BREAKING NEWS
Search

வயதை வென்ற சிகரங்கள்… இளம் தலைமுறைக்கு உதாரண நாயகர்கள் ரஜினி – கமல்!

வயதை வென்ற சிகரங்கள்… இளம் தலைமுறைக்கு உதாரண நாயகர்கள் ரஜினி – கமல்!

கோச்சடையானில் சூப்பர் ஸ்டார் ரஜினி, விஸ்வரூபத்தில் கமல்… இந்த இரு Legend-களின் பட ஸ்டில்களுக்குள்ள ஒற்றுமை பற்றியும் கடந்த வாரம் முழுக்க நிறைய நண்பர்கள் சொல்லிவிட்டார்கள்.

ஓங்கியுயர்ந்த மலை உச்சியில் சிவனின் மறுவடிவமாய் நின்று ருத்ரதாண்டவத்தை அப்படி ஒரு உக்கிரத்துடன் நெஞ்சமெல்லாம் நிறைந்துவிட்டார் ரஜினி என்றால், இங்கே பெண்மையும் மென்மையும் குழைந்த வடிவமாக நின்று கமல் மனசை அள்ளிவிட்டார்.. ஒரு பெண்ணால் கூட அந்த நளினத்தைக் காட்ட முடியாது என்பதை பக்கத்திலிருந்த ஆன்ட்ரியாவைப் பார்த்து தெரிந்து கொண்டோம்!

அப்போதுதான் புரிந்தது, கமல் ரசிகனுக்குள் ரஜினியும், ரஜினி ரசிகனுக்குள் கமலும் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துக் கொண்டிருப்பது. அவ்வப்போது உரசல்கள், வார்த்தை மோதல்கள் என வந்தாலும், அது தலைவர் பாடியதைப் போல ‘அடிச்சாலும் புடிச்சாலும் நீயும் நானும் இருவருக்கும் ரசிகர்கள்…!’

ரஜினியுடன் உலக அழகியே நடித்தாலும் எப்படி ரசிகர்கள் கவனம் ரஜினியை விட்டு நீங்குவதில்லையோ, அப்படித்தான் கமலுடன் வேறு எவர் நடனம் ஆடினாலும், கமலுக்கு பக்கத்தில் கூட அவர்களால் நிற்க முடிவதில்லை. அதற்கு மிகச் சிறந்த உதாரணம், விஸ்வரூபம் படத்தில் கமலும் ஆன்ட்ரியாவும் கதக் நடனக் கோலத்தில் நிற்கும் காட்சி!

இந்த இரு சிகரங்களும் வயதை வென்றவர்கள். வயதை பின்னோக்கி ஓட வைப்பவர்கள்!

எந்த வயதாக இருந்தால் என்ன.. முயற்சி என்பது தொடர்ச்சியான இயக்கம்போல நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படுகிறார்கள்.

அதனால்தான் மீடியாவின் முதல் பக்கம் இந்த இருவருக்கும் வசப்பட்டிருக்கிறது.

ரஜினி தாய்த் தமிழ் படத்தையே உலகமெங்கும் சக்கைப் போடு போட வைக்கிறார்… கமர்ஷியல் சினிமா மட்டுமல்ல, தொழில்நுட்பத்தில் உச்சத்தைத் தொட்ட படங்களின் நாயகனாகவும் திகழ்கிறார். (ரஜினி ஏற்கெனவே ஹாலிவுட் படம் நடித்துவிட்டார். சிவாஜிக்குப் பிறகு வந்த ஒரு ஹாலிவுட் வாய்ப்பை ஏற்கவில்லை என்பது வேறு விஷயம்!).

கமலுக்கோ ஒரு ஹாலிவுட் படத்தை நடித்து இயக்கும் வாய்ப்பு தேடிவருகிறது. அதுவும் ஆஸ்போர்ன் மாதிரி பெரிய தயாரிப்பாளரிடமிருந்து. இது அத்தனை சாமானிய விஷயமல்ல… உலகில் வேறு மொழி நடிகர்களில் ப்ரூஸ்லீ, ஜாக்கி சானுக்குப் பிறகு… நமது சிகரங்களுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது!

ரஜினியின் வித்தியாச உடல்மொழி, வைத்த கண்ணை எடுக்கவிடாமல் ஈர்க்கும் அவரது ஸ்டைல், எந்தப் பாத்திரமோ, அதுவாகவே மாறிவிடும் தன்மை, மிகக் கஷ்டமான பாவம் என்பதைக் கூட, சர்வசாதாரணமாக செய்துவிட்டு ஒன்றுமே தெரியாதவர் போல் நிற்கும் எளிமை… போன்றவற்றில்தான் ஜப்பானியர், கொரியர் உள்ளிட்ட ஆசியர்கள் மட்டுமல்ல, மேற்கத்திய ரசிகர்களும் ஈர்க்கப்பட்டுவிட்டனர்.

அவர்களுக்கு ரஜினியின் நேரடி ஆங்கிலப் படம்கூடத் தேவையில்லை. அவர் ஒரு படத்தை நேரடியாக தங்கள் நாடுகளில் ரிலீஸ் செய்தாலே போதும் என்ற நிலை உலகின் பல நாடுகளிலும் உருவாகியிருப்பதை என்னவென்பது!

உலகப் புகழ் டைம் பத்திரிகையின் டாப் 100 படங்களில் ஒன்றாக கமலின் நாயகன் இடம்பெற்றுள்ளது, ஆஸ்கர் விருதுகளைத் தாண்டிய பெருமை!

அதே டைம் மற்றும் பிபிசியின் டாப் பாடல்களில் இளையராஜா இசையில் ரஜினி நடித்த தளபதி பாடல் ‘ராக்கம்மா கையத் தட்டு…’ இடம்பெற்றிருப்பது கோச்சடையான் மகுடத்தில் கோஹினூர் வைரம்!

இருவரின் ரசிகர்களும் தங்கள் ஆதர்ஸ நாயகர்களின் படங்களை, அவற்றின் வசூலை ஒப்பிட்டுக் கொண்டாடி வந்தாலும், இந்த இருவர் படங்களும் ஒன்றுக்கொன்று வளரவே உதவியிருக்கின்றன. கூடவே தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கும் கொண்டு சென்றுவிட்டன.

இளம் நடிகர்களுக்கு இந்த இருவரையும் விட சிறந்த உதாரணங்களைச் சொல்ல முடியாது. இருவரையும் காப்பியடிப்பதோ, இருவர் படங்களையும் ரீமேக் செய்வதோ, அவர்களைப் போலவே பஞ்ச் வசனங்களை வைப்பதோ… எந்த வகையிலும் உதவாது.

ரஜினி – கமலின் அபார உழைப்பு… தங்கள் வயதை மறந்து இந்த காலகட்டத்துக்கேற்ப புதுப் புது விஷயங்களை, விமர்சகர்களைத் தோற்கடிக்கும் அளவுக்குத் தரவேண்டும் என அவர்கள் மெனக்கெடுவதை, ‘யார் அடுத்த சூப்பர் ஸ்டார்… உலகநாயகன்?’ என்று தாங்களே கேள்வி கேட்டு தாங்களே பதில் சொல்லிக்கொள்ளும் நடிகர்கள் கவனிக்க வேண்டும்!

மனதுக்குள் ஒரு பெரும் திருப்தி… தமிழ் சினிமா ஒவ்வொரு கட்டத்தில் சூப்பர் ஸ்டார்களை, சூப்பர் நடிகர்களைப் பார்த்திருக்கிறது. ஆனால் அவர்கள் அந்தந்த காலகட்டத்துக்குப் பிறகு, ஒரு நினைவு கூர்தலோடு நின்றுவிட்டார்கள். ஆனால் ரஜினியும் கமலும் மட்டும் காலத்தை வென்ற நாயகர்களாக நிலைப்பார்கள்… அதற்குக் காரணமும் இன்றைய நடிகர்கள்தான். நிச்சயம் இவர்களால் இந்த இரு சிகரங்களின் நிழல்களைக் கூடத் தொட முடியாது… அப்புறம் எங்கே சிகரங்கள் ஆவது!

ரஜினியையும் கமலையும் பார்க்கும்போதெல்லாம், நேர்மையோ, உண்மையோ இல்லாத அக்மார்க் போலிகளாகவே இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

எனவே நடிகர்களை விடுங்கள்… ரசிகர்களே, இந்த சாதனையாளர்களைப் புரிந்து ரசியுங்கள்., ரசனை மட்டுமல்ல, நல்ல லட்சியங்களும் கை கூடும்!

-வினோ
14 thoughts on “வயதை வென்ற சிகரங்கள்… இளம் தலைமுறைக்கு உதாரண நாயகர்கள் ரஜினி – கமல்!

 1. Baskaran

  ஹாய் வினோ,

  absolute true ! இயக்குனர் சிகரதிடமிருந்து மற்றும் இரு சிகரகள் !

  என்ன , கமலிக்கு கொஞ்சம் வாய் அதிகம் ! இருந்திட்டு போகட்டும் ! சில திறமையாளர்களுக்கு வாய் நீளம்….. ( ex .. MF ஹூசேன் )

  சிறந்த கட்டுரை !

  அதேன்னோவோ வினோ , உங்களுடைய பத்திரிகை அனுபவத்தை பல கட்டுரைகள் சிறந்த எழுத்தாளனாக காட்டியுருகின்றன ! அதில் இந்த கட்டுரையும் ஒன்று ! வாழ்த்துக்கள் !

 2. chozan

  வினோ நான் மிகவும் விரும்பி திரும்ப திரும்ப படித்த பதிவில் இது முதல் இடம் நடுநிலையான எதார்த்தமான கட்டுரை மிகவும் நன்றி

 3. umarfarook

  அருமையான பதிவு…. யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை என்பதே என் வாதம்.. இருவருக்குள்ளும் இருக்கும் அந்த நட்பை பொறாமை என்ற வார்த்தையினால் நாம் கொச்சபடுத்தாமல் இருந்தால் நல்லது.

 4. குமரன்

  ரஜினியும் கமலும் தத்தம்
  leg-end – இல் நிற்கும் படங்கள்
  அருகருகே அருமை!

 5. anbudan ravi

  தலைவர் எப்பொழுதுமே கமல் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். அனைத்து மேடைகளிலும் அவர் இதை நாகரிமாக வெளிப்படித்தி இருக்கிறார். ஆனால் கமலுக்கு எப்படி என்பது தெரியவில்லை அல்லது வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் தலைவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதற்கு முன் கமலுக்கு மட்டுமே தலைவரை பார்க்க அனுமதி கிடைத்தது. இருவரும் சந்தித்து கண்கலங்கிய நிகழ்ச்சி இன்னும் மனதை விட்டு அகலவில்லை….அப்பொழுதே தலைவனின் ரசிகர்கள் நெஞ்சத்தில் நல்ல மனிதனாக நீங்காத இடத்தை கமல் பிடித்துவிட்டார்.

  தலைவரின் படத்தை இரண்டு அல்லது மூன்று முறை பார்த்துவிடுவோம். கமல் படத்தை கண்டிப்பாக ஒரு தடைவையாவது பார்த்துவிடுவோம். இரு துருவங்கள் என்று பத்திரிக்கைகள்தான் தூண்டிவிட்டுக்கொண்டிரிக்கிறது.

  எனது நெருங்கிய நண்பன் ஒருவன் மிகச்சிறந்த மருத்துவர் – பல உறுப்புகள் இணைக்கப்பட்ட அறிவு மிக்க ஒரு விலங்குதான் மனிதன் என்று பகுத்தறிவு பேசும் நண்பனின் அறையில் இருப்பது தலைவனின் புகைப்படம். இதை என்னவென்று சொல்வது?

  தலைவனை துதிக்கிறோம் கமலை ரசிக்கிறோம். இதுதான் உண்மை.

  அன்புடன் ரவி.

 6. Rajpart

  கமல் தன் தொழிலில் சிறந்து விளங்கலாம். ஆனால் தலைவர் போல சிறந்த மனிதனாக விளங்க முடியுமா? வள்ளுவர்,விவேகானந்தர்,காந்தி இவர்களின் நெறிமுறைகளை பின்பற்றும் ஒரே மனிதன் தலைவர் மட்டுமே.தலைவரின் பண்புகளை பாதியளவு கடைபிடித்தாலே இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேறிவிடுவர்கள். கமலை பின்பற்றினால் என்னவாகும்? தலைவர் எல்லாத்துக்குமே உதாரணம். கமல் தன் தொழிலின் திறமைக்கு மட்டுமே உதாரணம்.

 7. Kannan

  அருமையான கட்டுரை…இரு ஜாம்பன்வகளை கையாண்டவிதம் சூப்பர்.
  .
  கண்ணன்

 8. மு. செந்தில் குமார்

  முதலில் தலைவர் ஸ்டில் தானே வந்தது ?
  (நான் நமது தளத்தில்தான் தலைவர் ஸ்டில்லை முதன் முதலில் பார்த்தேன்.)

  என் பார்வையில்:

  ரஜினி அவர்கள் – என்னை ஈர்த்த நல்ல நடிகர், நல்ல மனிதர், மிகச்சிறந்த சாதனையாளர், திகட்டாத என்டர்டைநர் மற்றும் தலைவர்,.
  – தலைவரையும் அவர் படங்களும் படிக்கும்.

  கமல் அவர்கள் : நல்ல -கதை, திரைகதை, சிறந்த இயக்குனர் இது போல இன்னும் பிற நன்றாக அமைந்து அவரும் கதாபாத்திரமாகவே மாறிய சில படங்களை மட்டும் பிடிக்கும்.
  -நல்ல படங்கள் மட்டும் பிடிக்கும்.

  ஆனால் இருவருமே சாதனையாளர்கள் என்பதால் நடிகர்களும் சரி ரசிகர்களும் சரி எல்லோருமே ஒரு தூண்டுகோலாக இவர்களை எடுத்துகொள்ளலாம் என்பதில் எனக்கு மாற்றுகருத்து இல்லை

 9. Suresh

  ரஜினி & அஜித் எப்பொழுதுமே கிரேட் ….

 10. keerthivasan

  சூப்பர் ஸ்டார் ரஜினி தான் கதா பாத்திரங்களை மக்கள் எளிதாக புரியும் வண்ணம் கேமரா conscious ஆக இல்லாமல் இயல்பாக செய்வார். கமல்ஹாசன் ஒரு professional நடிகர் என்பதை தான் prove seithurikkiran . அவன் நடிப்பை நான் என்றுமே மதிபதில்லை. செவாலியர் சிவாஜி, சூப்பர் ஸ்டார் ரஜினி, மற்றும் நடிப்புலக சக்ரவர்த்தி balaiah எனக்கு பிடித்த நடிகர்கள். mgr கமல்ஹாசன் நான் வெறுக்கும் நடிகர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *