BREAKING NEWS
Search

அரசியல் பேசி, பரபரப்பு கிளப்பி, விளம்பரம் தேடும் நிலைமையில் ரஜினி இல்லை! – கேஎஸ் ரவிக்குமார்

அரசியல் பேசி, பரபரப்பு கிளப்பி, விளம்பரம் தேடும் நிலைமையில் ரஜினி இல்லை! – கேஎஸ் ரவிக்குமார்

p8b

சென்னை: அரசியல் பேசி, பரபரப்பு கிளப்பி, விளம்பரம் தேடும் நிலைமையில் ரஜினி இல்லை.. என்றைக்கும் அப்படி இருந்ததும் இல்லை, என்று இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.

ஆனந்த விகடனுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் ரஜினியின் அரசியல் பேச்சு குறித்த கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் கூறியிருந்தார்.

அந்தப் பேட்டி:

கேள்வி: ” ‘பாட்ஷா’ வெற்றி விழா நிகழ்ச்சியில் ரஜினி அரசியல் வாய்ஸ் கொடுத்த சூழ்நிலையில் ‘முத்து’ படம் இயக்கினீர்கள். அந்தப் படத்தில் அரசியல் டச் வசனங்கள் இருந்தன. இப்போ ‘லிங்கா’ வெளியாகும் சமயம் திரும்பவும் ரஜினியைச் சுற்றி அரசியல் சர்ச்சை. இது திட்டமிட்ட பப்ளிசிட்டினு ஒரு பேச்சு ஓடுதே…”

கேஎஸ்ஆர்: ”நம்மாளுங்க எதையும் தப்பான ஆங்கிள்லதான் பார்ப்பாங்களா? ‘சிவாஜி’, ‘எந்திரன்’ படங்கள் வெளியானப்போ ரஜினி சார் பரபரப்பா ஏதாவது பேசினாரா? இல்லையே! அந்த ரெண்டு படங்களும் வசூலை வாரிக் குவித்ததே. தன் பட ரிலீஸுக்கு முன்னாடி அரசியல் பேசி, பரபரப்பு கிளப்பி, விளம்பரம் தேடும் நிலைமையில் ரஜினி சார் என்னைக்கும் இருந்தது இல்லை. ‘என் படங்களுக்கு வேண்டுமானால் விளம்பரம் தேவைப்படலாம். ஆனால், ரஜினி படத்துக்கு விளம்பரம் தேவையே இல்லை’னு அமிதாப் பச்சனே சொல்லியிருக்கார். இதுக்கு மேல நான் என்ன சொல்ல?!”

கேள்வி: ” ‘லிங்கா’ இசை வெளியீட்டு விழா திடீர்னு அரசியல் மேடை ஆனது ஏன்?”

கேஎஸ்ஆர்: ”முதல்ல ‘லிங்கா’ படத்தைப் பத்தி மட்டும்தான் எல்லாரும் பேசினாங்க. அமீர் பேச்சுதான் அரசியல் பக்கம் எல்லாரையும் திருப்பிருச்சு. ஆனா, ரஜினி சார் அப்பவும் அரசியல் பத்தி எதுவுமே பேசலையே. ‘அரசியல் எனக்கும் தெரியும்’னு மட்டும்தான் சொன்னார். ‘அரசியலில் இறங்கப்போறேன்’னு எந்த உத்தரவாதமும் கொடுக்கலை!”

கேள்வி: ”அரசியல் ஆர்வம் இல்லைன்னா, இமயமலைக்குப் போவாரா?”

கேஎஸ்ஆர்: ”இல்லை. இனிமேல் ரஜினி சார் இமயமலைக்குப் போக மாட்டார். அப்படியே ஏதோ ஒரு மாற்றம் விரும்பி போனாலும், ஒரு சுற்றுலாப் பயணியாகத்தான் போவாரே தவிர, சாமியார் மனநிலையில போக மாட்டார்!”

கேள்வி: ‘படையப்பா’வில் ‘என் வழி தனி வழி’ பன்ச் டயலாக் பட ரிலீஸ் வரை யாருக்கும் தெரியாம பார்த்துக்கிட்டீங்க. ‘லிங்கா’வில் அப்படி என்ன சஸ்பென்ஸ் வெச்சிருக்கீங்க?”

கேஎஸ்ஆர்: ”இந்தப் படத்தில் அப்படி ஒரு தொடர் டயலாக் இடம் பெறலை. ஆனா, ‘லிங்கா’ பட சீன்களில் ஆங்காங்கே அசத்தலான பன்ச் இருக்கும். ‘லிங்கா’வுக்காக ரஜினி சார் வித்தியாசமான ஒரு ஸ்டைல் முயற்சி பண்ணியிருக்கார். அது மட்டும் படத்துல அடிக்கடி ரிப்பீட் ஆகும்!”

கேள்வி: ”படப்பிடிப்பில் எல்லாரையும் கடுமையாத் திட்டி வேலை வாங்குவீங்கனு சொல்றாங்க. அதுக்காக ரஜினி உங்ககிட்ட எதுவும் சொன்னது இல்லையா?”

கேஎஸ்ஆர்: ”2,000 பேர் மத்தியில் ரஜினி சார் நின்னுட்டு வசனம் பேசுற பிரமாண்ட காட்சியைப் படம் பிடிக்கணும்; அணையின் உச்சியில் நின்னு ரஜினி சார் வசனம் பேசணும்; அவ்ளோ உயரத்துக்கு ஏறிப் போறதுக்கே 20 நிமிடங்கள் ஆச்சு. உச்சி வெயில். உயரத்தில் நிற்கிறார் ரஜினி. அணையைச் சுத்தி 2,000 பேரும் பரவி நிக்கணும். ஒவ்வொரு பகுதி ஆளுங்களையும் கத்திக் கத்தி ஒழுங்குபடுத்துறதுக்குள்ள தொண்டைத் தண்ணி வத்திருச்சு. ஆனாலும் திருப்தி இல்லை. அப்புறம் வேற வழியில்லாம காரசாரமாத் திட்ட ஆரம்பிச்சுட்டேன். அப்புறம் விறுவிறு, சுறுசுறுனு வேலை நடந்துச்சு.

எல்லாத்தையும் அணை மேல இருந்து ரஜினி பார்த்துட்டே இருந்தார். அதுக்கு முன்னாடி அவர் ஸ்பாட்ல இருக்கிறப்ப நான் அப்படிப் பேசினதே இல்லை. அந்த ஷாட் எடுத்து முடிச்சதும் என் பக்கத்துல வந்த ரஜினி, ‘ரவி… இப்போ எடுத்த சீனை மானிட்டர்ல பார்க்கலாமா?’னு கேட்டார். அவருக்கு பிளே பண்ணோம். பார்த்துட்டு அசந்துட்டார். ‘வாவ்… ஃபென்டாஸ்டிக். நீங்க அப்படித் திட்டினப்போ எனக்கே ஒருமாதிரி இருந்தது. ஆனா, இப்படியொரு பிரமாண்ட காட்சியைப் பார்த்த பிறகு, நீங்க கடுமையா திட்டுனதுல தப்பே இல்லை’னு சொன்னார். ரஜினி சார் உடம்பு சரியில்லாமப் போய் திரும்ப மீண்டு வந்து நடிக்கிறப்ப, அவருக்கு சின்னக் கஷ்டம்கூடக் கொடுக்கக் கூடாதுனு நான் தவிச்சேன். அதனாலதான் சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் அப்படி நடந்துக்க வேண்டியதாயிருச்சு!”

B4A_quyCEAAh_Gj

கேள்வி: ”இப்போ ரஜினி எப்படி இருக்கார்?”

கேஎஸ்ஆர்: ”சூப்பரா இருக்கார். ‘படையப்பா’ படப்பிடிப்புக்கு காலையில 7 மணிக்கே ஸ்பாட்ல வந்து நிப்பார். ஆனா, ‘லிங்கா’ படப்பிடிப்புக்கு 10 மணிக்கு வந்தா போதும்னு நான் கறாரா சொல்லியிருந்தேன். ஆனாலும் 9 மணிக்கே வந்துடுவார். இருந்தாலும் நான் 10 மணிக்கு மேலதான் அவருக்கு ஷாட் வைப்பேன். மத்தியானம் சாப்பிட்ட பிறகு கொஞ்ச நேரம் தூங்கி ஓய்வெடுக்க நேரம் கொடுத்துருவேன். இப்படி ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மட்டும்தான் அவரை நடிக்கவெச்சோம். ஏன்னா, ரஜினி சார் மேல அவர் குடும்பத்தினருக்கு இருக்கிற அக்கறை, எனக்கும் இருக்கு.

பொதுவா ஒரு ஹீரோவுடன் ஒரு இயக்குநர் வேலைபார்க்கும்போது மட்டுமே நெருக்கமா இருப்பார். அப்புறம் ரெண்டு பேருக்கும் நடுவில் இடைவெளி விழுந்திரும். ஆனா, எனக்கும் ரஜினி சாருக்கும் எப்பவும் அப்படி ஒரு இடைவெளி விழுந்ததே இல்லை. கிட்டத்தட்ட 20 வருஷங்களுக்கு முன்னாடி அவரை வெச்சு ‘முத்து’ இயக்கினேன். அப்புறம் ‘படையப்பா’ பண்ணோம். ரெண்டுமே சூப்பர் ஹிட். அப்புறம் ‘ஜக்குபாய்’க்கு பூஜை போட்டோம். விளம்பரம் கொடுத்தோம். ஆனா, திடீர்னு படம் டிராப் ஆகிருச்சு.

ரஜினி பாணியில் ஆடிக்காட்டும் கேஎஸ்ஆர்

ரஜினி பாணியில் ஆடிக்காட்டும் கேஎஸ்ஆர்

இடையில கமல் சாரை வெச்சு சொந்தப் படம் பண்ணேன். அப்போ ரஜினி சார் அடிக்கடி என் ஆபீஸுக்கு வருவார். அவர்தான் கமல் படத்துக்கு ‘தெனாலி’னு பேர் வெச்சார். அப்புறம் ‘ராணா’ படம் ஆரம்பிச்சேன். அதுக்கு ரெண்டு பாடல்கள் ரிக்கார்டிங் பண்ணிக் கொடுத்தார் ஏ.ஆர்.ரஹ்மான். அப்போதான் ரஜினி சாருக்கு உடம்பு சரியில்லாமப் போச்சு. அந்தப் படமும் டிராப். ரெண்டு சூப்பர் ஹிட் கொடுத்த பிறகு, ரெண்டு புராஜெக்ட் டிராப் ஆச்சுன்னா, பொதுவா ஒரு இயக்குநருக்கும் ஹீரோவுக்கும் சின்னக் கருத்து வேறுபாடு இருக்கும்ல. ஆனா, எனக்கும் ரஜினி சாருக்கும் அதுக்கு அப்புறம்தான் அன்பும் நட்பும் ஜாஸ்தி ஆச்சு. அந்த அளவுக்கு ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுவெச்சிருக்கோம். அந்தப் புரிதல்தான் ‘லிங்கா’ங்கிற மெகா புராஜெக்டை ஆறே மாசத்தில் முடிக்கவெச்சிருக்கு!”

நேர்காணல்: குணா
நன்றி: விகடன்

 
12 thoughts on “அரசியல் பேசி, பரபரப்பு கிளப்பி, விளம்பரம் தேடும் நிலைமையில் ரஜினி இல்லை! – கேஎஸ் ரவிக்குமார்

 1. Marthu

  என்னைக்குமே அரசியல் பத்திப் பேசி படத்த ஓட வைக்கவேண்ய அவசியம் தலைவருக்கு இல்லை,நம்மைப் போன்ற சில ரசிகள்களின்(அமீர்) எஅதிர்பார்ப்புக்குத் தலைவர் பதிலலித்தார் அவ்வளவுதான்….(சேரனை நான் உ ண்மையான ரஜினி ரசிகன் என சொல்ல மாட்டேன்)

  ஏன் அவர் அரசியல் பத்திப் பேசாட்டி என்ன…என்னைக் கேட்டால் தலைவர் அரசியலுக்கே வரக்கூடாது, வருடத்திற்க்கு ஒரு படம் நல்ல் ஓய்வுடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அவ்வளவுதான்

 2. Marthu

  எல்லாம் ரெடி தலைவரின் தரிசனத்திற்க்காக….11 மாலை சொந்த ஊர் செல்கிறேன் 20 டிக்கெட் முதல்நாள் முதல் காட்சி தலைவர் தரிசனம்….எனது நெருங்கிய நண்பர்கள் இதில் 12 பேர் தலைவரின் வெறியர்கள்…இப்பவே புல்லரிக்குது தலைவா…அன்று இரவே க்டும்பத்துடன் இரவுக்காட்சி…..மனசுல ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோசம் …..அடுத்த வாரம் இதேநேரம் தியேட்டரில் ஆர்ப்பாட்டம் தான்….

 3. Marthu

  சிங்கத்தின் கம்பீரம்…

  டிசம் 12 நாள் தமிழகம் ஸ்தம்பிக்கும்

  லிங்கம் ரிலீசாகும் நாளில் திரையரங்க்ளில் தலைவர் மாஸ் என்றால் என்ன என்று இப்ப இருக்கும் இந்த 2 ஸ்க்கூல் பசங்களுக்குக் காட்டுவோம்..

  ஆனால் வருங்கால் சூப்பர் ஸ்டார் பற்றி எல்லாம் இனி எவனும் பேசக்கூடாது அப்படி இருக்கனும் லிங்கத்தின் மாபெரும் வெற்றி…

 4. குமரன்

  விகடனில் இந்தப் பேட்டியைப் படித்தேன்.

  அருமையான பேட்டி. ரவிக்குமார் சரியாகச் சொல்லி இருக்கிறார். தலைவர் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பிலா அவரது ரசிகர்கள் அவரது படத்தைப் பார்க்கிறார்கள்? இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும். சில பத்திரிகையாளர்கள்/ பத்திரிகைகள் தமது தொழிலுக்காக வேண்டி அப்படி எழுதுகிறார்கள். எப்படியாவது பத்திரிக்கை விற்றால் சரி, அவ்வளவுதான் அவர்களது நோக்கம்.

  அதேபோலத்தான் சில பொறாமைபிடித்த அரசியல்வாதிகளும், இப்படிப் பேசுகிறார்கள்.

 5. M.MARIAPPAN

  பாரதிராஜா , சீமான் போன்ற நாயிகளுக்கு இது ஒரு நெத்தியடி .கண்டிப்பாக லிங்கா மாபெரும் வெற்றி பெரும், .என்றும் தலைவரின் முரட்டு வெறியன் .

 6. anbudan ravi

  காதிருந்தும் செவிடர்களாக இருக்கும் சிலருக்கு கே.எஸ்.ஆரின் இந்த பேட்டி உரைக்கட்டும்…..

  என்ன ஸ்டைல் தலைவருக்கு…..இன்னும் ஒரு வாரம்…..குடும்பத்துடன் தயாராகிவிட்டோம் தலைவரை தரிசிக்க….

  அன்புடன் ரவி.

 7. மிஸ்டர் பாவலன்

  “ஜக்குபாய்” படம் சரத்குமார் நடித்து வெளி வந்தது.. “சூப்பர் ஸ்டார் நடித்தால் என்ன, சுப்ரீம் ஸ்டார் நடித்தால் என்ன?’ என ஏதோ ஒரு பேட்டியில் சரத் சொல்லி இருந்தார்.. ஆனால் “ஜக்கு பாய்” படம் தோல்வி அடைந்தது.. படத்தின் கதை “ரஜினி” படம் மாதிரி இல்லை!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 8. குமரன்

  மாரியப்பன் அவர்களே…

  சீமானை சீமாறு என்று மரியாதையாக அழைப்பதாக நான் முடிவெடுத்திருக்கிறேன்!

 9. மிஸ்டர் பாவலன்

  மதிப்பிற்குரிய நண்பர்களே..

  படரிலீஸ் நாள் நெருங்கும் நிலையில் யாரோ ஒருவர் படத்தின் கதை
  “என் கதை” தான் என்று ஒரு கேஸ் தாக்கல் செய்து (வேறொரு கேஸ் இது)
  விசாரணை டிசம்பர் 9-ஆம் தேதி அன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு
  தள்ளுபடி செய்யப் பட்டால் நல்லது. ஆனால் படம் ரிலீஸிற்கு தடை
  விதிக்கப்பட்டால் பெரும் ஏமாற்றம் ஆகி விடும்.. இன்னும் இரண்டு நாளில்
  நமக்கு நிலவரம் தெரியும். நண்பர்கள் வெள்ளியோ, சனியோ சேதி தாள்களில்
  இந்த செய்தியை தலையங்கத்தில் பார்த்து இருக்கலாம். இது ஒரு கவலை தான். பார்ப்போம்..

  நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்..
  இப்படை தோற்கின் எப்படை வெல்லும்..
  நீதிக்கு இது ஒரு போராட்டம்..
  இதை நிச்சயம் உலகம் பாராட்டும்..

  -== மிஸ்டர் பாவலன் ==-

 10. Deen_uk

  தலைவரின் ஸ்டைல் தாறுமாறு! இதே சில்வர் கலர் blazer சூட் எங்கிட்டயும் இருக்கு.! ம்ஹூம் .. நமக்கு தான் சூட் ஆகல! தலைவா …waiting for real diwali !!
  12 and 13 th holiday approval கிடைச்சாச்சு! கடவுளே முதல் நாள் டிக்கெட் கிடைக்கணும்.!

 11. Guru

  எந்த தளபதியும் இனி குமுதம் போன்ற பத்திரிகைகளுக்கு காசு கொடுத்து நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று தன்னை விளம்பர படுத்தி கொள்ள முயற்சி செய்வது முட்டாள் தனம் என்று புரிந்தால் சரி, நடிகரின் தந்தை பால் வண்டியை அனுப்பி மகனின் படம் ரிலீஸ் ஆகும் திரையடேர்களில் கட் அவுட்டுக்கு பால் அபிசேகம் செய்யும் மறைமுக வேலையையும் விட்டால் சரி
  நங்கை- குரு

 12. மிஸ்டர் பாவலன்

  //, நடிகரின் தந்தை பால் வண்டியை அனுப்பி மகனின் படம் ரிலீஸ் ஆகும் திரையடேர்களில் கட் அவுட்டுக்கு பால் அபிசேகம் செய்யும் மறைமுக வேலையையும் விட்டால் சரி//

  நடிகரின் தந்தை என நீங்கள் சொல்வது அப்பா குருவியா?

  -== மிஸ்டர் பாவலன் ==

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *