BREAKING NEWS
Search

என்னை ஒரு மகனாகவே பார்த்துக் கொண்டவர் கே பாலச்சந்தர்! – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

என்னை ஒரு மகனாகவே பார்த்துக் கொண்டவர் கே பாலச்சந்தர்! – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

RAJNIKANTH5

சென்னை: என்னை தன்னுடைய மகனாகவே பார்த்துக் கொண்டவர் கே பாலச்சந்தர். அவர் மறைவு, என்னையே நான் இழந்ததைப் போல இருக்கிறது, என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இந்திய சினிமாவுக்கு ரஜினிகாந்த் என்ற சூப்பர் ஸ்டாரைத் தந்தவர் கே பாலச்சந்தர். 1975-ல் அபூர்வ ராகங்கள் படத்தில் இரண்டாவது நாயகனாக ரஜினியை அறிமுகம் செய்தார்.

அதன்பிறகு ரஜினிகாந்த் என்பவர் இந்திய சினிமாவின் ஆளுமையாக மாறிப் போனது தனி வரலாறு.

பாலச்சந்தர் மீது அளவுக்கு அதிகமான மரியாதை பாசம் வைத்திருந்தார் ரஜினி. எந்த மேடை, நேர்காணல் என்றாலும் பாலச்சந்தரின் பெயரைக் குறிப்பிட மறந்ததில்லை ரஜினி.

தனது குருநாதர் உடல்நலம் குன்றியிருந்தபோது நேரில் போய் பார்த்துவிட்டு வந்தார் ரஜினி. மீண்டும் அவர் உடல்நலம் பெற்று வந்துவிடுவார் என நம்பினார் அவர்.

நேற்று பாலச்சந்தர் மறைந்த செய்து கேட்டு அதிர்ச்சியடைந்த ரஜினி, உடனடியாக அவர் வீட்டுக்குப் போய் தனது மரியாதையைச் செலுத்தினார்.

Celebrities Paid Homage to KB Sir (5)

மருத்துவமனையிலிருந்து மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு பாலசந்தரின் உடல் செவ்வாய்க்கிழமை இரவு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

வெகுநேரம் பாலசந்தரின் உடலுக்கு அருகே அமைதியாக அமர்ந்திருந்தார்.

பின்னர், 10.30 மணியளவில் வெளியில் காத்திருந்த செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் பேசியதாவது: இயக்குநர் பாலசந்தர் எனது குரு மட்டுமல்ல. எனக்கு தகப்பன் போன்றவர். என்னை அவர் நடிகனாகப் பார்க்கவில்லை. மகனாகப் பார்த்தார். அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று. என்னை நானே இழந்து விட்டதாக உணர வைத்து விட்டது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்,” என்றார்.

பாலச்சந்தரின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறுகிறது.

-என்வழி




4 thoughts on “என்னை ஒரு மகனாகவே பார்த்துக் கொண்டவர் கே பாலச்சந்தர்! – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

  1. குமரன்

    பாலச்சந்தர் தமிழ்த் திரையை வேறு ஒரு தளத்துக்கு எடுத்துக் சென்றவர். வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை நிதர்சனமாகப் படமாக்கியவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், தனது குருநாதரை இழந்து வாடும் நமது தலைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  2. suresh kumar SAMPATH

    கே.பி சார் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிகிறோம்

    இப்படிக்கு admin@vellorerajinifans.com
    and members of vellorerajinifans team

  3. srikanth1974

    கலங்காதீர்கள் தலைவா அவரின் ஆன்மா உங்களை என்றும் ஆசீர்வதிக்கும்.

  4. kumaran

    2 ஆண்டுகள் அடுத்து அடுத்து 4 படங்கள் வாய்ப்பு கொடுத்து( 1975 to 1977) KB சார் தலைவரை தூக்கி விட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *