BREAKING NEWS
Search

ஷாரூக்கான் படத்துக்கு நெருக்கடி வேண்டாம்.. கோச்சடையானை ரிலீஸை தள்ளி வச்சிக்கலாம்! – ரஜினியின் பெருந்தன்மை

ஷாரூக்கான் படத்துக்கு நெருக்கடி வேண்டாம்.. கோச்சடையானை தள்ளி வச்சுக்கலாம்! – ரஜினியின் பெருந்தன்மை


டிப்பு, ஸ்டைல், வசூலில் மட்டுமல்ல… பெருந்தன்மையிலும் ரஜினிக்கு நிகர் அவர் ஒருவரே.

சினிமா உலகில் போட்டி ஒன்றுதான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. ஆனால் ரஜினி இந்த விஷயத்திலும் கூட அத்தனை பேருக்கும் உதாரணமாய் திகழ்கிறார்.

தீபாவளிக்கு கோச்சடையானை வெளியிடவிருப்பதாக பல நாட்களுக்கு முன்பே தயாரிப்பாளர்கள் அறிவித்துவிட்டது நினைவிருக்கலாம். சூப்பர் ஸ்டாரும் இதை உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் இப்போது சில தினங்கள் தள்ளி படத்தை ரிலீஸ் செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

காரணம்?

தீபாவளிக்கு ஷாரூக்கான் – கரீனா நடித்த ‘யே கஹான் ஆ காயே ஹம்’ படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். ஷாரூக்கான் பாலிவுட்டில் பெரிய நடிகராக இருந்தாலும், இப்போது ஒரே நேரத்தில் ரஜினி – ஷாரூக் படங்கள் வெளியானால் தியேட்டர் கிடைப்பது சிரமமாகிவிடும். மும்பை மற்றும் புறநகர்களில் மட்டும் எந்திரன் இந்திப் பதிப்பு 110 திரையரங்குகளுக்கு மேல் வெளியானது நினைவிருக்கலாம். தமிழ் மட்டும் 40 தியேட்டர்களில் வெளியானது அங்கு!

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் ரஜினி படம் என்பதால், 150க்கும் மேற்பட்ட அரங்குகள் – மால்களில் கோச்சடையானை வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

இதனால் ஷாரூக் படத்துக்கு தியேட்டர் கிடைப்பது சிரமம். மேலும் அதே தினத்தில் அஜய் தேவ்கன் நடித்த படமும் வெளியாகிறது. கோச்சடையானால் இந்தப் படங்களுக்கு மும்பையில் நெருக்கடி வேண்டாம் என்ற ரஜினி, ‘படத்தை சில தினங்கள் தள்ளி வெளியிடலாம். யாருக்கும் பாதிப்பு வேண்டாம்’ என்று கூறிவிட்டாராம்.

“திட்டமிட்டபடி கோச்சடையான் தீபாவளிக்கு வெளியாகியிருந்தால், தென்னிந்தியாவில் அந்தப் படத்தின் ஆதிக்கம்தான் இருந்திருக்கும். ரஜினி படத்துடன் மோதுவதைத் தவிர்க்கத்தான் கமல் கூட தன் பட வெளியீட்டை தள்ளிப்போட்டுவிட்டார். தென்னிந்தியாவில் இந்திப் படங்களின் முக்கிய சென்டர்களான பெங்களூர், ஹைராபாதில் கூட இந்திப் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது சிரமமாகி இருக்கும். நேரடி இந்திப் படம் என்பதால் மும்பையில் இந்த முறை கோச்சடையானுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஆனால் ரஜினி தன் படத்தை சில தினங்கள் கழித்து வெளியிடுவதாகச் சொன்னதன் மூலம், ஒரு நெருக்கடியான சூழலை தவிர்த்திருக்கிறார். அவர் எதைச் செய்தாலும் அதில் அர்த்தமிருக்கிறது..,” என்கிறார் பாலிவுட் விமர்சகர் தரன் ஆதர்ஷ்.

ரஜினி படம் தள்ளிப் போகிறது என்ற செய்தியால் பாலிவுட் விநியோகஸ்தர்களுக்கும் கொஞ்சம் ஏமாற்றம்தானாம்… இந்த தீபாவளிக்கு கோச்சடையானை பெரிய அளவில் வெளியிட அவர்கள் ஆர்வமாக இருந்தனர். ரசிகர்களின் உற்சாகக் கொண்டாட்டத்துடன் படத்தை வெளியிடுவது அவர்களுக்கே புதிய அனுபவம்தான். பாலிவுட்டில் வேறெந்த நடிகரின் படங்களும் இப்படியெல்லாம் கொண்டாடப்படுவதில்லை.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவதுதானே ரஜினி பாணி… சில நாட்கள் தள்ளிப் போனாலும், உலகையே திரும்பிப் பார்க்க வைப்பான் கோச்சடையான்!

-என்வழி ஸ்பெஷல்
5 thoughts on “ஷாரூக்கான் படத்துக்கு நெருக்கடி வேண்டாம்.. கோச்சடையானை ரிலீஸை தள்ளி வச்சிக்கலாம்! – ரஜினியின் பெருந்தன்மை

 1. பாவலன்

  வினோ அவர்களே..’கோச்சடையான்’ படத்திற்கான தெலுங்குப்
  பெயர் ‘விக்ரம் சிம்ஹா’ என நான் Times of India-வில் படித்தேன்.
  ஹிந்தியிலும் இதே பெயர் இருக்குமா? நன்றி.

  -பாவலன்

 2. karthik

  இந்த லிங்க் பாருங்க அப்புறம் முடிவு பண்ணுங்க

 3. simple fan of superstar!

  எப்போ தலைவர் படம் ரிலீசோ அன்னைக்கு தான் நமக்கு தீபாவளி .வெற்றி வசூல் பற்றி கவலை இல்லை எனவே தாராளமா தான் ஒதுங்கி போகஸ் சொல்றார் தலைவர் .
  இதுவே துப்பாக்கி எல்லாம் சந்திர முகி ரிலீஸ் அப்போ என்னமோ தான் தான் வசூல் சக்க்ரவர்த்திngகிற மாதிரி போட்ட ஆட்டம் என்ன அப்புறம் குப்புற கவிழ்ந்தது என்ன ?

 4. enkaruthu

  இந்த பொறமை மிகுந்த உலகத்தில் தனக்காக காற்று அடிக்கும்போழுதே தூற்றிக்கொள்ள நினைக்காமல் மற்றவரின் நலத்தையும் எண்ணி பார்பதால்தான் உங்களை தலைவர் என்று மனப்பூர்வமாக இந்த தமிழ் நட்டு மக்களும் உங்களை பின்பற்றும் எங்களை போன்றோர்களும் அழைக்கிறார்கள்.வாழ்க தலைவரே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *