BREAKING NEWS
Search

முதல்வன் பண்ணாததுகூட வருத்தம் இல்ல… ‘இந்திய’னைத்தான் மிஸ் பண்ணிட்டேன்! – சூப்பர் ஸ்டார்

முதல்வன் பண்ணாததுகூட  வருத்தம் இல்ல… ‘இந்திய’னைத்தான் மிஸ் பண்ணிட்டேன்! – சூப்பர் ஸ்டார்

ந்தியன் படம் கமலுக்காகவே உருவாக்கப்பட்டது என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையாம் இந்தியன். இதை முதல் முறையாக இப்போதுதான் வெளியில் கூறியுள்ளார் ஷங்கர்.

அதுமட்டுமல்ல, எந்திரன் படம், கமலை வைத்து ரோபோவாக எடுக்க ஆரம்ப முயற்சிகள் மேற்கொண்ட போது, எடுத்த சில அரிய புகைப்படங்களையும் ஷங்கர் வெளியிட்டுள்ளார்.

விகடனில் அவர் இதுகுறித்து எழுதியுள்ளதாவது:

” ‘இந்தியன்’ கதையை முதன்முதலில் ரஜினி சாருக்குத்தான் சொன்னேன் என்பது பலருக்குத் தெரியாது. கதை, திரைக்கதை, முழுமை அடையாத ஆரம்பக் கட்ட நிலையில் சொன்னதால் அதைச் செய்வதில் ரஜினி சாருக்குத் தயக்கம் இருந்தது. ‘இந்தியன்’ படம் முடிந்து, அவருக்குப் போட்டுக் காட்டினேன். படம் முடிந்ததும் ஓடி வந்து என்னை இறுக்கிக் கட்டியணைத்து, ‘சூப்பர்… சூப்பர்…’ எனத் தட்டிக்கொடுத்து, ‘இப்படி எனக்கு நீங்க சொல்லவே இல்லியே’ என்று ஆச்சர்யப்பட்டார்.

நீங்கள் உற்றுப்பார்த்தீர்களானால் ‘இந்தியன்’ தாத்தா, இன்டர்வெல் காட்சியில் உட்கார்ந்தபடியே ஈஸி சேர் பலகையால் நெடுமுடி வேணுவைத் தட்டிவிடுவார்.

வர்மக் கலையில் அவரை வீழ்த்திக் கீழே கிடக்கிற துண்டை எடுத்து ஸ்டைலாகத் தோளில் போடுவார். பிறகு, எழுந்து கலைந்த முடியை ஸ்டைலாகக் கோதி சரி செய்வார். இது ரஜினி சாரை மனதில்வைத்து நான் உருவாக்கிய காட்சி என்பது கமல் சாருக்குத் தெரியாது. அதை முற்றிலும் அவரது ஸ்டைலில் வேறுவிதமாகச் செய்து அசத்தி இருப்பார்.

ரஜினி சார் இப்போதுகூட, ‘நான் முதல்வன் பண்ணாததுகூட எனக்கு வருத்தம் இல்ல… ‘இந்திய’னைத்தான் மிஸ் பண்ணிட்டேன்!’ என்று சொல்வார் (ரஜினியை வைத்து ‘இந்தியன் -2’ என நீங்கள் சொன்னதன் பின்னணி இதானா!).

ரோபோ கமல்…


‘ரோபோ’ முதலில் கமல் சாரை வைத்து எடுப்பதாக இருந்தது அனைவருக்கும் தெரியும். அதன் முதல்கட்டமாக மும்பையில் கமல் சார், ப்ரீத்தி ஜிந்தா கலந்துகொண்ட போட்டோ ஷூட் நடந்தது பலருக்குத் தெரியாது.

கமல் சாரை விஞ்ஞானியாக, ரோபோவாக, வில்லன் ரோபோவாக எல்லாம் போட்டோஸ் எடுத்தோம். அப்போது, வில்லன் ரோபோ பாடல் காட்சியில் ஹிட்லர் போல், இடி அமீன்போல் வருகிற மாதிரியாகக் கற்பனை செய்துவைத்திருந்தேன்.

ஒவ்வொரு கெட்-அப்பிலும் கமல் சார் கொடுத்த போஸ்களையும் எக்ஸ்பிரஷன்களையும் பார்த்து ப்ரீத்தி ஜிந்தா, மும்பை டெக்னீஷி யன்கள் எல்லோரும் மிரண்டுபோனார்கள். அதன் பிறகு, கமல் சார் கொடுத்த தேதிகளை ‘நாயக்’ படத்தினால் என்னால் பயன் படுத்திக்கொள்ள முடியவில்லை.

நான் ‘நாயக்’ முடித்து வந்தபோது, அவர் வேறு ஒரு படத்தில் பிஸி ஆகிவிட்டார். அந்தப் படம் எடுக்க முடியாமல் போனது. ஆனால், அவரைவைத்து எடுத்த இந்தப் படங்களைப் பார்க்கும்போதும், அவர் ரோபோ பேசுவதுபோல் பதிவு செய்திருந்த,

‘ஹாய்… நான் ஒரு ரோபோ… மனித உருவம்கொண்ட இயந்திரம்…

ஸ்பீட் ஒன் கிகா ஹெர்ட்ஸ்… மெமரி ஒன் டெரா பைட்…

ஜாக்சனைப் போல் ஆடவும் தெரியும்… ஜாக்கிசானைப் போல் மோதவும் தெரியும்.

நான் கற்றது கடலளவு… கல்லாதது- மனிதனின் பொய், பொறாமை, வஞ்சகம், துரோகம்…

என்னைச் சரியாகப் பயன்படுத்தினால் நண்பன்… தவறாகப் பயன்படுத்தினால்..? ஹா… ஹா… ஹா… (வில்லன் சிரிப்பு)’

– அவருடைய கம்பீரக் குரலைக் கேட்கும் போதும் மெய்சிலிர்க்கிறது!”

ரோபோ கமல் படங்கள் – விகடன்
5 thoughts on “முதல்வன் பண்ணாததுகூட வருத்தம் இல்ல… ‘இந்திய’னைத்தான் மிஸ் பண்ணிட்டேன்! – சூப்பர் ஸ்டார்

 1. குமரன்

  இந்தியனில் ரஜினியும் என்திரனில் கமழும் என்பது பற்றிய விவரங்களை இதுநாள் வரை வெளியிடாத கமல், ரஜினி ஆகியோரின் பண்பு போற்றத்தக்கது. வாய்ப்புகள் நழுவியும் கூட அதனை சாதாரணமாக அணுகும் உயர் பண்பினாலேயே இருவரும் பெரும் சாதனைகளைச் செய்ய முடிந்திருக்கிறது.

  ஆனால், என்திரனாக முதலில் உணர்வற்ற முகபாவம், பின்னர் அந்த “wily smile” வில்லத் தனமான சிரிப்பு, அதனை வேறு யார் செய்தாலும் ஊஹூம்…. who can match that “who is the black sheep” ….. எல்லா இந்திரனையும் நிற்க வைத்து நடத்தும் அந்த அணிவகுப்புச் சோதனை, unparalelled.

 2. unmai

  I felt Indian is the best Shankar movie so far. Bit unfortunate thalaivar missed that movie. Hope Indian 2 materialize with thalaivar and will be better than Indian.

 3. Manoharan

  எந்திரனில் கமல் நடித்திருந்தால் எடுபட்டிருக்காது என்பதற்கு இந்த புகைப்படங்களே சாட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *