BREAKING NEWS
Search

ரஜினி அரசியல்… ஊழல் அரசியல்வாதிகளை விட கேவலமான மீடியாக்கள்!

IMG_0219

டந்த மே மாதம் தலைவர் ரஜினியின் அரசியல் குறித்த பேச்சுகள், அதைத் தொடர்ந்து அவர் கட்சி ஆரம்பிக்கப் போகும் உண்மையை ரஜினி சார்பில் தமிழருவி மணியன் மாநாடு போட்டு அறிவித்தது ஆகிய இரண்டு நிகழ்வுகள் தமிழக அரசியல்வாதிகள் மட்டுமல்ல, தமிழ் மீடியாவின் கேவலமான முகத்தை அம்பலமாக்கியுள்ளது.

2004-க்குப் பிறகு ரஜினி அரசியலுக்கு வரவேமாட்டார் என இந்த மீடியா நம்பிக் கொண்டிருந்தது. அந்த தைரியத்தில்
‘ரஜினி அரசியலுக்கு வருவாரா?
ரஜினி அரசியலுக்கு வராதது ஏன்?
கட்சி தொடங்கும் தைரியம் அவருக்கு இல்லை…
தன்னை வாழ வைத்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற அக்கறை இருந்தால் அவர் அரசியலுக்கு வரட்டுமே!’

என்றெல்லாம் விதவிதமாக, பரபரப்பு கிளப்பும் தலைப்புகளில் அவர்களாகவே ஏதாவது ‘சமைத்து’ அட்டைப்படக் கட்டுரைகள் வெளியிட்டு காசு பார்த்து வந்தவர்களுக்கு 2017-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே ரஜினியின் நடவடிக்கைகள் சந்தேகத்தைக் கிளப்பின. அதை மே மாத ரசிகர் சந்திப்பில் உறுதிப்படுத்திவிட்டார் தலைவர். ஆம், ‘ஆண்டவன் கட்டளை வந்துவிட்டது… அரசியலுக்கு வருகிறேன்’ என்பதை தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிட்டார்.

மீடியாவில் ஒரு பகுதியினர் உண்மையிலேயே இதை பெரிய செய்தியாக வெளியிட்டுக் கொண்டாடினாலும், பெரும்பான்மையினர் ‘என்னடா இது… நாம நினைச்சதை மீறி இவர் வரேன்னு சொல்லிட்டாரே… இதை எப்படித் தடுப்பது?’ என தத்தமது அரசியல் வியாபாரிகளுக்காக வேலைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

விளைவு, நாளும் ஒரு விவாதம், அரசியல் கணிப்புகள், கருத்துத் திணிப்புகள் என ரஜினி அரசியல் பற்றிப் பேசுவது போல பேசிக் கொண்டே, அவர் காலை வாரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுவும் தமிழருவி மணியன் ரஜினியின் அரசியல் வருகைக்காகவே ஒரு மாநாட்டை நடத்தி, அதில் ரஜினி அரசியல் என்பது இப்படித்தான் இருக்கும் என்பதை அழுத்தம் திருத்தமாக – ரஜினியின் ஒப்புதலோடு – சொன்ன பிறகு ஆடிப் போய்க் கிடக்கிறார்கள். என்ன செய்யலாம்… ரஜினியை எப்படித் தடுக்கலாம் என்று யோசித்தவர்களின் மூளை, கமல் ஹாஸன் என்ற பிம்பத்தை முன்னிறுத்தியுள்ளது.

ட்விட்டர், பிக் பாஸ், சில அரசியல் பிரஸ் மீட்டுகள் மூலம் கமல் ஹாஸன் தன்னைத் தானே ஊதி, ஒரு தலைமைத்துவம் மிக்கவராகக் காட்டிக் கொண்டிருக்கிறார். அது அவர் அரசியல்… அதை விமர்சிக்க விரும்பவில்லை.

trichy-2

ஆனால் இங்குதான் மீடியா மீண்டும விஷம விளையாட்டை ஆரம்பித்துள்ளது. ரஜினியா… கமலா… யார் முதல்வர் நாற்காலிக்கு வர வேண்டும் என்றெல்லாம் கருத்துக் கணிப்புகளை நடத்தி, ஒரு கருத்தை உருவாக்கி அதை மக்கள் மீது திணிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. வழக்கம்போல இந்த குதர்க்கத்துக்கும் விகடன்தான் அச்சாரம் போட்டிருக்கிறது.

இத்தனை நாட்கள் ரஜினி எதிர்ப்புப் பிரச்சாரம் நடத்தி வந்த பிழைப்புவாத அரசியல் கோஷ்டி, இப்போது அதே பிரச்சாரத்தை மீடியா மூலம் நடத்த ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் ரஜினி என்ற மனிதரின் பலமே அவரது நேர்மை, உள்ளத் தூய்மை. ஒரு நல்ல தலைவனுக்கான அடிப்படைத் தகுதியும் இலக்கணமும் அதுதான். நேர்மையும் உள்ளத் தூய்மையும் கொண்ட ரஜினிக்கு முன்னால் அத்தனை விஷமப் பிரச்சாரங்களும் மழுங்கி காணாமல் போகும். இத்தனை காலமும் அதை கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

வினோ

-என்வழி ஸ்பெஷல்
6 thoughts on “ரஜினி அரசியல்… ஊழல் அரசியல்வாதிகளை விட கேவலமான மீடியாக்கள்!

 1. Ramachandran

  ஆனால் ரஜினி என்ற மனிதரின் பலமே அவரது நேர்மை, உள்ளத் தூய்மை. ஒரு நல்ல தலைவனுக்கான அடிப்படைத் தகுதியும் இலக்கணமும் அதுதான். நேர்மையும் உள்ளத் தூய்மையும் கொண்ட ரஜினிக்கு முன்னால் அத்தனை விஷமப் பிரச்சாரங்களும் மழுங்கி காணாமல் போகும். இத்தனை காலமும் அதை கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

  வினோ
  Idhudhaan Namadhu Mulu Nambikkai

 2. jagan

  ரஜினிய online poll la ஜெயிச்சதே #கமல் ரசிகர்கள் கெத்துனு நினைக்கிறாங்கனா,

  கமல 30வருஷம் மேல களத்துல ஜெயிச்ச #ரஜினி எவ்வளவு கெத்துனு நெனச்சி பாருங்க,

 3. I William charles

  ரஜினி என்ற மாமலையை அசைக்க முடியாது என்பது எதிராக நிற்கும் கமலுக்கே தெரியும்….,

 4. குமரன்

  இதல்லாம் ஒரு தடைக்கற்கள் அவ்வளவுதான், தலைவர் இதையெல்லாம் எளிதாக கடந்து வருவார் என நம்புகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *