BREAKING NEWS
Search

‘ரஜினி அரசியல்’… மார்ச்சில் மாநாடு… அடுத்து புதுக் கட்சி… இது மீடியா கிளப்பும் பரபரப்பு!

IMG_4610

மிழக அரசியல் வரலாற்றில் ‘ரஜினி அரசியல்’ என தனி அத்தியாயம் எழுதும் அளவுக்கு கடந்த 20 ஆண்டுகளாக பல நிகழ்ச்சிகள் அரங்கேறிவிட்டன.

1996-ல் சூப்பர் ஸ்டார் ரஜினிதான் முதல்வர் வேட்பாளர் என மூப்பனார் முன் மொழிந்ததும், அதை மறுத்துவிட்டு, மூப்பனார் கட்சிக்கு தன் ஆதரவை ரஜினி வழங்கியதும் அரசியல் நோக்கர்களுக்கு மறந்திருக்காது. ரஜினியின் பேராதரவுடன் ஆட்சிக்கு வந்த திமுக – தமாகா, அடுத்த தேர்தலிலேயே ஆட்சியை அதிமுகவிடம் இழந்தது. எந்த ஜெயலலிதா மீண்டும் வரவே மாட்டார் என ரஜினி உள்ளிட்டோர் நம்பினார்களோ, அதே ஜெயலலிதா விஸ்வரூபம் எடுத்து வந்தார்.

அதன் பிறகு ரஜினி அரசியல் பேசுவதை கிட்டத்தட்ட நிறுத்திவிட்டார். எப்போதாவது அரிதாக மேடையில் அவர் பேசுவதை வைத்து ஆயிரம் அரசியல் கட்டுரைகள் வடித்தன அச்சு – ஆன்லைன் ஊடகங்கள். பரபரப்பு விற்பனைக்கு அவை பெரிதும் உதவின. ரஜினி அரசியல் பேசி தன் படங்களை ஓட்டப் பார்க்கிறார் என்று சொல்லிக் கொண்டே தங்கள் வியாபாரத்தை வற்றாமல் பார்த்துக் கொண்டனர் மீடியா முதலாளிகள்.

இப்போது தமிழக அரசியலில் ஜெயலலிதா இல்லை. சசிகலா ஒரு விரும்பத்தகாத சக்தியாகப் பார்க்கப்படுகிறார். இந்தப் பக்கம் கருணாநிதியும் கிட்டத்தட்ட காட்சியிலேயே இல்லை. கட்சியின் செயல் தலைவர் முக ஸ்டாலின் சரியான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார். ஓ பன்னீர் செல்வம் ஒரு எளிய, மக்கள் முதல்வராகத் திகழ்வார் என எதிர்ப்பார்க்கப்பட்ட சூழலில், மீண்டும் ராஜினாமா செய்து ஏமாற்றிவிட்டார்.

யாராவது நல்ல மக்கள் தலைவர் வருவாரா? சசிகலா போன்றவர்கள் ஆட்சியிலமரும் மோசமான அரசியல் விபத்து தவிர்க்கப்படுமா? என்ற ஆதங்கத்தில் மக்கள் உள்ள நிலையில், மீண்டும் ரஜினி அரசியல் பற்றி பேச்சு எழுந்துள்ளது. சில பத்திரிகைகள் கட்டுரைகள் வெளியிட்டுள்ளன.

“ரஜினி ரசிகர்களைச் சந்தித்தார்… மார்ச்சில் ரசிகர் மன்ற மாநாட்டை நடத்துகிறார்… அடுத்த சில வாரங்களில் புதிய கட்சி தொடங்குகிறார்”

-இப்படிப் போகின்றன அந்தக் கட்டுரைகளின் தலைப்புகள்.

ரஜினி ஒரு அரசியல் முடிவெடுத்தால் அது தமிழகத்தின் மறுமலர்ச்சிக்கான தொடக்கமாக இருக்கும்தான். ஆனால் இதெல்லாம் உண்மைதானா?

இல்லை. ரஜினி சமீபத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை தன் வீட்டிலோ, மண்டபத்திலோ சந்திக்கவில்லை. அப்படிச் சந்தித்ததாக மீடியா வெளியிட்டுள்ள படம்  நான்காண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது.

மார்ச்சில் ரசிகர் மன்ற மாநாட்டை ரஜினி நடத்தப்போகிறார் என்பதிலும் ஆதாரமில்லை. அவரது ரசிகர்கள் யாராவது அதற்கான ஏற்பாடுகளைச் செய்யக் கூடும். ஆனால் ரஜினி செய்யவில்லை.

புதிய கட்சி? அக்மார்க் கப்சா. அப்படியொரு யோசனை அவருக்கு இருக்கிறதா என்று கூடத் தெரியவில்லை.

இதுதான் ‘ரஜினி அரசியலின்’ இப்போதைய நிலை. ஆனால் ரஜினியை மையப்படுத்தி புதுப்புது அரசியல் கட்டுரைகளை வேக வேகமாகப் புனைந்து பரபரப்பு குறையாமல் பார்த்துக் கொள்ள மீடியா மும்முரமாக வேலை செய்கிறது. இந்த கட்டுரைகள் நம்பி அல்லது மையப்படுத்தி ரஜினியை கடுமையாக விமர்சிக்கும் கூட்டமும் பெருக ஆரம்பித்துள்ளது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி பிழைப்பு நடத்தப் போகிறதோ மீடியா!

-விதுரன்

Is Rajinikanth having plans to enter in to politics? Here are some facts.
2 thoughts on “‘ரஜினி அரசியல்’… மார்ச்சில் மாநாடு… அடுத்து புதுக் கட்சி… இது மீடியா கிளப்பும் பரபரப்பு!

  1. ஸ்ரீகாந்த்.1974

    காலத்தின் கட்டளையாக இருக்கவேண்டும்! – தலைவரும்,
    அதை மறுக்காமல் தலைமையேற்க வேண்டும்.
    மொத்தத்தில் எங்கள்

    கனவு மெய்ப்பட வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *