக உங்க மேல மட்டும்தான் தமிழக மக்கள் இப்படியொரு நம்பிக்கையை வச்சிருக்காங்க.

‘குசேலன்’ படத்தில் வசனம் சொன்னீர்கள். டைரக்டர்கள் எழுதிக் கொடுத்ததை பேசுகிறேன் என்றீர்கள். உங்கள் மனசாட்சியை மறைத்து விட்டுத்தான் இந்த வசனத்தை நீங்கள் பேசினீர்கள். காரணம் உங்கள் மனதில் இருப்பதைத்தான் ஒவ்வொரு படத்திலும் டைரக்டர்கள் வசனமாக எழுதினார்கள். உங்கள் கூடவே இருந்து உங்களைக் கவனித்த பிறகே, உங்கள் எண்ணத்தை வசனமாக எழுதுகிறார்கள்.

இப்பக்கூட இந்த ட்ரைலர்ல இந்த நாட்டு மக்களுக்கு நான் எதாவது செய்யணும்-னு சொல்றீங்க. அதையேதான் நானும் சொல்றேன். அதுக்கான காலமும் கனிந்து வந்திருப்பதாக கடவுள் மேலருந்து சொல்றார்.

16-rajini-ameer-600

நீங்க அரசியலுக்கு வரணும்னு இந்த நாடே ஆசைப்படுது. அரசியலுக்கு வரணும்ங்கிற ஆசையுடன் நீங்க ஒரே ஒரு மேடை ஏறினா போதும்… இந்த மொத்த நாடும் உங்க பின்னால் வரும்.

ஆயிரம் பேர் ஆயிரம் விதமா பேசலாம். நீங்க பார்க்காத விமர்சனமா.. அரசியல்னு வரும்போது வேற ஒண்ணு வரும். அதையெல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு, இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்க ஏதாவது நல்லது செய்யணும்னு நினைச்சிங்கன்னா, களத்துல இறங்கி நடங்க.. நாங்க எல்லாரும் அப்படியே உங்க பின்னாடி வந்திடறோம்.

இந்த விஷயத்தைத்தான் இங்க நேரடியா உங்ககிட்ட சொல்ல பலர் தயங்கறாங்க. ஏன்னா எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த விஷயத்தை உங்ககிட்ட மட்டும்தான் கேட்க முடியும், வேற யார்கிட்ட சார் கேட்க முடியும்?

என் வாழ்நாள்ல தலைவர்னு யார் பெயரையும் உச்சரித்ததில்லை. இன்னிக்கு முதல் முறையா சொல்றேன், அரசியலுக்கு வரத் தகுதியான இடத்தில் உள்ள, இந்த மக்களை வழிநடத்தக் கூடிய ஒரே தலைவர் நீங்கதான்!

-இவ்வாறு அமீர் பேசி முடித்தார். அவரது பேச்சின் ஒவ்வொரு வரிகளுக்கும் அரங்கம் அதிர்ந்தது என்றால் அது மிகச் சாதாரண வார்த்தை. அப்படி ஒரு ஆர்ப்பரிப்பு!

-என்வழி ஸ்பெஷல்
13 thoughts on “ரஜினி சார் நீங்க சிஎம் ஆகணும்… இதுதான் எல்லோருடைய ஆசையும்.. என் ஒரே தலைவர் நீங்கதான்! – அதிர வைத்த அமீர் பேச்சு

 1. R O S H A N

  சூப்பர் வினோ ஜி…..அருமையான பதிவு…..அந்த ஸ்பீச் கேக்க தான் கொடுத்து வெக்கல, அட்லீஸ்ட் என்ன பேசுனாங்கன்னு அழகா எழுதிருக்கீங்க……எப்படியும் ஜெயா டிவி ல இதெல்லாம் கட் பண்ணிடுவாங்க……

  ஒரு சின்ன வேண்டுகோள், மத்தவங்களும் என்ன பேசுனாங்கன்னு ஒரு பதிவு போட்ருங்க, முக்கியமா அரசியல் விஷயமா பேசுனது……..

 2. chozhan

  இந்த பேச்சால் ரஜினி சார் நெளிந்தார்/தர்மசங்கடமானது என்பதுதான் உண்மை

 3. மிஸ்டர் பாவலன்

  நண்பர்களே.. பொதுவாக சூப்பர் ரஜினி படம் ஏதாவது புதிதாய்
  release ஆகிறது என்றால் அதன் முன்னர் இது போல் ஏதாவது
  ஒரு build-up இருக்கும்.. ரஜினி அரசியலுக்கு வரணும் என்பார் சிலர்..
  சினிமாவிலேயே நடிக்கலாம், ரஜினி போன்றவர்களுக்கு நமது
  அரசியல் சரிவராது என்பார் சிலர்.. ரஜினி “எல்லாம் ஆண்டவன் செயல்”
  என்பார்.. இந்த அரசியல் எதிர்பார்ப்புகளுடன் படம் வெளிவரும்..
  படம் release ஆனதும் hit ஆனதும் வசூல் பற்றி பேச்சு இருக்கும்… அதன் பின்
  அரசியல் வருவது பற்றி யாரும் பேச்சு எழுப்ப மாட்டார்கள்..
  தேர்தல் எதுவும் வந்தால் “ரஜினி voice உண்டா?” என சிலர் எதுவும்
  கேட்பார்கள்.. ரஜினி பேட்டிகளைத் தவிர்த்து விடுவார்.. பின் அடுத்த
  படம் யார் direction , யார் production என பல வதந்திகள் வரும்.. பின்
  படம் முடிவு செய்து release ஆகும் சமயத்தில் ரஜினி அரசியல் பிரவேசம்
  பற்றி சில பேச்சுகள் எழுப்பப்படும்.. அதன் பின்…. (பதிவை மீண்டும்
  திருப்பி படிக்கவும்!) நன்றி!!!

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 4. குமரன்

  ஜெயலலிதா கருணாநிதி இந்த இரண்டு பேரும் தொடர்ந்து செய்து வரும் கழிசடை அரசியல் நீங்கவேண்டும் என்றால் இப்போது தென்படும் ஒரே வழி ரஜினி முதல்வர் ஆவதுதான்.

  ஐந்து வருஷம் ஜெயா, ஐந்து வருஷம் கருணா என்று மாற்றி மாற்றி அடிக்கும் கொள்ளையில் இருந்து விடிவு தர இருக்கும் ஒரே விடிவெள்ளி ரஜினிதான். ஏற்பாரா?

 5. Tharun

  Hi,

  Yesterday i went to the audio launch, We all have to thank Amir for such a bold speech while the others are indirectly specking about Thalivar political entry.

  Lets wait for the god decision!

  Tharun

 6. manithan

  வந்த நல்லது ,அடுத்த மாசம் முடிவில் தெரியும் ,இல்லன்னா படம் நடிப்பார் ,எப்படியும் தலைவர் நம்மோடுதான்.

 7. gopi

  தலைவர் படத்துக்காக அரசியல் பேசுறதா நிறைய பேர் சொல்றாங்க. ஒண்ணு புரிஞ்சுக்குங்க சூட்டிங் சமயத்துல தான் தலைவர் அதிகமா வெளியே வர்ரார் அப்ப மீடியா இதே கேள்வியை தான் திரும்ப திரும்ப கேட்குறாங்க அதனால தான் அவர் அதை பத்தி பேசவேண்டிய சூழ்நிலை. ஒரு தடவை அரசியலுக்கு வருவேன்னும் இன்னொரு தடவை வரமாட்டேன்னு மாத்தி மாத்தி எங்கேயும் பேசலை. அவர் சொல்றது சூழ்நிலை அமையணும் என்பதுதான். காரணம் இப்ப இலவசங்களுக்காக ஓட்டு போடுற மக்கள் தான் அதிகம் இலவசம் தலைவருக்கு பிடிக்காது அதை வள்ளிலேயே சொல்லிட்டார். எல்லா கட்சிகளும் இலவசங்களை சொல்லும் போது எத்தனை மக்கள் தலைவருக்காக ஓட்டு பொடுவாங்க.

 8. gopi

  விஜய் டிவில சிறந்த நடிகர் நடிகை ஓட்டு மூலமா தேர்வு செய்கிற மாதிரி ஒவ்வொரு ரசிகர் மன்றத்தில் இருக்கும் ரசிகர்கள் அவங்க வீடு இருக்கும் தெருவில் நோட்டீஸ் பிரிண்ட் செய்து அதில் போன எலக்‌ஷன்ல பொட்டியிட்ட வேட்பாள்ர்கள் பெயரை எழுதி அதனுடன் தலைவர் பெயரையும் எழுதி ஓட்டு போட சொல்லுங்க எத்தனை பேர் ஓட்டு போடுறாஙன்னு பார்ப்போம் தெருவுக்கு நாலு வீட்டுக்கு போகாம எல்லா வீட்டுலயும் கேட்போம் இது ஒரு கருத்து கணிப்பாகவே இருக்கட்டும் மக்கள் மாறினால் அதை தலைவரின் பார்வைக்கு கொண்டு செல்வோம்

 9. Aryan

  3 மில்லியன் ஹிட் அடிச்ச ட்ரைலர யாரு remove பண்ணுனா?

 10. dhurapsha

  35 வருசமா ஏங்கி கிடந்த எங்கள் மனக்குமுறலை .எங்கள் தலைவர் முன்னே போட்டு உடைத்த டைரக்டர் அமீர் அவர்களுக்கு எங்களின் கோடான கோடி நன்றி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *