BREAKING NEWS
Search

‘நம்ம தலைவர் ரஜினி சார் பாராட்டினார்’! – ஏ ஆர் முருகதாஸ்

துப்பாக்கி படத்தை இருமுறை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி!

ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படத்தை இரு முறை பார்த்ததாகக் கூறி, பாராட்டு தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தீபாவளிக்கு வெளியான படங்களில் துப்பாக்கிக்கு அனைத்துத் தரப்பிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இஸ்லாமி சமூகத்தினர் மட்டும் இந்தப் படத்தைப் புறக்கணித்துவிட்டனர்.

தீபாவளியன்று இந்தப் படத்தைப பார்த்துள்ளார் ரஜினி. படம் ரொம்பவே பிடித்துப் போனதால் மீண்டும் ஒரு முறை பார்த்தாராம்.

பின்னர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸுக்கு போன் செய்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முருகதாஸ் தனது ட்விட்டரில், “எனக்கு நம்ம தலைவர் ரஜினி சார் போன் செய்து பேசினார். உங்களுடைய ‘துப்பாக்கி’ படத்தை 2 தடவை பார்த்தேன். படம் பிரமாதமாக உள்ளது. அருமையான படம். மகிழ்ச்சியாக இருந்தது என்றார்,” என குறிப்பிட்டுள்ளார்.

-என்வழி




10 thoughts on “‘நம்ம தலைவர் ரஜினி சார் பாராட்டினார்’! – ஏ ஆர் முருகதாஸ்

  1. குமரன்

    அப்போ …

    துப்பாக்கி விஜய்யின்

    நற்பாக்கியம்!

  2. srikanth

    உம்முடைய உயர்ந்தப் பண்புக்கும்.பெருந்தன்மைக்கும் .ஈடு இணையே கிடையாது .தலைவா நான் உங்கள் ரசிகன் என்று சொல்லிக் கொள்வதில் ,பெருமையடைகிறேன்.

  3. enkaruthu

    //“எனக்கு நம்ம தலைவர் ரஜினி சார் போன் செய்து பேசினார். உங்களுடைய ‘துப்பாக்கி’ படத்தை 2 தடவை பார்த்தேன். படம் பிரமாதமாக உள்ளது. அருமையான படம். மகிழ்ச்சியாக இருந்தது என்றார்,//

    இதை சொல்ல அதுவும் இந்த பஞ்ச் டயலாக் பேசி மற்றவரை எரிச்சல் ஆக்கும் விஜய் அவர்கள் ரஜினி ரசிகர் முருகதாசிடம் அவர் சொன்னதற்கேற்ப நடித்ததால்தான் இந்த பெருமை.உண்மையாலுமே பல நண்பர்கள் துப்பாக்கி முருகதாஸ் உழைப்பினாலும் விஜய் அவர்கள் வசனம் பேசி கொள்ளாமலும் படம் வந்ததால் படம் நல்லா இருக்கு என்று சொன்னார்கள். தலைவர் ரஜினி அவர்களே நீங்கள் என்ன தியானம் செய்கிறீர்கள் .

    நான் இரண்டு தடவை பார்த்தேன் படம் அருமையாக இருக்கு என்று சொல்வதற்கு அதுவும் நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று விஜய் அவர்கள் தனக்குத்தானே தம்பட்டம்(மக்கள் இதை comediyagathaan பார்த்தார்கள் என்பது நமக்கு தெரியும்) அடித்தபின்பும் தலைவர் ஒரு குழந்தையைபோல் இந்த படத்துக்கு promote பண்ணுகிறார் என்றால் எவ்வளவு பெரிய விஷயம்.

  4. chozan

    வினோ சார், உங்களின் விமர்சனத்திற்காக காத்திருக்கிறேன் ப்ளீஸ்.

  5. Ganesh

    Next ……
    இனிமேல் முருகதாஸ் , thalaivar கால்சீட் குடுத்துட்டார் koncha nalaikku மட்டும் பத்திரிக்கைக்க !

  6. அன்பு

    //நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று விஜய் அவர்கள் தனக்குத்தானே தம்பட்டம்(மக்கள் இதை comediyagathaan பார்த்தார்கள் என்பது நமக்கு தெரியும்) //

    இதை சொன்னது ரஜினியின் செல்ல பிள்ளை அஜித்துங்கோ! வரலாறு ரொம்ப முக்கியம் மக்களே!

  7. அன்பு

    kabilan says:

    //படம் நன்றாக இருந்தது வினோ அண்ணா//

    படம் நல்லா இருந்தா அதுக்கு இயக்குனர் காரணம். மொக்கையா இருந்தா, அது ‘விஜய் படம்’.

    இதுவே ‘பெரிய’ நடிகர்கள் படமா இருந்தா உல்டாவா சொல்லணும் கபிலன்.

  8. enkaruthu

    //இதை சொன்னது ரஜினியின் செல்ல பிள்ளை அஜித்துங்கோ! வரலாறு ரொம்ப முக்கியம் மக்களே!//

    தம்பி அன்பு நான்தான் அடுத்த superstar என்று தனக்குத்தானே(கௌண்டர் பாசையில் அவன் நல்லவன்னு அவனே சொன்னான்பா) போஸ்டர் அடித்தது யாரப்பா.ஒரு முப்பது வருசமா தோல்வி படங்களை விரல் விட்டு என்னும்வகையில் எங்கள் தலைவர் கொடுத்தும் அமைதியாக இருக்கிறார். மொக்கை படங்களுக்கு நடுவில் ஒரு சுமாரான படத்தை (அதற்கும் ஒரு ரஜினி ரசிகரின் இயக்குனர் முருகதாஸ் உங்களுக்கு தேவைப்பட்டது) சூப்பர் போல் தூக்கிவைத்து கொண்டாடுகிறீர்களே.இதைதான் எங்கள் ஊரில் பழைய சோறை தின்னுவிட்டு நெய்யில் கை கழுவும் அற்ப விளம்பர பிரிய ஜந்துதனம் இது என்று சொல்வார்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *