BREAKING NEWS
Search

சென்னை திரும்பினார் சூப்பர் ஸ்டார் ரஜினி!

சென்னை திரும்பினார் சூப்பர் ஸ்டார்!

11261590_894966670588091_4281103110683683165_n

சென்னை: கோவாவில் கபாலி படப்பிடிப்பை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்பினார் சூப்பர்ஸ்டார் ரஜினி.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த்  நடித்த எந்திரன் படம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவான முதல் தமிழ் படம் என்ற பெருமையைப் பெற்றது. இதனை அடுத்து எந்திரன் 2-ம் பாகத்தில் மீண்டும் ரஜினி – ஷங்கர் இணைகின்றனர்.

அதற்குள் அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படத்தில் ரஜினிகாந்த் நடிக்க ஒப்பந்தம் ஆனார். விநாயகர் சதுர்த்தி அன்று சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியது. பின்னர் மலேசியா, தாய்லாந்தில் ஒரு மாதம் ஷுட்டிங் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோவாவில் படப்பிடிப்பு நடைபெற்றது. அங்கிருந்து படக்குழு திருவனந்தபுரம் சென்றது.

சென்னை திரும்பும்போது விமானத்தில் ரசிகருடன் செல்பி எடுத்துக் கொண்ட சூப்பர் ஸ்டார்!

சென்னை திரும்பும்போது விமானத்தில் ரசிகருடன் செல்பி எடுத்துக் கொண்ட சூப்பர் ஸ்டார்!

இந்நிலையில் எந்திரன்-2 படம் நாளை முறைப்படி தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான ஆலோசனையில் பங்கேற்கவே ரஜினி இன்று சென்னை திரும்பியதாகக் கூறப்படுகிறது.

விமான நிலையத்தில் ரஜினியின் நண்பர்கள், ரசிகர்கள் அவரை வரவேற்றனர். அங்கிருந்து காரில் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

-என்வழி




2 thoughts on “சென்னை திரும்பினார் சூப்பர் ஸ்டார் ரஜினி!

  1. Rajagopalan

    Previous UI was better Mr Shankar. We can see our comments also in the right side. Now we have to open & check …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *