BREAKING NEWS
Search

திருமண நாளன்று ரசிகர்களைச் சந்தித்தார் தலைவர் ரஜினி!

திருமண நாளன்று ரசிகர்களைச் சந்தித்தார் தலைவர் ரஜினி!

rajini-fans

சென்னை: இன்று திருமண நாள் காணும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களை வீட்டில் சந்தித்தார்.

தலைவர் ரஜினி – லதா அம்மா தம்பதியினருக்கு இன்று 35 வது திருமண நாளாகும்.

வழக்கமாக ஆண்டின் விசேஷ நாட்களில் ரஜினி வீட்டுக்குச் சென்று அவரை வாழ்த்துவதும் வாழ்த்துகள் பெறுவதும் ரசிகர்களின் வழக்கம்.

புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, ரஜினி பிறந்த நாள், திருமண நாள் போன்ற நாட்களில் தவறாமல் ரஜினியின் வீட்டு முன் கணிசமான ரசிகர்கள் திரண்டுவிடுவார்கள்.

பெரும்பாலும் அவர்களை ஏமாற்றாமல், சந்தித்து வாழ்த்தி அனுப்புவார் சூப்பர் ஸ்டார். அவர் இல்லாத நேரங்களில் லதா ரஜினி ரசிகர்களைச் சந்திப்பார்.

rajini-fans6

இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி. அடுத்து இன்று திருமண நாளன்றும் சந்தித்தார்.

காலையிலேயே ரஜினி – லதா தம்பதியரைப் பார்க்க ஏராளமானோர் குவிந்திருந்தனர். அவர்களை ரஜினியின் உதவியாளர் சத்தியநாராயணா ஒழுங்குபடுத்தினார். பின்னர் ரஜினி வெளியில் வந்து சிறு மேடையில் நின்றபடி ரசிகர்களை நோக்கி கும்பிட்டார்.

ரசிகர்கள் அவரைப் பார்த்து தலைவா.. வாழ்த்துகள் என்று முழங்கினர். அவரும் சிரித்தபடி நன்றி கூறி வாழ்த்துகளை ஏற்றார்.

-என்வழி




5 thoughts on “திருமண நாளன்று ரசிகர்களைச் சந்தித்தார் தலைவர் ரஜினி!

  1. M.MARIAPPAN

    அபூர்வ தம்பதிகளுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

  2. saravanan

    மிக்க மகிழ்ச்சி,

    கண்கள் கலங்கின, தலைவரை பார்த்த பின்.

    நன்றி கெட்ட ஓநாய்களே, எங்கள் தலைவரின் புன்னைகைக்கு நீங்கள் ஈடாக முடியாது.
    புது தெம்போடு, வீர நடைபோட்டு, உங்களை துவம்சம் செய்ய வருகிறார் விரைவில்.

  3. Radha Ravi

    இன்று (26.02.2015) நம் அன்பு தெய்வத்தின் திருமண நாள்.
    சிவனும் பார்வதியும் போல் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களும் லதா அம்மையார் அவர்களும் பல்லாண்டு காலம் நோய் நொடி ஏதுமில்லாமல் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  4. Sankar

    see below link.

    ரஜினியுடன் மோதல் – ஜகா வாங்கிய கட்சிகள் – நல்லா இருக்கு படிக்க. சிங்கு potta பையன் கேட்டும் தூண்டியும் கட்சிகள் தயங்கி உள்ளன. சில கட்சிகள் தலைவர் பக்கம் நியாயம் உள்ளதாக சொல்லி உள்ளன. சிங்கு potta பையன் இப்போ புரிஞ்சிட்டு இருப்பான். தாணுவோட பதில் பாருங்க “ரஜினி என்ற ஒற்றை மனிதரால் சினிமாவில் லட்சம் மனிதர்கள் பிழைத்திருக்கிறார்கள். அவரை அசிங்கபடுத்தும் விதமாக சிங்கு டீம் செயல் படுவது யாரும் விரும்ப வில்லை” என்று தெளிவாக சொல்லி உள்ளார்.

    வாழ்க தலைவர்.
    வளர்க அவர் புகழ்.

    https://www.kumudam.com/magazine/Reporter/2015-02-27/flipbook.php#6/z

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *