BREAKING NEWS
Search

ஜானி, துடிக்கும் கரங்கள் தயாரிப்பாளர் கேஆர்ஜிக்கு அஞ்சலி செலுத்திய ரஜினி – சிறப்புப் படங்கள்

ஜானி, துடிக்கும் கரங்கள் தயாரிப்பாளர் கேஆர்ஜிக்கு அஞ்சலி செலுத்திய ரஜினி – சிறப்புப் படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜானி, துடிக்கும் கரங்கள் படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் கேஆர்ஜி புதன்கிழமை காலை மரணமடைந்தார்.

அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த முதல் நடிகர் ரஜினிதான். வந்தவர், கேஆர்ஜி உடலுக்கு மாலை அணிவித்துவிட்டு, நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்திருந்தார்.

கேஆர்ஜியின் மனைவிக்கு ஆறுதல் கூறியவர், கேஆர்ஜி நினைவுகளில் கண்கலங்கினார்.

இசைஞானி இளையராஜா, இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் கேஆர்ஜிக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இந்த இருவராலும் முதலாளி என அன்புடன் அழைக்கப்பட்டவர் கேஆர்ஜி.

இயக்குநர் கே.பாலசந்தர், கவுண்டமணி, டி ராஜேந்தர், ஆர்.சுந்தராஜன், இப்ராகிம் ராவுத்தர், பிரமிட் நடராஜன், கோவை தம்பி, நடிகை பூர்ணிமா பாக்யராஜ் உள்பட பலரும் வந்திருந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இறுதி அஞ்சலி செலுத்தும் ரஜினி – படங்கள்

 

 

 

 

 

 

 

 

 

-என்வழி படங்கள்




One thought on “ஜானி, துடிக்கும் கரங்கள் தயாரிப்பாளர் கேஆர்ஜிக்கு அஞ்சலி செலுத்திய ரஜினி – சிறப்புப் படங்கள்

  1. Rajkumar

    தலைவா, நீங்க கண்கலங்கினா நாங்களும் தானா அழுவறோம். அழாதீங்க ப்ளீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *