BREAKING NEWS
Search

ட்விட்டரில் இணைந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.. சில நிமிடங்களில் பல்லாயிரம் ரசிகர்கள் அவரைத் தொடர்ந்தனர்!

ட்விட்டரில் இணைந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.. சில நிமிடங்களில் பல்லாயிரம் ரசிகர்கள் அவரைத் தொடர்ந்தனர்!

233596-rajini

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சமூக வலைத்தளமான ட்விட்டரில் இணைந்தார்.

இதனை அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் மிக அதிக அளவு பயன்படுத்தப்படும் பெயராக ரஜினிகாந்த் பெயர் உள்ளது.

பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் ரஜினி பெயரில் ஏராளமானோர் பக்கங்களைத் திறந்து செயல்பட்டு வருகின்றனர். ரஜினி இதுபற்றி எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை.

ட்விட்டரில் ஏற்கெனவே சூப்பர் ஸ்டார், ரஜினி, ரஜினிகாந்த் என்ற பெயர்களில் பக்கங்களைத் திறந்துள்ளனர் ரசிகர்கள். ஆனால் ரஜினி இதுவரை எந்த சமூக வலைத் தளத்தில் சேராமல் இருந்தார். அமிதாப், கமல் உள்ளிட்ட பிரபலங்கள் அத்தனை பேரும் இந்த வலைத் தளங்களில் உள்ளதை அவர் அறிந்தே இருந்தார்.

இந்த நிலையில் இன்று திடீரென ட்விட்டரில் இணைவதை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள வீடியோ பேட்டியில், “என் ரசிகர்கள் ஏராளமானோர் நான் சமூக வலைத் தளத்தில் இருக்க வேண்டும் என விரும்பினர். அவர்கள் விருப்பத்தை ஏற்று இன்று முதல் ட்விட்டரில் இணைகிறேன்,” என்று கூறியுள்ளார்.

இப்படி அவர் அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் ரஜினியைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தொட்டது.

இன்றைக்குள் ஒரு லட்சத்தைத் தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டாரின் ட்விட்டர் ஐடி @SuperStarRajini

 




11 thoughts on “ட்விட்டரில் இணைந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.. சில நிமிடங்களில் பல்லாயிரம் ரசிகர்கள் அவரைத் தொடர்ந்தனர்!

  1. Marthu

    இந்த நொடி தலைவரின் டிவிட்டர் கணக்கு 1 லட்சத்தைத்தாண்டிவிட்டது..

  2. Marthu

    பேஸ்புக் டெரெண்டிங்கிலும் தலைவர் தான் மதியம் முதல் நொ.1

  3. குமரன்

    டுவிட்டரையும், முக நூலையும் நான் அவ்வளவாக ரசிப்பதில்லை, அவற்றால் விளையும் தீமைகள் குறித்த கவலைதான் காரணம்.

    ஆனால் இப்போது டுவிட்டரை சேர வேண்டும் போலிருக்கிறதே!

  4. anbudan ravi

    **மிக்க மகிழ்ச்சி தலைவா….உங்களுக்காக நானும் ட்விட்டரில் இணைகிறேன். இதுவரை facebookilo ட்விட்டெரிலொ எனக்கு கணக்கு கிடையாது…உங்களுக்கு இணையபோகிறேன்.

    **சிலசயங்களில் கடுமையான மோசமான விமர்சனங்களும் உங்களின் இணையத்தில் ரசிகர்கள் என்கிற போர்வையில் வரலாம். தயவு செய்து அதையும் எதிர்கொள்ளுங்கள் வழக்கம்போல் அமைதியாக.

    அன்புடன் ரவி

  5. saktheeswaran

    5 மணி நேரத்தில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி விட்டது
    ரஜினி ரஜினி தான்

  6. கணேசன் நா

    203324 followers within 20 hours……………

    the power of our thalaivar the magnet………………..

  7. Thalaivar fan

    He came just for his fans only, so ‘others’ should just stay away.
    Mr.elango is greatly welcome to convey all his questions to his so called karuppu mgr.

  8. யாரோ

    இதில் நேரிடையாக அவரே கருத்துக்களை பகிர்ந்து கொள்வாரா அல்லது பிரத்தியேகமாக பதிலளிக்க யாரையேனும் அமர்த்தியுள்ளாரா? அவரது நேரடி பங்களிப்பு இதில் இருக்குமாயின் இனி ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆகாயத்தில் தான் மிதப்பர்.

    — யாரோ

  9. மிஸ்டர் பாவலன்

    //ஆனால் இப்போது டுவிட்டரை சேர வேண்டும் போலிருக்கிறதே!//

    குமரன் அவர்களே.. நான் டுவிட்டேரில் தொடர்ந்து எழுதி வருவதை
    நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.. நன்றி!

    பக்ஷே.. ஞான் வேறு பெயரில் ‘write ‘ செய்யும்!

    -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *