BREAKING NEWS
Search

பெங்களூரில் ரஜினி… அதிகாலையிலேயே பார்க்கக் குவிந்த மக்கள்!

பெங்களூரில் ரஜினி… அதிகாலையிலேயே பார்க்கக் குவிந்த மக்கள்!
 thalaivar-2
பெங்களூர்: பெங்களூரில் உள்ள தனது வீட்டில் இன்று அதிகாலை மக்களுக்கு தரிசனம் தந்தார் ரஜினி.தன்னைப் பார்க்க வந்தவர்களை வணங்கிய ரஜினி, வீட்டின் பால்கனியில் நின்றபடி மக்களை நோக்கி பறக்கும் முத்தம் தந்தார்.

Withfans

பெங்களூரில் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ளது ரஜினியின் வீடு. இரு தினங்களுக்கு முன் இந்த வீட்டுக்கு வந்துவிட்டார் ரஜினி. இன்றுதான் அவர் பெங்களூரில் இருக்கும் தகவல் பரவியது, உடனே அதிகாலையிலேயே அவரைச் சந்திக்க ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் வீட்டுக்கு முன் திரண்டனர்.

thalaivar-3

உடனே வெளியில் வந்த ரஜினி, பால்கனியிலிருந்து அவர்களைப் பார்த்து வணக்கம் சொன்னார். ரசிகர்களைப் பார்த்து கையசைத்தவர், தலைவா தலைவா என்று வந்த கோஷத்தைப் பார்த்து ஒரு பறக்கம் முத்தம் அனுப்ப, ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.

பின்னர் அக்கம் பக்கம் வீடுகளில் உள்ளவர்களுக்கு தொந்தரவு தரும் விதத்தில் யாரும் சத்தம் போடாமல், அமைதியாக, பத்திரமாகச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

thalaivar-4

கீழே இறங்கி வாசலுக்கு வந்த ரஜினியிடம் மீடியாக்காரர்கள் பேட்டி கேட்க, ‘அதெல்லாம் வேண்டாமே. ச்சும்மா ஜனங்களப் பார்க்க வந்தேன். பேட்டி வேண்டாம்,’ என்றார் நாசூக்காக. அதைப் புரிந்து கொண்டு அமைதியாக மீடியாக்காரர்களும் நகர்ந்துகொண்டனர்.

ரஜினியுடன் அவரது நெருங்கிய நண்பர்கள் உடனிருந்தனர்.

-என்வழி



9 thoughts on “பெங்களூரில் ரஜினி… அதிகாலையிலேயே பார்க்கக் குவிந்த மக்கள்!

  1. S. RAVI

    இறைவனை நேரில் சந்தித்தது ஆசி பெற்றவர்கள்.
    கொடுத்து வைத்தவர்கள்.
    வாழ்க வளமுடன்.

  2. saravanan

    தமிழில் ஒரு புதிய வலைத்திரட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது, உங்கள் தளத்தை மேலும் பிரபலபடுத்த எங்களுடைய வலைத்திரட்டியில் உறுப்பினராக சேர்ந்து புக்மார்க் செய்யுங்கள்.

    எங்களின் இணையதள முகவரி : http://www.fromtamil.com/

  3. jawahar

    நமக்கு இப்படி ஒரு தரிசனம் தருவாரா ……தலைவா …….

  4. srikanth1974

    தலைவர் அவர்கள் வருடா வருடம் தொலைகாட்சி மூலம் மக்களுக்கும்,
    தனது ரசிகர்களுக்கும்,புத்தாண்டு வாழ்த்துக்களையும்,பொங்கல் ,தீபாவளி
    மற்றும் மற்ற மத பண்டிகை வாழ்த்துக்களைத் தெரிவித்தாலே போதுமானது.
    அதுவே எல்லோருக்கும் ஊக்கத்தையும்,உற்சாகத்தையும்,கொடுக்கும்.

  5. saktheeswaran

    உண்மையான தலைவர் என்றால் ரஜினி ஒருவர் மட்டுமே

  6. saranya

    ஏப்ரல் 14-ல் கோச்சடையான் ரிலீஸ்.. இந்த முறை மிஸ்ஸாகாது! – சௌந்தர்யா நம்பிக்கை. இது உங்க கிட்ட அவங்க எப்போ சொன்னாங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *