BREAKING NEWS
Search

நான் சிகப்பு மனிதன் இசை – வெளியிட்டார் சூப்பர் ஸ்டார்

நான் சிகப்பு மனிதன் இசை – வெளியிட்டார் சூப்பர் ஸ்டார்

IMG_2342

சென்னை: விஷால் நடித்துள்ள நான் சிகப்பு மனிதன் புதிய படத்தின் இசைத் தட்டை இன்று தனது இல்லத்தில் வைத்து வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தலைவர் ரஜினி நடித்து 1985-ல் வெளியான படம் நான் சிகப்பு மனிதன். இந்தத் தலைப்பை விஷால் தன் படத்துக்கு தலைவரின் அனுமதியோடு பயன்படுத்திக் கொண்டார்.

படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் அரங்கில் நடந்தது. அதற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வீட்டுக்குப் போய் அவர் கையால் இசைத் தட்டை வெளியிட வைத்தனர்.

IMG_2352
விஷால், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், இயக்குநர் திரு உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முன்னதாக படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல் காட்சிகளை ரஜினிக்கு அவர் வீட்டிலேயே போட்டுக் காட்டினர்.

ட்ரைலரைப் பாராட்டிய ரஜினி, தூக்கத்தில் நடக்கும் வியாதியான  Narcolepsy பிரச்சினையை மையப்படுத்தி படம் எடுத்திருப்பது வித்தியாசமான முயற்சி என்றும், புதிய விஷயங்களை ஆதரிப்பதில் நடிகர் விஷால் காட்டும் அக்கறைக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கும் என்றும் வாழ்த்தினார்.

IMG_2360

ஜிவி பிரகாஷின் இசை, இதயம் உன்னைத் தேடுதே.. பாடல் படமாக்கப்பட்ட விதம், அதில் லட்சுமி மேனனின் நடிப்பு ஆகியவற்றையும் பாராட்டத் தவறவில்லை.

என்வழி ஸ்பெஷல்




3 thoughts on “நான் சிகப்பு மனிதன் இசை – வெளியிட்டார் சூப்பர் ஸ்டார்

  1. sivashanmugam

    புதிய விஷயத்தை பாராட்டுதலை தலைவர் போல் பாராட்ட முடியாது

  2. மிஸ்டர் பாவலன்

    சாயம் போன ஜீன்ஸ் பாண்ட் பாக்கறதுக்கு அசிங்கமா இருக்கு!
    நல்லா சம்பாதிக்கறாங்க.. நல்ல பாண்ட் போடறதுக்கு என்ன?
    உலக நாயகன், சூப்பர் ஸ்டார் எப்படி டிரஸ் பண்றாங்கன்னு பாருங்க!

    கோச்சடையான் பாடல் வெளியீட்டு விழாவிற்கு ‘உத்தம வில்லன்’
    படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் கமல் கலந்து கொள்ள முடியவில்லை
    என்று தகவல் அளித்த படத்தின் இயக்குனர் – சௌந்தர்யா அவர்களுக்கு,
    கமல் ரசிகர்கள் சார்பாக நமது நன்றி. புதுமையான முயற்சிகளை
    வரவேற்கும் கமல் ரசிகர்கள் ஆதரவு இந்த ‘கோச்சடையான்’ படத்திற்கு
    நிச்சயம் உண்டு. நானும் படம் பார்க்க ஆவலாக உள்ளேன்.

    நன்றி!

    உங்கள் பாவலன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *