BREAKING NEWS
Search

துப்புரவுப் பணியாளர்கள் தங்க ராகவேந்திரா மண்டபத்தை இலவசமாகத் தந்த சூப்பர் ஸ்டார் ரஜினி!

துப்புரவுப் பணியாளர்கள் தங்க ராகவேந்திரா மண்டபத்தை இலவசமாகத் தந்த சூப்பர் ஸ்டார் ரஜினி!

mandapam-1

சென்னையைச் சுத்தம் செய்ய வந்த 1000 துப்புரவுத் தொழிலாளர்கள் தங்க தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை இலவசமாகத் தந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

வெள்ளம் பாதித்த சென்னை மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை ரஜினிகாந்த் செய்து வருகிறார்.

மழை வெள்ளம் பெருக்கெடுத்தோடிய நாட்களில் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான மக்களை ராகவேந்திரா மண்டபத்தில் தங்க வைத்து உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தார் ரஜினி. தொடர்ந்து நான்கு தினங்கள் அவர்கள் மண்டபத்தில் தங்கினர்.

mandapam-3

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்ட மக்களுக்கு ரஜினிகாந்த் ரூ 5 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்களை தனது ரசிகர் மன்றங்கள் மூலம் வழங்கினார். கடந்த ஞாயிற்றுக் கிழமை வரை இந்தப் பொருள்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.

அடுத்து இப்போது மீண்டும் ராகவேந்திரா மண்டபத்தை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக இலவசமாகத் தந்துள்ளார் ரஜினி. மழை வெள்ளத்தில் சென்னை மாநகரமே குப்பைக் கிடங்காக மாறிப் போயுள்ளது. இதைச் சுத்தம் செய்ய வெளியூர்களிலிருந்து ஏராளமான துப்புரவுப் பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

IMG-20151214-WA0105

நேற்று தர்மபுரி, சேலம், நாமக்கல், ஒசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களிலிருந்து சென்னை வந்த ஆயிரம் துப்புரவுத் தொழிலாளர்கள் தங்க இடமின்றி அவதிப்பட்டனர். தகவல் அறிந்ததும், அவர்கள் அனைவரையும் தனது ராகவேந்திரா மண்டபத்தில் தங்கிக் கொள்ளுமாறு கூறினார் ரஜினி.

இதைத் தொடர்ந்து மண்டபம் அவர்களுக்குத் திறந்துவிடப்பட்டது. சென்னையில் துப்புரவுப் பணி முடியும் வரையில் அனைவரும் ராகவேந்திரா மண்டபத்திலேயே தங்கிக் கொள்ளலாம் என்றும், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருமாறும் ராகவேந்திரா மண்டப நிர்வாகிகளுக்கு ரஜினி உத்தரவிட்டுள்ளார்.

-என்வழி




5 thoughts on “துப்புரவுப் பணியாளர்கள் தங்க ராகவேந்திரா மண்டபத்தை இலவசமாகத் தந்த சூப்பர் ஸ்டார் ரஜினி!

  1. anbudan ravi

    வரிந்துகட்டிக்கொண்டு தலைவரை விமர்சித்த சில பெரிய பத்திரிக்கைகளும் ஊடகங்களும் சப்தமே இல்லாமல் இதுபோன்ற பெரிய உதவிகளை செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்தும் அதை ஏன் செய்தியாக வெளியிடுவதில்லை….அவரின் பெயரை கெடுக்கவேண்டும் என்கிற ஒரே காரணமா? அல்லது விளம்பரத்திற்கும் வியாபாரத்திர்க்குமா?

    அன்புடன் ரவி.

  2. anbudan ravi

    வரிந்துகட்டிக்கொண்டு தலைவரை விமர்சித்த சில பெரிய பத்திரிக்கைகளும் ஊடகங்களும் சப்தமே இல்லாமல் இதுபோன்ற பெரிய உதவிகளை செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்தும் அதை ஏன் செய்தியாக வெளியிடுவதில்லை….அவரின் பெயரை கெடுக்கவேண்டும் என்கிற ஒரே காரணமா? அல்லது விளம்பரத்திற்கும் வியாபாரத்திர்க்குமா?

    அன்புடன் ரவி.

  3. நேதாஜி

    மனித நேய மிக்க சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் செயல் பாராட்டத்தக்கது.

  4. நேதாஜி

    மனித நேய மிக்க சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் செயல் பாராட்டத்தக்கது.

  5. Murali

    தலைவரின் மழை வெள்ள நிவாரணத்தை பற்றிய தங்களின் பதிவை எதிர்பார்க்கிறேன்.
    இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரிய கூடாது என்று எண்ணும் நம் தலைவரை போல் உங்களுக்கும் எழுத விருப்பமில்லை என்றாலும் பரவாயில்லை.

    ஆனால் சமீப காலமாக தங்களின் இணையதளத்தின் முகப்புப்பக்கம் மிக வித்தியாசமாக உள்ளது . இதற்கு முன்பு உங்கள் தளம் பிரத்யேக தலைவர் தளமாக இருந்ததை போலவும், ஆனால் தற்பொழுது அதை விடுத்து சற்று விலகி இருப்பது போலவும் என் மனதிற்கு தோன்றுகிறது. இது என்னுடைய மனத்தோன்றல் அவ்வளவே…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *