BREAKING NEWS
Search

கபாலி படப்பிடிப்பில் மீண்டும் சூப்பர் ஸ்டார்… இளம் வயது தோற்றத்தில் நடிக்கிறார்!

கபாலி ஷூட்டிங்கில் மீண்டும் சூப்பர் ஸ்டார்!

CPB6R7tUYAESAwR.jpg large

தாடியை எடுத்துவிட்டு, இளம் வயது கபாலி வேடத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ரஞ்சித் இயக்கத்தில் ‘கபாலி’ படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது. ரசிகர்களின் அமோக வரவேற்புக்கு இடையே ரஞ்சித் இந்த படத்துக்கான காட்சிகளை படமாக்கினார்.

ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கு படப்பிடிப்பு நடந்தது. ரஜினி வயதான தாதாவாக வெள்ளை தாடியுடன் இதில் நடித்தார். ரஜினி மற்றும் அவரது மகளாக நடிக்கும் தன்ஷிகா தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. ரஜினி தொடர்பான பெரும்பாலான காட்சிகள் மலேசியாவின் முக்கிய பகுதிகளில் படமாக்கப்பட்டன.

young kabaliஅடுத்து, கோவாவில் கபாலி படப்பிடிப்பு நடந்தது. இதில் ரஜினி அவரது ஜோடியாக நடிக்கும் ராதிகா ஆப்தே ஆகியோர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன.

இதற்கிடையே ரஜினி அமெரிக்கா சென்றார். எந்திரன் 2–ம் பாகமாக ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘2.0’ படத்துக்கான தனது மேக்கப், தோற்ற அமைப்பு போன்றவற்றை அமைப்பது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டார்.

அதன் பிறகு சென்னை வந்த ரஜினி ‘2.0’ பட தொடக்க விழாவில் பங்கேற்றார். எமி ஜாக்சன், இந்தி நடிகர் அக்ஷய்குமார், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

‘2.0’ படப்பிடிப்பில் இளமை தோற்றத்தில் ரஜினி நடித்தார். எமி ஜாக்சன் உள்பட பல நடிகர்கள் பங்கேற்ற காட்சிகள் பலத்த பாதுகாப்புடன் சென்னை அம்பத்தூரில் செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. ஷங்கரின் இயக்கத்தில் சில தினங்கள் படப்பிடிப்பு நடந்தது. ரஜினி இடம் பெறாத மற்ற காட்சிகள் இப்போது படமாக்கப்பட உள்ளன.

இந்த இடைவெளியில் ‘கபாலி’ படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொள்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அடுத்து மலேசியா, கோவாவில் படமானது. இப்போது எஞ்சிய காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இதில் இளம் ரஜினி வேடத்தில் ரஜினி நடிக்கிறார். அது தொடர்பான காட்சிகள் படமாகும் என்று கூறப்படுகிறது.

விரைவில் ‘கபாலி’ படப்பிடிப்பு நிறைவு பெறும் என்று தெரிகிறது. கோடை விடுமுறையில் ‘கபாலி’ திரைக்கு வரவிருக்கிறது.

என்வழி




5 thoughts on “கபாலி படப்பிடிப்பில் மீண்டும் சூப்பர் ஸ்டார்… இளம் வயது தோற்றத்தில் நடிக்கிறார்!

  1. srikanth1974

    அது என்ன ரஜினி இளம் வேடத்தில்?
    நம் தலைவர் என்றுமே இளைஞன் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *