BREAKING NEWS
Search

நடிகை மஞ்சுளா மறைவு – ரஜினி அஞ்சலி

நடிகை மஞ்சுளா மறைவு – ரஜினி அஞ்சலி

Rajini-last-respect-manjula6

சென்னை: நடிகர் விஜயகுமார் மனைவி நடிகை மஞ்சுளா நேற்று சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 59. சூப்பர் ஸ்டார் ரஜினி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

நேற்று தன் ஆலப்பாக்கம் வீட்டில் கீழே விழுந்ததில் கட்டில் கால் குத்தி வயிற்றில் அவருக்கு பலமாக அடிபட்டதால் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்று இறந்தார் மஞ்சுளா.

அவருக்கு திரையுலகினர் பலரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினி செவ்வாய்க்கிழமை மாலை மஞ்சுளாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் சௌந்தர்யாவும் வந்திருந்தார். இருவரும் வருவதற்கு முன்பே ஐஸ்வர்யா தனுஷ் வந்து அஞ்சலி செலுத்தினார்.]

Rajini-last-respect-manjula2

நேற்று மருத்துவமனையில் மஞ்சுளா சேர்க்கப்பட்டபோதே, நேரில் போய் பார்த்துக் கொண்டார் லதா ரஜினி. ரஜினியின் மிக நெருங்கிய நண்பர்களுள் ஒருவர் விஜயகுமார்.

இன்று பிற்பகல் போரூர் மின் மயானத்தில் மஞ்சுளா உடல் தகனம் செய்யப்படுகிறது.

எழுபதுகளில் மக்கள் திலகம் எம்ஜிஆரால் ரிக்ஷாக்காரன் படத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர் மஞ்சுளா. தென்னகத்தின் கனவுக் கன்னி என்ற பட்டப்பெயருடன் அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மஞ்சுளா.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சங்கர் சலீம் சைமன், குப்பத்து ராஜா போன்ற படங்களில் நடித்தார்.

விஜயகுமாரை காதலித்து மணந்த பிறகு 80களின் ஆரம்பத்திலேயே நடிப்பதை நிறுத்திவிட்டார். ஆனால்1988-க்குப் பிறகு தமிழ், தெலுங்குப் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். அவர் நடித்து வந்த புதிய படங்களில் சேரன் பாண்டியன், நாம் இருவர் நமக்கு இருவர், சமுத்திரம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

மஞ்சுளா – விஜயகுமார் தம்பதிக்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகிய மகள்கள் உள்ளனர். இயக்குநர் ஹரி மஞ்சுளாவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

-என்வழி செய்திகள்

மேலும் படங்களுக்கு…
9 thoughts on “நடிகை மஞ்சுளா மறைவு – ரஜினி அஞ்சலி

 1. பிரகாஷ்

  டி எம் ஸ் மரணத்திற்கு செல்லாத ரஜினி மஞ்சுளாவிற்கு மட்டும் தவறாமல் அஞ்சலி செலுத்தினார்…

 2. s.vasanthan

  பிரகாஸ் தலைவர குத்தம் சொல்றது ரொம்ப கஷ்டம் ,ஈன்ன அவர் உண்மையிலேயே நல்ல மனிதன் ,மகான் ,உங்களுக்கு ஒன்னு தெரியுமா தலைவர் முதல் நாளே hospittalil பார்த்துட்டார் ,மற்றது இது அவரின் நண்பரின் மனைவி .

 3. natessan

  TMS ஐயாவை விடவா ….. நண்டூருது நரிவூருது …. நினைவுக்கு வருது ……

 4. srikanth1974

  தாங்கள் அனுப்பிய வீடியோ பகிர்வுக்கு நன்றி கபிலன்.
  என்றும் உன் அன்புச் சகோதரன்
  ப.ஸ்ரீகாந்த்.

 5. kabilan.k

  எனக்கும் தலைவர் TMS அவர்களது மறைவுக்கும்,மணிவண்ணன் அவர்களது மறைவுக்கும் அஞ்சலி செலுத்த செல்லவில்லை என்பது வருத்தமாக தான் இருந்தது.ஆனால் தலைவர் ஒன்றை செய்கிறார் என்றால் நிச்சயமாக எதோ ஒரு காரணம் இருக்கும்.ஏன் என்றால் அவர் ஒரு நல்ல ஆத்மா என்பது அனைவரும் அறிந்ததே.இங்க கமெண்ட் போடும் அனைவரும் நாகரீகமாக கமெண்ட் செய்யவும்,அதுவும் தலைவர் ரசிகர்கள் அவரை பத்தி கமெண்ட் போடும் பொது keybord இருகிறதே என்று எந்த வார்த்தைகளையும் வேண்டும் என்றாலும் உபயோக படுத்தலாம் என்று நினைத்து விடாதிர்கள்.அதுவும் தலைவர் மாதிரி ஒரு பெரிய மனிதரை,நல்ல ஆத்மாவை விமர்சனம் செய்யும் பொழுது அப்படி பயன் படுத்துவதை அறவே தவிருங்கள்,இல்லையென்றால் பின்பு அதற்காக மிகவும் வருந்துவீர்கள்.நன்றி ஸ்ரீகாந்த் அண்ணா.

 6. நாஞ்சில் மகன்

  இளவரசன் மரணத்திற்கு செல்லாத அனுதாபம் கூட தெரிவிக்காத ரஜினி மஞ்சுளாவிற்கு மட்டும் தவறாமல் அஞ்சலி செலுத்தினார்…

 7. kabilan.k

  நந்த சார்,நன்றி சார்.நாஞ்சில் மகன் சார்,தலைவர் அரசியல்வாதி அல்ல சார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *