ரஜினி – ரசிகர் சந்திப்பு திருவிழா பார்ட் 2!
சென்னை: கிட்டத்தட்ட 4 மாதங்களாக தள்ளிப் போடப்பட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான இரண்டாம் கட்ட சந்திப்பை வரும் டிசம்பர் 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடத்துகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்தச் சந்திப்பின்போது, தனது அரசியல் பிரவேசம், கட்சி தொடங்குவது பற்றி அதிகாரப்பூர்வமாக ரஜினி அறிவிப்பார் என்று தெரிகிறது.
கடந்த மே மாதம் 6 நாட்கள் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் ஒரு பகுதியினரைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டார் ரஜினி. அப்போது தனது அரசியல் பிரவேசம் பற்றி ரசிகர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து ரசிகர்களைச் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இரண்டாம் கட்ட சந்திப்பு தள்ளிப் போடப்பட்டது.
இப்போது இரண்டாம் கட்ட சந்திப்பு குறித்து உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பு டிசம்பர் 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ராகவேந்திரா மண்டபத்தில் நடக்கிறது. தினசரி 1000 ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து ரஜினி புகைப்படம் எடுத்துக் கொள்ளவிருக்கிறார். இதற்காக உரிய பாதுகாப்பு தருமாறு சென்னை மாநகர கமிஷனருக்கு அகில இந்திய ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதம் மீடியாவில் வெளியானதைத் தொடர்ந்தே, சந்திப்பு உறுதி என்பது தெரிய வந்தது.
இந்த சந்திப்பின்போது, தனது அரசியல் பயணம், கட்சி உள்ளிட்ட விவரங்களை ரஜினி வெளியிடுவார் எனத் தெரிகிறது.
ரஜினி எல்லாம் அரசியலுக்கு வர மாட்டார் என்று சொல்லி கொண்டே இருப்பவர்கள் அவர் வந்து விட்டால் ஒட்டு போட ரெடி என்று சொல்லி விட்டு கதற வேண்டும்.
Iam praying to god for getting me a chance to take a snap with thalaivar…