BREAKING NEWS
Search

கே பாலச்சந்தர் நினைவஞ்சலி.. சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் பங்கேற்பு

கே பாலச்சந்தர் நினைவஞ்சலி.. சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் பங்கேற்பு

thalaivar-2

சென்னை: மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தரின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல் ஹாஸன் ஆகியோர் கலந்து கொண்டு அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் கடந்த டிசம்பர் 23-ந் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.  அவர் மரணமடைந்து 13-நாட்கள் ஆன நிலையில், 13-ம் நாள் நினைவஞ்சலி நேற்று பிற்பகல் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை பாலச்சந்தர் வீட்டில் நடத்துவதாக முதலில் திட்டமிட்டனர். உடனே ரஜினி, ராகவேந்திரா மண்டபத்திலேயே நடத்தலாம் என்று கூறி, முன்நின்று நிகழ்ச்சியை நடத்தினார்.

rajini-kamal

கே.பாலச்சந்தரின் நினைவஞ்சலி கூட்டத்தில் ரஜினியுடன், கமல் ஹாசன், சிவகுமார், ராஜேஷ், விவேக், தாமு, லாரன்ஸ், யூகி சேது, நடிகைகள் ஜெயசித்ரா, வாணி ஜெயராம், ஸ்ரீப்ரியா, மானு, குயிலி, லலிதா குமாரி, சுபா வெங்கட், தயாரிப்பாளர்கள் தாணு, பி.எல்.தேனப்பன், எடிட்டர் மோகன், இயக்குனர்கள் மணிரத்னம், சரண், விக்ரமன், வி.சேகர், சுரேஷ் கிருஷ்ணா, ஆர்.கே.செல்வமணி, ஏ.எல்.விஜய் மற்றும் பெப்சி சிவா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நினைவஞ்சலி கூட்டத்தில் பாலச்சந்தரின் உருவப்படத்துக்கு அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

-என்வழி




2 thoughts on “கே பாலச்சந்தர் நினைவஞ்சலி.. சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் பங்கேற்பு

  1. குமரன்

    பாலச்சந்தர் படத்துக்குத் தலைவர் அஞ்சலி செய்வது sari, அதில் எந்த முரண்பாடும் இல்லை.
    கமல்தான் கடவுள் என்பது வெறும் சிலை, அதை வணங்குவது மூட நம்பிக்கை என்று சொல்வாரே?
    “படத்துக்கு மலர் தூவுவதால் அது பாலச்சந்தருக்குப் போய்ச் சேருமா?” என்ற அறிவார்ந்த கேள்வியை தனக்குத் தனே கேட்டுக் கொள்வாரா?

  2. ravi

    இந்த படத்தில் நம் தலைவர் சூப்பர் ஸ்டார் என்னதே கண்ணையா மாதிரி தோற்றம் தருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *