BREAKING NEWS
Search

புதிய வடிவில் ‘நினைத்தாலே இனிக்கும்’ படம் – புதுமையாக தொடர் விளம்பரங்கள்!

புதிய வடிவில் ‘நினைத்தாலே இனிக்கும்’ படம் – விளம்பரங்கள்

ni-rajini

டந்த சில தினங்களாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாஸன், மெல்லிசை மன்னர் எம்எஸ்வி மற்றும் இயக்குநர் பாலச்சந்தரின் லேட்டஸ்ட் படங்களை மஞ்சள் மற்றும் சிகப்பு வண்ண பின்னணியில் தினசரி வெளியிட்டு, இன்னாரின் பலகோடி ரசிகர்களை மகிழ்விக்க… என்று விளம்பரம் செய்து வருகிறார்கள்.

ஆரம்பத்தில் ரஜினி, கமல் படங்களைப் பார்த்ததும் ‘இது எதற்காக’ என புரியாமல் தவித்த ரசிகர்கள்… மெல்லிசை மன்னர் மற்றும் பாலச்சந்தரின் படங்களை வைத்து வந்த விளம்பரங்களைப் பார்த்த பிறகு, ‘இது நினைத்தாலே இனிக்கும் படத்துக்கான விளம்பரம்’ எனப் புரிந்து கொண்டார்கள்.kanna

ஆம்.. நீண்ட நாட்களாக சொல்லிக் கொண்டிருந்ததை இப்போது நிஜமாக்கப் போகிறார்கள். நினைத்தாலே இனிக்கும் படத்தை புதிய தொழில்நுட்பத்தில், நல்ல ஒலியுடனும், புத்தம் புதுப் பொலிவுடனும் வெளியிடவிருக்கிறார்கள்.

msv

கவியரசர் கண்ணதாசன் – எம்எஸ்வியின் கூட்டணியில் கேட்கத் திகட்டாத பாடல்கள், மனதைக் கொள்ளை கொள்ளும் ரஜினியின் நடிப்பு, சிங்கப்பூர் பின்னணியில் கமல் – ஜெயப்ரதாவின் அழகிய காதல்…  புதிய வண்ணத்தில் மீண்டும் அனுபவிக்க தயாராகுங்கள்!

-என்வழி செய்திகள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *