BREAKING NEWS
Search

முத்து படத்திலிருந்தே நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன்! – மலாக்கா கவர்னர்

தலைவர் ரஜினியின் தீவிர ரசிகர் மலேசிய கவர்னர்!

mlkrajini15 021

மலாக்கா: முத்து படம் பார்த்ததிலிருந்தே நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் என்று மலாக்கா கவர்னர் முகமது கலீல் யாகூப் தெரிவித்தார்.

கபாலி’ படத்தின் படப்பிடிப்புக்காக நேற்று அதிகாலை மலேசியா தலைநகர் கோலாலம்பூர் சென்றடைந்தார் ரஜினி.

ரஜினியின் வருகையையொட்டி கோலாம்பூர் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விமான நிலையத்தில் ரஜினிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, விலையுயர்ந்த சொகுசு காரில் பயணம் செய்த ரஜினி, அங்கிருந்து நேராக மலாக்கா சென்றடைந்தார். மலாக்காவிலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. மலாக்கா கவர்னர் முகமது கலீலைச் சந்தித்த ரஜினி, அவருடன் சிறப்பு விருந்திலும் கலந்துகொண்டார். இந்த விருந்தில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும் கலந்துக்கொண்டார்.

விருந்துக்குப் பிறகு மலாக்கா கவர்னர் கூறுகையில், “சூப்பர் ஸ்டார் ரஜினியை நான் முதன் முதலில் விமானத்தில் சந்தித்தேன். அதன் பிறகு இப்போதுதான் நெருக்கமாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மிகச் சிறந்த மனிதர் அவர்.

முத்து படம் பார்த்ததிலிருந்தே நான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகன். இப்படி ஒரு சூப்பர் ஸ்டாரை இன்று சந்தித்ததும் விருந்தளித்ததும் எனக்கு மிக மகிழ்ச்சியான தருணம்,” என்றார்.

இதையடுத்து, மலேசியா பிரதமரை ரஜினி சந்திக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த வாரம் அச் சந்திப்பு நடக்கும் எனத் தெரிகிறது.

இன்று முதல் மலாக்காவில் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. தொடர்ந்து நவம்பர் 2-ந் தேதி வரை மலாக்காவிலேயே படப்பிடிப்பு நடத்தவுள்ளனர். அதைத்தொடர்ந்து, மலேசியாவின் இரட்டை கோபுரம் உள்ளிட்ட முக்கியமான இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள்.

-என்வழி




9 thoughts on “முத்து படத்திலிருந்தே நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன்! – மலாக்கா கவர்னர்

  1. srikanth1974

    நமது மன்னனின் புகழை மலேஷியா இரட்டை கோபுரங்கள்
    அண்ணாந்து பார்த்தன.

  2. arulnithyaj

    தலைவர்………..தலைவர் ……தலைவர்……………..தேங்க்ஸ் வினோ அண்ணா

  3. kumaran

    தலைவரின் புகழ் ஆச்சரியம் அளிக்கிறது

  4. கபிலன்

    இது தான் தலைவரின் செல்வாக்கு. இங்குள்ள சில குருவிகள் பருந்தாக ஆக முயற்சி செய்கின்றது. உலகின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டும் தான் என்பது இந்த நிகழ்வின் மூலம் நீரூபணம் ஆகிவிட்டது.

  5. enkaruthu

    இதே வே ஒருவருக்கு நடந்திருந்தால் அவ்வளவுதான்.யாரோ ஒரு மலேசியகரருக்கு தெரிவது இங்கு தமிழ் நாட்டில் இருக்கும் சில பேருக்கு தெரிய தெரிய மாட்டேங்குது .தமிழன் அழிவதே பொறமை என்னும் ஒரு குணத்தால்தான்..ஒன்னும் இல்லை தலைவருக்கு பின்னாடி உள்ளவரின் முகத்தை பாருங்கள் எவ்வளவு சந்தோசம் என்று.தலைவா நீ என்றும் சகாப்தம்தான்.

  6. raj

    My mind goes back to 2011 – Our Thalaivar gone to Singapore in ambulance ,now by god grace he is walking like lion and acting films – Thank GOD , Thank God …….

  7. மிஸ்டர் பாவலன்

    //இதே வே ஒருவருக்கு நடந்திருந்தால் அவ்வளவுதான்//

    மறைமுகமாக உலகநாயகனை குறிப்பிடுவது போல் இருக்கிறது..

    -=== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *