BREAKING NEWS
Search

அமலா – நாகர்ஜூனா மகனை தமிழில் அறிமுகப்படுத்த ரஜினியிடம் கோரிக்கை!

அமலா – நாகர்ஜூனா மகனை தமிழில் அறிமுகப்படுத்த ரஜினியிடம் கோரிக்கை!

rajiniinkrishnarjunamovies_006ங்கள் மகன் அகிலை தமிழில் நாயகனாக அறிமுகப்படுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கேட்டுக் கொண்டுள்ளனர் நடிகை அமலா – நடிகர் நாகார்ஜூன் தம்பதி.

மனம் என்ற படத்தில் அறிமுகமானவர் அகில். இப்போது அவர் பெயரிலேயே உருவாகும் புதிய படத்தில்  (அகில்) நடிக்கிறார்.

இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சி. கல்யாண் அந்த உரிமையைப் பெற்றுள்ளார்.

இந்தப் படத்துக்காக ஒரு பிரமாண்ட விழா நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அதில் கலந்து கொண்டு தங்கள் மகனை வாழ்த்தி அறிமுகப்படுத்துமாறு ரஜினிக்கு அமலாவும் நாகர்ஜூனாவும் na1-790x415அழைப்பு விடுத்துள்ளனர்.

ரஜினியும் விழாவில் கலந்துகொண்டு அகிலைத் தமிழில் அறிமுகம் செய்வார் என்று படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளார்கள்.

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *