BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படத் தலைப்பு கபாலி.. உலக அளவில் ட்ரெண்டிங் ஆனது!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படத் தலைப்பு கபாலி.. உலக அளவில் ட்ரெண்டிங் ஆனது! 

wAnUs5c

சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படத் தலைப்பான கபாலி உலக அளவில் இன்று ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனது.

இந்திய சினிமாவின் அடையாளம் என அழைக்கப்படும் ரஜினிகாந்த், லிங்கா படத்துக்குப் பிறகு மெட்ராஸ் இயக்குநர் ரஞ்சித் இயக்குநர் புதிய படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் அவருடன் முற்றிலும் புதிய முகங்களாக, எந்த வகையிலும் வணிக  மதிப்பற்ற கலை, தினேஷ், ராதிகா ஆப்தே போன்றவர்கள் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்துக்கு முதலில் காளி, பிறகு கண்ணபிரான் என தலைப்பிடப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இப்போது அந்தப் படத்துக்கு கபாலி என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கபாலி என்ற பெயர் மயிலாப்பூர் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் பிரபலமாக உள்ள பெயராகும். மயிலையில் சில ஆண்டுகள் முன்பு வரை கபாலி என்ற பெயரில் ஒரு திரையரங்கம் நடந்து வந்தது. உலகப் புகழ் பெற்ற கபாலீஸ்வரர் கோயில் உள்ளதும் இங்குதான்.

கபாலி என்ற பெயரில் வாழ்ந்த நிஜ தாதாவின் கதைதான் இந்தப் படம் என்றும் சொல்கிறார்கள்.

இந்தத் தலைப்பை அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் கபாலி என்பது உலக அளவில் ட்ரெண்டிங்கானது.

இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் கபாலி என்பது காமெடியன் அல்லது காமெடி வில்லனின் பெயராக மட்டுமே இருந்தது. முதல் முறையாக இந்த கபாலி என்ற பெயர் நாயகனின், அதுவும் ஒரு சூப்பர் ஸ்டாரின் பெயராக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது!

-என்வழி




4 thoughts on “சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படத் தலைப்பு கபாலி.. உலக அளவில் ட்ரெண்டிங் ஆனது!

  1. Uma Ravi

    எங்கள் கபாலி! நீ வாழி பல்லாண்டு.
    எங்கள் மன்னா போற்றி போற்றி !!!
    எங்கள் இறைவா போற்றி போற்றி !!!

  2. Badru

    //இந்தப் படத்தில் அவருடன் முற்றிலும் புதிய முகங்களாக, எந்த வகையிலும் வணிக மதிப்பற்ற கலை, தினேஷ், ராதிகா ஆப்தே போன்றவர்கள் நடிக்கிறார்கள்//
    ரஜினி படத்தில் இருக்கும் போது மற்ற வணிக மதிப்பு தேவை அற்றது…

  3. srikanth1974

    தலைவர் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    கபாலி என்ற பெயர் ஏற்கனவே சத்யராஜ் நடித்த இரண்டு படங்களில்
    இடம் பெற்றுள்ளது.

    [1] புது மனிதன் படத்தில் சத்யராஜின்’பெயர் – கபாலி

    [2] வால்டர் வெற்றிவேல் படத்தில் பொன்னம்பலத்தின் பெயர் – கபாலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *