BREAKING NEWS
Search

இந்தத் தலைமுறையின் உதாரணத் தம்பதிகளை வாழ்த்தி மகிழ்வோம்!

இந்தத் தலைமுறையின் உதாரணத் தம்பதிகளை வாழ்த்தி மகிழ்வோம்!

rajini-latha

ணக்காரன் படம் வெளியான பிறகு, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 26-ம் தேதி

நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்
பேரு விளங்க நல்லா வாழணும்…

-என்று ரஜினி – லதா தம்பதிகளை வாழ்த்துவது ரசிகர்களின் வழக்கமாகிவிட்டது.

திரையுலகம் என்றாலே ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, எப்போது வேண்டுமானாலும் முறிந்து போகும் உறவுகள் என்பதுதான் பலர் மனதிலும் உள்ள பிம்பம்.

இந்தத் தலைமுறையில் அதைத் தகர்த்த உன்னத கலைஞர், மனிதர், கணவர் ரஜினி.

உலகமே போற்றும் ஒரு ஒப்பற்ற கலைஞர், தனது குடும்ப வாழ்க்கையை தன்னைப் பின் தொடர்பவர்களுக்கும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டும். தலைவர் ரஜினியும்  லதா அம்மாவும் அப்படி வாழ்ந்து வரும் இணையற்ற தம்பதிகள்.

“மனைவி வந்த நேரம்தான் என் வாழ்க்கை சீரான பாதைக்குத் திரும்பியது… என் வாழ்க்கையின் எந்த முடிவையும் மனைவியைக் கேட்காமல் எடுத்ததில்லை. கணவன் – மனைவி என்றால் சின்னச் சின்ன சண்டைகள் வரத்தான் செய்யும்… அதையெல்லாம் ஜாலியாகக் கடந்து வர வேண்டும்,” என வெளிப்படையாகச் சொல்பவர் ரஜினி.

தன் கணவர் ரஜினிக்காக எதையும் செய்யத் தயங்காத உத்தமி லதா அம்மா. அவர் உடல் நலம் குன்றியிருந்தபோது நிலைகுலைந்து விடாமல், ஒரு இரும்புப் பெண்மணியாக நின்று அவர் நலம் பெற துணை நின்றார். கணவர் நலம் பெற்று வந்தததும், கடவுளுக்கு தன் முடியை காணிக்கையாக்கினார். ரஜினி என்ற மாபெரும் ஆளுமை சோதனைகளில் சிக்கும்போதும், அவருக்கு கவசமாகத் திகழ்ந்தவர், திகழ்பவர் லதா.

rajini-family-unseen-images01
35 ஆண்டுகள் இந்தத் தம்பதிகளின் படத்தைப் பார்க்கும்போதும் சரி, பெயர்களைச் சொல்லும்போதும் சரி.. தம் குடும்பத்தின் ஒரு அங்கமாக நினைத்து மகிழ்ந்து பரவசப்படுகிறார்கள் ஒவ்வொரு ரசிகரும்.

இந்த இருவரும் நீண்ட ஆயுளுடன், குறைவில்லாத மகிழ்ச்சியுடன் இந்த சமூகத்தின் உதாரணத் தம்பதிகளாகத் தொடர இயற்கையும் இறைவனும் அருள் புரியட்டும்!

-வினோ
என்வழி




13 thoughts on “இந்தத் தலைமுறையின் உதாரணத் தம்பதிகளை வாழ்த்தி மகிழ்வோம்!

  1. Ranganathan

    மேலும் மேலும் பல்லாண்டு காலம் நீங்கள் இருவரும் ஆரோக்யமாக வாழ வாழ்த்துக்கள். ரங்கநாதன் குடும்பத்தினர்.

  2. murugan

    தலைவா
    வாழ்த்த வயதில்லை
    வணங்கி மகிழ்கிறோம் !!!

  3. arulnithyaj

    தலைவரின் குடும்ப வாழ்க்கை என் போன்ற கோடிகணக்கான ரசிகர்களின் ஒரு உந்து சக்தி. தலைவரை வணங்கி,இன்னும் பல ஆண்டுகள் நீண்ட ஆயுளுடன் இன்று போல் என்றும் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன்

  4. Harikanth

    தலைவா!
    வாழ்த்த வயதில்லை
    வணங்கி மகிழ்கிறோம் !!!

  5. enkaruthu

    எதற்க்கெடுத்தாலும் விவாகரத்து என்ற உலகில் இவர்கள் உதாரண தம்பதிகள் .பல்லாண்டு வாழவேண்டும் தலைவர் குடும்பம..

  6. srikanth1974

    இருகரம் கூப்பி வணங்குகிறோம் தலைவா’

  7. s santhanakumar

    Thalaiva endrum ninkalthan enudaiya uyir, I wish u a very happy wedding day & many more returns of the day

  8. sivashanmugam

    வாழ்த்த வயதில்லை
    வணங்கிறோம் !!! தலைவா… & லதா அம்மா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *