BREAKING NEWS
Search

பொழப்புக்காக அரசியலுக்கு வந்தவங்க… பயப்படறதுல நியாயமிருக்குல்ல!

Rajini-mass

மே 15-ம் தேதிக்கு ஒரு வாரம் முன்பிருந்தே மீடியாக்களின் மொத்த கவனமும் ரஜினி பக்கம் திரும்பிவிட்டது.

இந்த சந்திப்பு எதற்காக என்ற ஆராய்ச்சியில் ஆரம்பித்து வித விதமான கதைகள் புனையப்பட்டன.

மே 15 அன்று காலை 10 மணிக்குப் பிறகு அரசியல் களம், மீடியா மொத்தமும் ரஜினிதான். வழக்கத்தை விட அதிகமாக ஆன்லைனில் ரஜினிதான் தொடர்ந்து ட்ரெண்டிங்.

ரஜினி அரசியல் பற்றிப் பேசி முடித்த அடுத்த நிமிடத்திலிருந்து, ஏதோ ஒரு டிவியில் யாரோ ஒரு தலைவர், விமர்சகர், வல்லுநர் ரஜினி பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அடுத்தடுத்த தினங்களில் அச்சு மற்றும் ஆன்லைன் ஊடகங்களில் ரஜினிதான் தலைப்புச் செய்தி.

அரசியல்வாதிகள் தலைவர்கள் மிரண்டு போய்ப் பார்க்கிறார்கள். ஓரளவு தன்னம்பிக்கை கொண்ட ஓரிரு தலைவர்கள் அமைதி காக்கிறார்கள். ஆனால் பிழைப்பே இந்த அரசியல்தான் என்ற நிலையில் உள்ள பலர் கண்டபடி பேசிக் கொண்டே இருக்கிறார்கள். இருபது ஆண்டுகளாக பார்த்துப் பழகிய காட்சி அது.

rajini-media 1

எந்தப் பதவி, அதிகாரத்திலும் இல்லை… ஒரு நடிகர் மட்டும்தான். ஆனால் மொத்த மீடியாவும் ரஜினியை மட்டுமே சுற்றிச் சுற்றி வரும்போது, பிழைப்பு பறிபோகும் ஆபத்திலிருப்பவர்களுக்கு எரிச்சல், ஆத்திரம் கோபம் எல்லாம் வரத்தானே செய்யும்!

Rajini-press

மீடியாவுக்கு எந்த நிலைப்பாடும் கிடையாது. அவர்களும் பிழைப்புக்காக எதையும் செய்பவர்கள்தானே… பரபரப்பு வேண்டும்… ஒரு பக்கம் ரஜினியை ஓஹோன்னு எழுதனும்… மறுபக்கம், விமர்சனம் அல்லது விவாதம் என்ற பெயரில் திட்டிக் கொண்டே இருக்கணும். இல்லன்னா பப்பு வேகாது. இன்னும் ஒரு வாரத்துக்கு தொலைக்காட்சிகள் ஜெ சமாதி தியானங்கள், எடப்பாடி அரசின் மோடி எடுபிடித்தனங்கள் எதையுமே கண்டு கொள்ளாமல், ராகவேந்திரா, போயஸ் கார்டன் அல்லது கேளம்பாக்கம் பண்ணை வீட்டுப் பக்கமே சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

ரஜினி… அரசியல் – ஊடக உலகின் பிழைப்பு மந்திரம்!

வினோ
என்வழி




2 thoughts on “பொழப்புக்காக அரசியலுக்கு வந்தவங்க… பயப்படறதுல நியாயமிருக்குல்ல!

  1. ஸ்ரீகாந்த்.1974

    \\ரஜினி… அரசியல் – ஊடக உலகின் பிழைப்பு மந்திரம்!//

    உண்மைதான்
    இங்கு பிழைக்கவும் ரஜினி!
    பழிக்கவும்,ரஜினி!!

    போற்றவும் ரஜினி! -புழுதிவாரி
    தூற்றவும் ரஜினி!!..

  2. Arul

    Super vino sir.thalaivar intha ethirigalai paarpathaivida oru 35 varusha kootam amaithiyaga intha fb twitteril illamal rajinikka kathirukkum.ivargalai nainaithu idaiveli vidamal than rasigargalai parthu oru ulagalavu manadu nadathavendum.applothu paarungal intha naiyellam amaitjiya pogum ennai poruthavarai thalaivar vaalvathum thaalvathum intha aanmiga pathaiyaalthaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *