BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினி – ரஞ்சித் படம்.. கசியும் புதுப்புது தகவல்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினி – ரஞ்சித் படம்.. கசியும் புதுப்புது தகவல்கள்!

thalaivar-new

சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ரஞ்சித் இயக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன்னரே, பல்வேறு தகவல்கள் கிட்டத்தட்ட உறுதியான தொனியில் வெளியாக ஆரம்பித்துள்ளன.

இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் சில நாட்களுக்கு தள்ளிப்போட்டுள்ள ரஜினியும் தாணுவும், பட வேலைகளில் பரபரப்பாக இறங்கிவிட்டனர்.

படத்துக்கு இசை ரஞ்சித்தின் முந்தைய இரு படங்களுக்கும் இசையமைத்த சந்தோஷ் நாராயணன் என்று சிலர் தொடர்ந்து கூறிவரும் நிலையில், இளையராஜா இசையமைக்கக் கூடும் என்று சிலர் உறுதியாகக் கூறுகின்றனர்.

தாணுவுக்கும் இளையராஜாவுக்கும் உள்ள நெருக்கத்தை வைத்து இதைக் கூறுவதாகவும் சிலர் சொல்கின்றனர்.

இந்தப் படத்தில் ரஜினி ஒரு டான் வேடத்தில் நடிப்பதாகவும், இன்னொரு வேடமும் அவருக்கு உள்ளதாகவும், ஆனால் அதை சஸ்பென்ஸாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் படத்தில் அவர் நாயகியுடன் டூயட் பாடுவது போன்ற காட்சிகளே இல்லையாம். சர்க்கார் படத்தில் அமிதாப் வருவது போன்ற ஒரு அழுத்தமான தாதா வேடமாம்.

தனி அலுவலகம் போட்டு, திரைக்கதை மற்றும் காட்சிகளை மெருகேற்றிக் கொண்டிருக்கிறாராம் ரஞ்சித். இந்த அலுவலகத்தின் மாத வாடகை மட்டும் ரூ 3.5 லட்சம் என்கிறார்கள்.

இன்னொரு பக்கம் ஷங்கரும் தனது படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகளைத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

-என்வழி




6 thoughts on “சூப்பர் ஸ்டார் ரஜினி – ரஞ்சித் படம்.. கசியும் புதுப்புது தகவல்கள்!

  1. ram

    Santhosh Narayanan is best choice for this movie. Ilayaraja not required for Rajini movie. He can’t recreate old magic now. So best choice is Santhosh Narayanan.

  2. குமரன்

    இன்னொரு வேடம் அலெக்ஸ் பாண்டியன் போல ஒரு போலீஸ் அதிகாரியாகப் பார்க்க ஆசை!

  3. RADHA RAVI

    லிங்கா படம் கூட ரசிகர்கள் பொது மக்கள் என அனைவரையும் கவர்ந்த படம் தான். சந்தேகம் இல்லை. ஆனால் சில சுய நலவியாதிகள் லிங்கா படத்தை ஓட விடாமல் செய்து விட்டனர். படத்தில் ஒரு ஆபாசம், வன்முறை இரட்டை அர்த்த வசனங்கள் ம் குத்து பாட்டு என எதுவுமே லிங்கா படத்தில் கிடையாது. இப்போதும் பாக்ஸ் ஆபீஸ் COLLECTION ரிப்போர்ட்-படி லிங்கா படம் தான் வெளியிட்ட அனைத்து இடங்களிலும் முன்னணியில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *