BREAKING NEWS
Search

தலைவர் படங்களும் மீனாட்சி தியேட்டரும்!

தலைவர் படங்களும் மீனாட்சி தியேட்டரும்! – ஒரு ப்ளாஷ்பேக்

tpt308

கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பத்தூர் மீனாட்சி தியேட்டரில் நேற்று படம் பார்த்தேன். நகரின் மெயின் ரோட்டிலேயே உள்ள தியேட்டர். ஒரு காலத்தில் பாடாவதியாகத்தான் இருந்தது. தியேட்டருக்கு நடு நடுவே தூண்கள்… அதில் ஃபேன்.. கூட்டம் அதிகமாகிவிட்டால் ஸ்க்ரீனில் பார்வையாளர்கள் தலைகள் தெரியும் என்று இருந்த தியேட்டர், இன்று ஏசி, டிடிஎஸ், க்யூப் என மாறியிருக்கிறது.

எல்லாம் ‘தலைவரின்’ எந்திரன் படத்துக்காக செய்தது என்றார் மானேஜர் (தியேட்டர் முழுக்க தலைவர் படங்கள், சுவர்களில் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் என அமர்க்களமாக உள்ளது).

சாதாரண வகுப்பு இருக்கைகள் மட்டும் இன்னும் அதே கண்டிஷனில்தான் உள்ளன. கழிவறை திருப்பத்தூர் பஸ் ஸ்டாண்ட் லெவலுக்குதான் உள்ளது.

ஆனால் ஒழுங்காக படத்தை அனுபவித்துப் பார்க்க முடிந்தது.

எண்பது, தொண்ணூறுகளில் வந்த சூப்பர் ஸ்டார் ரஜினி படங்களில் பில்லா (திருமகள்), முரட்டுக்காளை (சிகேசி), படிக்காதவன் (நியூ), மிஸ்டர் பாரத் (சிகேசி), பாண்டியன் (ராமு) தவிர அத்தனைப் படங்களையும் FDFS இந்த மீனாட்சியில்தான் பார்த்திருக்கிறேன். ரஜினி படத்தை திரையிட முடியாத தருணங்களை ரொம்ப கவுரவப் பிரச்சினையாகத்தான் இந்த தியேட்டர்காரர்கள் எடுத்துக் கொள்வார்களாம்.

தியேட்டரில் பாயும் புலி பட ஷீல்ட் இருந்தது. பழைய நினைவுகள்… அந்தப் படத்தை தொடர்ந்து 6 நாட்கள் இரவுக் காட்சி 12 கிமீ சைக்கிள் மிதித்துப் போய் பார்த்தது நினைவுக்கு வந்தது (கம்பங் கொல்லைக்கு இரவுக் காவலுக்குப் போவதாகக் கூறிவிட்டு, கொல்லைக்கு நடுவில் உள்ள பரணில் புத்தகங்களை ஆள் படுத்திருப்பது போல செட் செய்துவிட்டு, நான்கைந்து தேங்காய்களை அந்த இரவிலேயே மரத்திலிருந்து பிடுங்கி எடுத்துப்போய் காளியப்பன் கடையில் விற்றுவிட்டு சினிமாவுக்கு கிளம்புவோம்… டிக்கெட் குறைந்தபட்சம் 75 பைசா. அதிகபட்சம் ரூ 5தான்!).

இந்த மீனாட்சியில் ரஜினி படம் தவிர்த்து அதிக முறை நான் பார்த்தது, மைதிலி என்னைக் காதலி. அது ப்ளஸ் டூ காலம். அந்தப் படத்தை அத்தனை முறை பார்க்க நிச்சயம் ராஜேந்தரோ அமலாவோ காரணமல்ல.. வேறு ஒரு ‘அழகிய’ காரணமிருந்தது.

இளமை நாட்களின் விடுமுறை தினங்கள் அத்தனையும் இந்த மீனாட்சி அல்லது இன்னொரு அழகிய அரங்கமான சிகேசி (இப்போது இல்லை) அல்லது ஏலகிரி – ஜலகாம்பாறையில்தான் கழிந்திருக்கின்றன.

அப்போதெல்லாம் எங்கள் பகுதியில் திருப்பத்தூர் தொடங்கி பருகூர் வரை மட்டும் கிட்டத்தட்ட 30 தியேட்டர்கள் மற்றும் டூரிங் கொட்டகைகள் இருந்தன. எளிய வாழ்க்கை.. எளிமையான செலவில் பொழுதுபோக்கு என்றிருந்த காலம். இப்போது மாறிவிட்ட வாழ்க்கை முறையைப் போலவே, சூழலும் ரொம்பவே மாறிவிட்டது. யாரையும் குறை சொல்வதற்கில்லை… ஜஸ்ட் ஒரு பிளாஷ்பேக்!

-வினோ

என்வழி
10 thoughts on “தலைவர் படங்களும் மீனாட்சி தியேட்டரும்!

 1. Sathish

  //இந்த மீனாட்சியில் ரஜினி படம் தவிர்த்து அதிக முறை நான் பார்த்தது, மைதிலி என்னைக் காதலி. அது ப்ளஸ் டூ காலம். அந்தப் படத்தை அத்தனை முறை பார்க்க நிச்சயம் ராஜேந்தரோ அமலாவோ காரணமல்ல.. வேறு ஒரு ‘அழகிய’ காரணமிருந்தது.//
  என்ன பாஸ் அது ? ஸ்ரீவித்யா இல்லேன்னா Y Vijaya தான?

 2. anbudan ravi

  வினோ அவர்களே….இது வேலூர் திருப்பத்தூரா அல்லது காரைக்குடி திருப்பத்தூரா?

  அன்புடன் ரவி.
  ___________

  வேலூர் திருப்பத்தூர்.

  -வினோ

 3. sanjeev s

  //இந்த மீனாட்சியில் ரஜினி படம் தவிர்த்து அதிக முறை நான் பார்த்தது, மைதிலி என்னைக் காதலி. அது ப்ளஸ் டூ காலம். அந்தப் படத்தை அத்தனை முறை பார்க்க நிச்சயம் ராஜேந்தரோ அமலாவோ காரணமல்ல.. வேறு ஒரு ‘அழகிய’ காரணமிருந்தது.//

  வினோ வின் ஆட்டோகிராப் 🙂

 4. srikanth

  அப்ப நீங்க ப்ளஸ் 2 படிச்சிட்டு இருந்ததா சொன்னீங்க அப்படீனா? அது உங்களோட 17.18.வயசா இருக்கும். ம்ம்ம்ம் புரிஞ்சு போச்சு பாசு. படத்தோடத் தலைப்பிலேயே காதல் இருக்கே உங்க உற்சாகத்துக்கு சொல்லவா? வேணும்.

 5. prakash

  தேங்க்ஸ் வினோ for sharing your feelings. My guess is that during that you had love or crush with a girl named Mythili. Ennae ennodae guess correct a?

 6. senthil

  ஒன்று பாடல்களுக்காக மைதிலி படம் பிடித்து இருக்கலாம் அல்லது அந்த காலத்தில் ராஜேந்தர் தி மு க வில் இருந்த காரணமாக இருக்கலாம்!

 7. Baskaran

  ஹலோ வினோ ,

  //இந்த மீனாட்சியில் ரஜினி படம் தவிர்த்து அதிக முறை நான் பார்த்தது, மைதிலி என்னைக் காதலி. அது ப்ளஸ் டூ காலம். அந்தப் படத்தை அத்தனை முறை பார்க்க நிச்சயம் ராஜேந்தரோ அமலாவோ காரணமல்ல.. வேறு ஒரு ‘அழகிய’ காரணமிருந்தது.//

  லவர் நேம் மைதிலிய ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *