BREAKING NEWS
Search

ரஜினி – கமல் நடித்த நினைத்தாலே இனிக்கும் – டிஜிட்டலில் வெளியாகிறது!

ரஜினி – கமல் நடித்த நினைத்தாலே இனிக்கும் – டிஜிட்டலில் வெளியாகிறது!

1979-ம் ஆண்டு ரஜினி – கமல் நடிப்பில் வெளியான இசைக் காவியம் நினைத்தாலே இனிக்கும். இந்தப் படத்தை மீண்டும் புதிய மெருகுடன் வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளனர் ராஜ் டிவி நிறுவனத்தினர் (வீடியோ ரைட்ஸ், டிவி ரைட்ஸ் இவர்களிடம்தான் உள்ளது).

கர்ணன் படத்தை எப்படி டிஜிட்டலுக்கு மாற்றி, 5.1 ஒலியமைப்புடன் வெளியிட்டார்களோ, அதே போல நினைத்தாலே இனிக்கும் படத்தையும் வெளியிடப் போகிறார்களாம்.

33 ஆண்டுகளுக்குப் பிறகும் கேட்கும்போதெல்லாம் இனிமையின் வடிவமாக ஒலிக்கும் பாரதி கண்ணம்மா, சம்போ சிவ சம்போ, எங்கேயும் எப்போதும், இனிமை நிறைந்த உலகம், யாதும் ஊரே, நம்ம ஊரு சிங்காரி, நினைத்தாலே இனிக்கும், ஆனந்த தாண்டவமோ… உள்ளிட்ட 12 பாடல்களை டிஜிட்டலில் கேட்கப் போவதை நினைத்தால் மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. இந்தப் படத்தின் அத்தனைப் பாடல்களையும் எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். இசை, மெல்லிசை மன்னர் எம்எஸ்வி.

இளையராஜா தமிழ் திரை இசையில் கோலோச்ச ஆரம்பித்த காலகட்டம் அது. இந்தப் படத்தோடு வந்ததுதான் ரஜினி – ஸ்ரீதேவி நடித்த ப்ரியா. இரண்டு படங்களுமே வெற்றிதான். இரண்டு படங்களின் பாடல்களுமே மகா இனிமைதான் என்றாலும், வசூல், பாடல் ரிக்கார்டுகள் விற்பனையில் படைத்த சாதனைகளின் அடிப்படையில் ப்ரியா முதலிடத்தைப் பிடித்தது!

இந்தப் படத்தின் ஹீரோ கமல்தான் என்றாலும், படத்தின் கலகலப்பு நாயகன் ரஜினி. அவர் வரும் காட்சிகள் அனைத்தும் வெடிச் சிரிப்பும், உற்சாகமும் ததும்பும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. அந்த ட்ரம்பெட்டை அவர் வாசிக்கும் ஸ்டைலும், கிடாரை கையாளும் வேகமும் பார்க்க அத்தனை ஈர்ப்பாக இருக்கும்.  சிகரெட்டைத் தூக்கிப் போடுவதில் பூர்ணம் விஸ்வநாதனிடம் முதலில் பெட் கட்டிவிட்டு, பின்னர் சுண்டு விரலைக் காப்பாற்றிக் கொள்ள ஜகா வாங்குமிடம் காமெடியின் உச்சம்.

ரஜினி – கமலின் நண்பர்களாக வரும் ராஜப்பா, ராவ், சின்னச் சின்ன பாத்திரங்களில் வரும் கீதா, எஸ் வி சேகர் ஆகியோர் அப்படி ஈர்ப்பார்கள். அதுதான் கேபி டச்!

கர்ணனை விட தரத்திலும், தொழில் நுட்பத்திலும் சிறப்பாக இந்தப் படத்தைக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளனர். டால்பி டிஜிட்டல் முறையில் படத்தின் ஆடியோவை தரமுயர்த்தியுளளனர்.

ரஜினி படங்கள், என்றைக்கு ரிலீஸானாலும் அதை விநியோகிப்பவருக்கு ‘கோல்ட்’தான். அதை நினைத்தாலே இனிக்கும் படமும் நிரூபிக்கும்!

அப்படியே… தில்லு முல்லு போன்ற படங்களையும் ரீமேக் பண்ணுவதை விட டிஜிட்டலில் விடச் சொல்லுங்கப்பா!
-என்வழி செய்திகள்
5 thoughts on “ரஜினி – கமல் நடித்த நினைத்தாலே இனிக்கும் – டிஜிட்டலில் வெளியாகிறது!

 1. sfan

  அதானே அதை விட்டு தில்லுமுல்லுவை யாரோ பொடிபசங்களை வச்சு ரீமேக் பண்றோம்னு கேவலப்படுத்தாம டிஜிட்டல மேம்படுத்தி வெளியிடுங்க

 2. kumaran

  ஸ்ரீ ராகவேந்திரர் படத்தை ரீமேக் செய்தால் புதிய வரலாறு படைக்கும். இது சத்தியம்.

 3. r.v.saravanan

  ரஜினி படங்கள், என்றைக்கு ரிலீஸானாலும் அதை விநியோகிப்பவருக்கு ‘கோல்ட்’தான். அதை நினைத்தாலே இனிக்கும் படமும் நிரூபிக்கும்!

 4. குமரன்

  கடைசி வரி – வழக்கம் போல முதல் வரி!

 5. மிஸ்டர் பாவலன்

  இது போன்ற படங்கள் த்ரிஷாவிற்குக் கிடைக்கவில்லை என்ற
  குறை அவர் ரசிகர்களுக்கு என்றும் உண்டு.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *