BREAKING NEWS
Search

ரஜினிக்காக ரஞ்சித் அமைத்திருக்கும் அரசியல் களம்!

ரஜினிக்காக ரஞ்சித் அமைத்திருக்கும் அரசியல் களம்!

11112583_1631815377054980_2213571402223968139_n

ட்டகத்தி, மெட்ராஸ் இரண்டிலுமே ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும் அரசியலையும் மிக அற்புதமாகச் சொன்ன ரஞ்சித், ரஜினிக்காக அமைத்திருக்கும் கதையும் அரசியல் சார்ந்ததுதானாம்.

இந்தப் படத்துக்கு ரஜினி முதலில் ஒதுக்கியது 30 நாட்கள்தானாம். பின்னர் தாணு கேட்டுக் கொண்டதால் 45 நாட்கள் ஒதுக்கித் தந்திருக்கிறார்.

மொத்தம் 90 நாட்களில் படத்தை முடித்துவிடத் திட்டம். ரஜினி உள்ள காட்சிகளை 45 நாட்களும், ரஜினி இல்லாத காட்சிகளை மீதி 45 நாட்களும் எடுக்கத் திட்டம்.

தனது சினிமா உலகப் பயணத்தில் ஆரம்பத்திலிருந்தே நட்பாகத் திகழும் தாணுவுக்கு, தாம் செய்யும் உதவியாக இந்தப் பட வாய்ப்பைத் தந்திருக்கிறார் ரஜினி.

இன்றைக்கு சினிமா இளைஞர்கள் கைகளில் வேறு பரிமாணத்துக்குப் போய்விட்டது. அதை உணர்ந்து, அவர்களுடன் பயணிக்கவே, கார்த்திக் சுப்பராஜ், ரஞ்சித் போன்றவர்களிடம் கதை கேட்க ஆரம்பித்திருக்கிறார் ரஜினி.

ரஞ்சித்தை ரஜினியிடம் அழைத்துச் சென்றதே சவுந்தர்யா ரஜினிதானாம்.

இந்தப் படம் விறுவிறுப்பான அரசியல் – ஆக்ஷன் படமாக இருக்கும் என்கிறார்கள். படத்தில் அநேகமாக ரஜினிக்கு ஜோடி இருக்காது என்றும் கூறப்படுகிறது.

பொதுவாகவே அரசியல் படங்களில் நடிப்பதைத் தவிர்ப்பவர் ரஜினி. முதல்வன், ஐயா போன்றவரை அவர் கடைசி நேரத்தில் தவிர்த்த படங்கள்.

அப்படிப்பட்ட ரஜினி, இப்போது தேர்தல் நெருங்கும் சூழலில் அரசியல் களத்தை பின்னணியாகக் கொண்ட கதையில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-என்வழி
13 thoughts on “ரஜினிக்காக ரஞ்சித் அமைத்திருக்கும் அரசியல் களம்!

 1. karthik

  It is a very good news. Best thing is Rajini Sir, handpicking a young director who has fresher ideas.
  I hope and pray to The Almighty this movie should be a super Hit.

 2. endhiraa

  fantastic news !! தலைவா சீக்கிரம் வாங்க !! ஆல் தி பெஸ்ட் ரஞ்சித் !!!

 3. srikanth1974

  காலமும்,நேரமும்,கடவுள் அருளோடு கூடிவரும்போது
  தலைவர் நிச்சயம் களம் இறங்குவார்.

 4. GANESAN

  தலைவரின் படம் வருகை தான் எங்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம்.
  கடவுளை கண்டவரும் இல்லை சூப்பர் ஸ்டாரை வென்றவரும் இல்லை.

 5. anbudan ravi

  எல்லையில்லா மகிழ்ச்சி தலைவா…..அனல் கக்கபோவது உறுதி. விரைவில் உறுதியான தகவல்களை எதிர்பார்க்கிறோம்.

  அன்புடன் ரவி.

 6. raghul

  தலைவா .
  இளம் இயக்குனருடன் சேர்ந்ததுக்கு வாழ்த்துக்கள் ….
  மதிப்பிற்குரிய நண்பர் தானுவுடன் இணைந்ததற்கு நன்றி. என்னுடைய முன்னொரு பதிவில் வேண்டியிருந்தேன் இதை.
  நன்றி தலைவா..
  நமக்கு வேண்டியது தலைவரின் புது தரிசனம். புது இயக்குனரால் இது நடக்கும் எனும் நம்பிக்கையும் உண்டு.
  மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மகிழ்ச்சி ….

 7. kumaran

  தலைவர் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கை இல்லை

 8. மிஸ்டர் பாவலன்

  படம் ஓடுமா??!

  -== மிஸ்டர் பாவலன் ==

 9. குமரன்

  இதில் போட்டிருக்கும் படம் அருமை, எதேச்சையாக இந்தக் கட்டுரைக்குப் போட்டாலும் பொருத்தம், ஏனெனில் தலைவர் தலை மீதிருக்கும் அலங்கார விளக்கு அவருக்குச் சூட்டிய பூமகுடம் போல இருக்கிறது!

 10. jegan N

  Mr pavalan sir neenga kamal padam oduma nu mattum kavalapadunga…..thalaivar padam oduma odatha nu nanga pathukrom

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *