BREAKING NEWS
Search

தொட்டுப் பார்க்க விரும்பிய பார்வையற்ற மாணவர்களைக் கட்டிப் பிடித்து முத்தம் தந்து பரவசப்படுத்திய தலைவர் ரஜினி!

கண்ணா.. உங்களுக்கு நான் என்ன செய்யணும்…! – பார்வையற்ற மாணவர்களின் அன்பில் நெகிழ்ந்த தலைவர்

10314622_599975883443403_8147428597806294031_n

மைசூர்: மைசூர் அருகே உள்ள மேல்கோட்டையில் பார்வையற்ற மாணவர்களைச் சந்தித்துப் பேசியதோடு, அவர்களைக் கட்டிப் பிடித்து முத்தம் தந்து அனுப்பி வைத்தார் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.

லிங்கா படப்பிடிப்புக்காக குழுவினருடன் மாண்டியாவில் முகாமிட்டுள்ளார் ரஜினி. முதல் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட அப்பகுதி பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள், ரஜினியை எப்படியாவது சந்தித்துப் பேச வேண்டும், படமெடுத்துக் கொள்ள வேண்டும் என விரும்பினர்.

டாக்டர் பிகே பால் என்பவரிடம் அவர்கள் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்து எப்படியாவது ரஜினியைச் சந்திக்க அழைத்துச் செல்லுமாறு கூறினார்களாம்.

ஆனால் படப்பிடிப்பு நடக்கும் இடம் எதுவென்று அவர்களுக்குத் தெரியவில்லையாம். உடனே அனைவரும் கிளம்பி மாண்டியா போலீஸ் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு ரஜினி ஷூட்டிங் நடக்கும் இடத்தைக் கேட்டுள்ளனர்.

மாண்டியாவிலிருந்து 34 கிமீ தொலைவில் உள்ள மேல்கோட்டை என்ற இடத்தில் படப்பிடிப்பு நடப்பதாக போலீசார் தெரிவித்தார்கள்.

மாணவர்கள் அங்கு சென்றபோது மழை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் விஷயம் தெரிந்ததும், இந்த மாணவர்களைச் சந்திக்க, கொட்டும் மழையில் குடைப் பிடித்தபடி வந்துவிட்டார் ரஜினி.

பார்வையற்ற மாணவர்கள் அப்போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒவ்வொரு மாணவரிடமும் பேசிய ரஜினி, அன்புடன் அவர்கள் கன்னத்தைத் தட்டி, நலம் விசாரித்தார். அனைவருடனும் படம் எடுத்துக் கொண்டார்.

தங்களுடைய கனவு நாயகனை சந்தித்த மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த ஐ.டி.எல்.கண் பார்வையற்றோர் இசைக்குழுவினர் கூறுகையில், “நாங்க ரொம்ப ஆவலா மேல்கோட்டைக்கு போனோம்.அங்கே போய் பார்த்தால் மழைக் காரணமாக ஷூட்டிங்,’கேன்சல்’ என்றார்கள்.

அடடா..இவ்வளவு தூரம் வந்தும்,தலைவரை பார்க்க முடியாம போச்சே என ஏமாற்றமடைந்தோம். அங்கு இருந்த ‘லிங்கா’படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்க‌டேசை சந்தித்து, ‘ரஜினி சாரை பார்த்து பேசுவதற்காக ரொம்ப தூரத்தில இருந்து வர்றோம்.காலையில இருந்து மைசூர்,மண்டியா முழுக்க அலைஞ்சி திரிஞ்சி தேடினோம்.தயவு செஞ்சி அவரை சந்திக்க ஏற்பாடு பண்ணுங்க‌’ என எல்லாரும் சேர்ந்து கேட்டோம்.

‘கண்ணா.. நான் ரஜினிகாந்த் வந்திருக்கேன்…’

மழைக்காக கேரவனில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ரஜினி சாரிடம் ராக்லைன் வெங்கடேஷ் போய் விஷயத்தை சொல்லியிருக்கிறார். ‘ஓ.. அப்டியா?’ என ஆச்சர்யத்தோடு,அடுத்த நிமிடமே தானே குடையை பிடித்துக் கொண்டு, கட்டிய லுங்கியோடே எங்களை பார்க்க வேகமாக நடந்து வந்துட்டார் ரஜினி சார்.

564xNx5_1887207g.jpg.pagespeed.ic.ey3I4aDIHZ

எங்க பக்கத்தில் வந்து  “கண்ணா..நான் ரஜினிகாந்த் வந்திருக்கேன். எல்லோருக்கும் வணக்கம். எப்படி இருக்கீங்க?” என சிரிச்சிக்கிட்டே கன்னடத்தில் கேட்டார். எங்களுடைய கனவு நாயகனை சந்திச்ச சந்தோஷத்தில் பாதி பேருக்கு பேச்சே வரலை.அப்புறம் நாங்க ஒவ்வொருவரும் கொண்டு வந்த ரோஜா மலர்களை அவருக்கு கொடுத்தோம்.

எங்க ஒவ்வொருத்தர் பேரையும் நல்ல கேட்டுட்டு, ‘வெரி குட்’என தோளில் தட்டிக் கொடுத்தார்.’என்னை பார்க்கிறதுக்கு இவ்ளோ தூரம் கஷ்டப்பட்டு வரணுமா?’ என கேட்டார். உங்களை பார்க்கணும்,தொடணும்,நிறைய பேசணும்.சின்ன வயசுல இருந்து நாங்க எல்லாம் உங்க ரசிகர்கள்.உங்களை சந்திக்கணும்கிறது எங்க கனவு. அதுக்காக இவ்வளவு எவ்வளவு தூரமா இருந்தாலும் வந்துடுவோம்,” என்றோம்.

‘உங்களுக்கு என்ன செய்யணும், சொல்லுங்க!’

‘என் முகத்தையே நீங்க பார்த்ததில்ல. வெறும் குரலை மட்டும் கேட்டு இப்ப‌டி பாசமாக இருக்கீங்களே? உங்களோட அன்புக்கெல்லாம் நான் என்ன பண்ண போறேன்? ஓ.கே. உங்களுக்காக நான் என்ன செய்யணும். சொல்லுங்க’ என ரஜினி சார் கேட்டார்.

‘எங்களுக்கு எதுவும் வேணாம் தலைவரே. நீங்க நிறைய படத்துல நடிச்சாலே போதும்’ னு சொன்னோம். அதன்பிறகு நாங்க எழுதி, இசையமைத்து பாடிய ‘ஐ.டி.எல்.பேண்ட் டி.வி.டி’யை அவருக்குக் கொடுத்தோம்.

1897854_599975870110071_2969568334235132212_n

அதை வாங்கிட்டு, ‘கண்டிப்பாக கேட்கிறேன்’ என சொன்னார். அப்புறம் அவருக்காக நாங்க எல்லாம் சேர்ந்து, ‘பொதுவாக என் மனசு தங்கம்.. ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்’ என்ற பாட்டைப் பாடினோம். ரொம்ப சந்தோஷப்பட்ட ரஜினி சார், ஒரு கட்டத்துல கண்கலங்கி, எங்களை கட்டிபிடிச்சி, முத்தம் கொடுத்தார். அதன் பிறகு எங்க எல்லாருக்கும் டிபன் கொடுக்க சொன்னார்.

அவரும் எங்களோடு சேர்ந்து டிபன் சாப்பிட்டார். அதன் பிறகு எங்க டீம்ல இருந்த நஜீநா என்ற பார்வையற்ற‌ பெண் கொண்டு வந்திருந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் படத்தை அவருக்கு பரிசாக வழங்கினார். அதனை வாங்கிக்கிட்டு, “பத்திரமா வீட்டுக்கு போங்க,பெங்களூருக்கு வந்து உங்களை ஒருநாள் கண்டிப்பா மீட் பண்றேன்,” என்று கூறினார்.

564xNxn1_1887206g.jpg.pagespeed.ic.IktdQztQlg

‘கோச்சடையான்’,’லிங்கா’ ரெண்டு படமும் பெரிய ஹிட் ஆகணும்’னு சொல்லி வாழ்த்திவிட்டு கிளம்பினோம்,” என மகிழ்ச்சி தாண்டவமாடும் மொழியில் பார்வையற்ற மாணவர்களான மனோகர், ரமேஷ் உள்ளிட்ட அனைவரும் ஆர்ப்பரிப்போடு சொல்லி முடித்தார்கள்.

பாசமுள்ள மனிதனப்பா..

தலைவர் மீச வைச்ச குழந்தையப்பா!

என்வழி
9 thoughts on “தொட்டுப் பார்க்க விரும்பிய பார்வையற்ற மாணவர்களைக் கட்டிப் பிடித்து முத்தம் தந்து பரவசப்படுத்திய தலைவர் ரஜினி!

 1. குமரன்

  /// அதன் பிறகு எங்க எல்லாருக்கும் டிபன் கொடுக்க சொன்னார்.
  அவரும் எங்களோடு சேர்ந்து டிபன் சாப்பிட்டார். ///

  நம் வயிறும் மனமும் நிறைந்தன.
  நல்ல மனம் வாழ்க.
  நாடு போற்ற வாழ்க.

 2. Sargunaraj

  நம்ம தலைவர் பாசமுள்ள தலைவர் ………

  கிரேட் தலைவா……………………

 3. srikanth1974

  தெய்வத்தின் செயல் சாமான்யப்பட்ட மனிதர்களுக்கு புரியாது என்பார்கள்
  அதுபோலதான் இந்த ஆச்சர்யமும் நாங்கள் உன்னைப் பார்த்து ரசித்து
  கைத்தட்டி விசிலடிப்பது என்பது வேறு ஆனால் இந்த பார்வையற்ற
  அன்பு சகோதர சகோதரிகளுக்கு உன்மீது ஈர்ப்பு வர காரணம் என்னவாக இருக்கமுடியும் உன் பெயரில் உள்ள காந்தத்தை தவிர
  உன் உருவத்தைக்கூட பார்த்திராத இந்த அன்பு உள்ளங்கள்
  உனது குரலால் வசீகரிக்கப்பட்டவர்கள்.
  உன் குரலால் இவர்களை ஈர்த்த நீ
  உண்மையிலேயே தெய்வீகக் கலைஞன்
  உன்மீது குறைக் கூறுவோர் உணரட்டும் இந்த
  உன்னத ஆச்சரியத்தை ம்ம் கண்டிப்பாக அவர்களால்
  உணர முடியாது காரணம் ?
  தெய்வத்தின் செயல் சாமான்யப்பட்ட மனிதற்கே புரியாது என்கிறபோது
  உன்னை குறைக் கூறும் கழிச்சடைகளுக்கும்,சாக்கடைகளுக்கும்,
  இந்தப் பூக்கடையின் மனம் என்றும் புரியாது. நன்றி.

  உன் செயலால் பெருமைப்படும்
  உன் அன்பு ரசிகன்
  ப.ஸ்ரீகாந்த்.

 4. sivashanmugam

  படிக்க படிகா கண் கலங்குது பாஸ்

 5. kumaran

  பாசமுள்ள தலைவன் , மீச வச்ச குழந்தை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *