BREAKING NEWS
Search

அரசியல் பத்தி ரஜினி எங்கிட்ட பேசறதில்ல.. அவர் பெரிய ஆளு! – மோகன்பாபு

அரசியல் பத்தி ரஜினி எங்கிட்ட பேசறதில்ல.. அவர் பெரிய ஆளு! – மோகன்பாபு

rajini-mohanb

ரசியல் பற்றி ரஜினி என்னிடம் எதுவும் பேசமாட்டார். அவர் பெரிய ஆள் என்றார் நடிகர் மோகன்பாபு.

சூப்பர் ஸ்டார் ரஜினி – மோகன்பாபு நட்புக்கு அறிமுகம் தேவையில்லை. மோகன் பாபு மகள் லட்சுமி மஞ்சு தயாரித்த மறந்தேன் மன்னித்தேன் படத்தின் செய்தியாளர் காட்சி ஞாயிற்றுக் கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மோகன் பாபு, படம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, “அரசியல் ஒரு சாக்கடை அந்த நாத்தத்திலிருந்து நான் வெளியில் வந்துவிட்டேன்,” என்றார்.

உடனே அவரிடம், “அப்படின்னா உங்க நண்பர் ரஜினியை அரசியலுக்கு வர விடாமல் செய்தது நீங்கள்தானா?” என்றனர் நிருபர்கள்.

அதற்கு பதிலளித்த அவர், “அந்தாளு அரசியல் பத்தியெல்லாம் என்கிட்ட பேசவே மாட்டார்.. எங்க நட்பு அதற்கு அப்பாற்பட்டது,” என்றார்.

‘என்ன இது ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார்.. அவரை இப்படி சொல்கிறீர்களே’ என்றதற்கு, “நாங்க இருவரும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள். எங்களுக்குள் இந்த பேதமே கிடையாது..!” என்றார் மோகன்பாபு.

பாலாவின் பரதேசி… இந்த வாரம் பார்க்கிறார் சூப்பர் ஸ்டார்!

Rajnikanth_0

பாலாவின் பரதேசி படத்தை இந்த வாரம் பார்க்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

பாலா மீது அன்பு கொண்டவர் ரஜினி. நான் கடவுள் படம் பார்த்ததும் ரஜினி எழுதிய கடிதம் ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

பரதேசி படம் வெளியான பிறகு அந்தப் படத்தைப் பார்க்க தானும் விரும்புவதாகவும், இந்த வாரத்தில் ஒரு நாள் பார்க்கப் போவதாகவும் பாலாவுக்குத் தெரிவித்துள்ளார்.

ரஜினி சொல்லும் நாளில் அவரது வீட்டில் உள்ள குட்டி திரையரங்கில் க்யூப் முறையில் படத்தை திரையிடப் போவதாக பாலா தரப்பில் தெரிவித்தனர்.

சமீபத்தில்தான் போயஸ் கார்டனில் பாலா வீடு வாங்கியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்!

-என்வழி ஸ்பெஷல்




One thought on “அரசியல் பத்தி ரஜினி எங்கிட்ட பேசறதில்ல.. அவர் பெரிய ஆளு! – மோகன்பாபு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *