சகுனியில் ரஜினி, கமல் பெயரைப் பயன்படுத்தியது ஏன்? – கார்த்தி
கார்த்தி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ள படம் சகுனி. அரசியல் பொழுதுபோக்குப் படமான சகுனி, தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியானது.
இரண்டு மொழிகளிலுமே படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், வசூல் சாதனை புரிந்துள்ளதாகவும் அறிவித்து, அந்த வெற்றியைக் கொண்டாட நேற்று பிரஸ் மீட் வைத்திருந்தனர் (அதுக்குள்ள எந்திரனோட வசூல் ஒப்பீட்டையும் ஆரம்பித்திருக்கிறார்கள் கப்சா வெப்சைட்காரர்கள்!).
நேற்று காலை ஹைதராபாதில் வெற்றிச் சந்திப்பை நடத்தியவர்கள், மாலையில் சென்னையிலும் நடத்தினர். இரண்டு இடங்களிலும் கார்த்தி கலந்து கொண்டார்.
உடன் நிறைய பேர். எல்லோருமே படத்தின் இமாலய வெற்றி பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அது எத்தகைய வெற்றி என்பது வரும் வெள்ளிக்கிழமை தெரிந்துவிடும்.
இருக்கட்டும்…
இந்தப் படத்தில் சந்தானத்தின் பெயர் ரஜினி. கார்த்தியின் பெயர் கமல்.
தமிழ் சினிமாவின் இரு சாதனை நடிகர்களின் பெயர்களை வைத்து காமெடி பண்ணியிருப்பது சரியா? என்று கார்த்தியிடம் கேட்டோம்.
அதற்கு கார்த்தி பதிலளிக்கையில், “இந்தப் படம் டீஸன்டான நல்ல பொழுதுபோக்குப் படம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.
இந்தப் படத்தில் சந்தானமும் நானும் ரஜினி – கமலாக வருகிறோம். அவர்கள் எப்படிப்பட்ட உயரத்தில் இருப்பவர்கள் என்று தெரிந்து, அவர்களின் பெயரை நல்ல விதமாகத்தான் படத்தில் பயன்படுத்தியுள்ளோம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ரஜினி சார், கமல் சார் பெயர் எங்கள் வெற்றிக்கு உதவியுள்ளது. மக்கள் அப்படி ரசிக்கிறார்கள். அதுதான் இந்த இரு சிகரங்களின் கிரேட்னஸ். அதற்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
வரும்போது எல்லாம் இப்படித்தாம்பா சொல்றீங்க..!
-என்வழி செய்திகள்
வரும்போது எல்லாம் இப்படித்தாம்பா சொல்றீங்க..! yes vino—dis bugger visai also done the same stunt.
vote for thalaivar at madem tussauds
http://www.behindwoods.com/rajni-individual-vote.html#ind