BREAKING NEWS
Search

லிங்கா.. இது ச்சும்மா ட்ரைலர்தாம்மா!

லிங்கா.. இது ச்சும்மா ட்ரைலர்தாம்மா!

IMG_8910

டையப்பாவில் தலைவர் ரஜினி பேசும் வசனம்… ‘இது ச்சும்மா ட்ரைலர்தாம்மா.. இன்னும் மெயின் பிக்சர் பாக்கலியே..!’ என்பார்.

அப்படித்தான் இருக்கிறது லிங்காவின் முதல் ட்ரைலர். டீசர் பார்த்தே மிரண்டு போன தமிழ் சினிமாவுக்கு, அதைவிட நூறுமடங்கு அதிரடியாக 2 நிமிட ட்ரைலர் வெளியிட்டுள்ளனர்.

காட்சிகள் ஒவ்வொன்றும் அத்தனை வண்ணமயமாகவும், அதிரடியாகவும் வந்துள்ளன. ட்ரைலர் பார்த்து முடித்தபிறகு அதைப் பாராட்டிச் சொல்ல புதிய வார்த்தைகளை தமிழில் தேட வேண்டியிருந்தது. அத்தனை சிறப்பாக ட்ரைலர் உருவாக்கியிருந்தனர்.

IMG_8913

‘இதுதான் உங்களோட வாழ்க்கை… இதுதான் உங்க புள்ளைங்களுடைய முன்னேற்றம்…. இதுதான் உங்க தொழில், பொழைப்பு, சோறு, உழைப்பு, இடம், உடை, சந்தோசம் எல்லாம்…’ என்று ரஜினியின் குரலில் ட்ரைலர் ஆரம்பிக்கும்போதே அத்தனை ஈர்ப்பு, கம்பீரம்.

‘நான் எந்த வேலையா இருந்தாலும் என் மனசுக்கு புடிச்சாதான் செய்வேன்.’

IMG_8914

‘வாழ்க்கையில எதுவும் ஈஸியில்ல… முயற்சி பண்ணா எதுவும் கஷ்டம் இல்லை…. கமான் பாய்ஸ்’

வெள்ளையர்: ‘நீ அதிகமா பேசறே…’

ரஜினி: ‘பொறந்த நாட்டுக்கு கொஞ்சமாவது நல்லது செய்யணும்னு அதிகமா பேசறேன்.’

-இப்படி ட்ரைலரில் இடம்பெறும் வசனங்கள் திரையரங்கை அதிர வைக்கப் போவதை இப்போதே உணர முடிகிறது.

இதே ட்ரைலர்…

-என்வழி ஸ்பெஷல்




One thought on “லிங்கா.. இது ச்சும்மா ட்ரைலர்தாம்மா!

  1. Rajagopalan

    Trailer Marana Mass…
    But Songs i feel dissapointment… That too the opening song….its not so good….Why ARRAhman has done like this?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *