BREAKING NEWS
Search

கோச்சடையான் டப்பிங்: பாதிப் பட வேலையை ஜஸ்ட் அரை நாளில் முடித்த சூப்பர் ஸ்டார்!

கோச்சடையான் டப்பிங்: பாதிப் பட வேலையை ஜஸ்ட் அரை நாளில் முடித்த சூப்பர் ஸ்டார்!

rajini-rasool-feat1

சென்னை: கோச்சடையான் படத்தின் டப்பிங் தொடங்கிவிட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினி இதில் கலந்து கொண்டு, பாதிப் படத்துக்கான டப்பிங்கை வெறும் அரை நாளில் முடித்துக் கொடுத்துவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இந்தியாவின் முதல் 3டி மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பப் படமான ரஜினியின் கோச்சடையானின் இறுதிக் கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதன் கிராபிக்ஸ் பணிகளுக்காக கடந்த வாரம் சீனா சென்றிருந்தது இயக்குநர் சௌந்தர்யாவின் தலைமையிலான குழு.

இப்போது சென்னையில் படத்தின் டப்பிங் வேலைகள் தொடங்கிவிட்டன. முதல் நாளிலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, தனது வேடத்துக்கான டப்பிங்கை பேசினார்.

rajini-rasool-2

கோச்சடையான் படத்தில் தன் பகுதிக்கான வசனங்களை வெறும் அரைநாளில் பேசி முடித்துவிட்டாராம் ரஜினி.

இந்த டப்பிங்கின்போது, சவுன்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டியும் உடனிருந்தார். ரஜினி டப்பிங் பேசிய வேகம் கண்டு வியந்த ரசூல், அது பற்றிக் கூறுகையில், “Look who is back in action?! கோச்சடையான் முதல் நாள் டப்பிங்கில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் அரை நாளில் பாதி வேலையை முடித்துவிட்டார். அவரை இத்தனை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் பார்ப்பதில் ஒரு ரஜினி ரசிகராக மிகவும் மகிழ்கிறேன். அவரது டெடிகேஷனும் கமிட்மென்டும் நம்பமுடியாத அளவுக்கு உள்ளன,” என்று தெரிவித்துள்ளார்.

அந்த வேகம்தானே தலைவரின் சிறப்பு!

-என்வழி ஸ்பெஷல்
22 thoughts on “கோச்சடையான் டப்பிங்: பாதிப் பட வேலையை ஜஸ்ட் அரை நாளில் முடித்த சூப்பர் ஸ்டார்!

 1. karthik

  மகிழ்ச்சி.. ஆரோக்கியமாக மீண்டும் நம்மவர் சினிமா உலகை ஆளட்டும்..

 2. குமரன்

  அந்த வேகம்தானே தலைவரின் சிறப்பு!

  எதிலும் விவேகமும் அவரது தனிச் சிறப்புதான்!

 3. vasanthan

  தலைவா ,,,,,உங்க குரலே எங்களின் எனர்ஜி டானிக்.துள் கிளப்புங்க ….

 4. mugilan

  தலைவ சீக்கிரம் அடுத்த படத்தை ஆரம்பியுங்கள் ரத்தமும் சதையுமாக உங்களை சூப்பர் ஹிட் படத்தில் வர வேண்டும்

 5. mohamed ibrahim

  superstarku ரஜினிகாந்த் என்று பெயர் வாய்த்த நாளை மறந்துவிட்டிர்களா . அதை பற்றி செய்தி வரவில்லையே

 6. srikanth1974

  எப்பவும்,எதிலும்,
  தலைவருக்கு ஈடு
  அவரோட ஸ்பீடு
  அதுவே அவரின் முதலீடு.
  எப்போ கோச்சடையான் வெளியீடு ?

 7. மிஸ்டர் பாவலன்

  விஸ்வரூபம்-2 படமும் எடுத்து முடிந்த நிலையில் கோச்சடையானுக்காக
  அதன் ரிலீஸ் டேட்ஸ் தள்ளிப் போகும் என நினைக்கிறேன். 2013 ஆண்டில்
  கோச்சடையான், விஸ்வரூபம் (1 & 2), ஐ மூன்றும் முக்கிய படங்களாக அமையும்.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 8. kumaran

  தலைவரிடம் உள்ள சிறப்பே அவரது great attitude !

 9. enkaruthu

  //விஸ்வரூபம்-2 படமும் எடுத்து முடிந்த நிலையில் கோச்சடையானுக்காக
  அதன் ரிலீஸ் டேட்ஸ் தள்ளிப் போகும் என நினைக்கிறேன். //

  ஏம்பா பாவலன் உங்களுக்கு மட்டும் இந்த பிறவி நாரத குணம் பட்டும் போகாதா.இதில் ஒரு சூப்பர் காமெடி வேறு.

  கமல் ஹசனை அவ்வை சண்முகியில் வெறுத்த நீங்கள் இன்று முஸ்லிமை அவர் விஸ்வரூபம் படத்தில் கேவல படுத்தியவுடன் உங்களுக்கே உரிய ஜாதி புத்தி இன்று ரஜினி படத்துக்காக கமல் படம் தள்ளிபோகுது என்று ஒரு காமெடி பீஸ் போல் சொல்ல வைக்கிறது.

  இதில் அப்ப அப்ப நான் ஒரு ரஜினி ரசிகர் என்ற பித்தலாட்டம் வேற.ஜாதி மற்றும் மத வெறி பிடித்த பாவலன் அவர்களே விஸ்வரூபம் எங்கள் சேலத்தில் ஏற்கனவே நீ என்ன பண்ணினாலும் உன் புரியாத மொக்கை படத்தை நாங்கள் பார்க்க தயாராக இல்லை என்று ஓரம் கட்டிவிட்டார்கள்.

  பாவலன் அவர்களே ரஜினி படத்துக்காக கமல் படம் தள்ளி போச்சு என்று சொன்னதில் இருந்தே நீங்கள் எவ்வளவு ஒரு பழம் என்று எங்களுக்கு தெரிகிறது .பாவம் பாவலன் நீங்கள் உங்கள் ஜாதி பாசத்தால் உங்கள் சுயமரியாதையை அப்ப அப்ப இலக்குகிரீர்கள்.

 10. Nandakumar

  Thalaiva .. want to see you in action in 3D… Everyone knows that you are always energetic.. this is one more example…

  To Kochadaiyaan team .. Please release the movie in “Dolby Atmos” and “Auro 3D” sound.. Want to hear thalaivar voice in the new technology..

  ………….Remembering the experience in watching Sivaji 3D in Dolby Atmos at Sathyam/Escape… 🙂

 11. மு. செந்தில் குமார்

  “தலைவ சீக்கிரம் அடுத்த படத்தை ஆரம்பியுங்கள் ரத்தமும் சதையுமாக உங்களை சூப்பர் ஹிட் படத்தில் வர வேண்டும்” – திரு. mugilan

  -இந்தப்படமும் (கோச்சடயான்) அப்படித்தான் இருக்கும்!

 12. மிஸ்டர் பாவலன்

  ‘என் கருத்து’ என்பவர் எவ்வளவோ குறிப்பிட்டும் இன்னும் அந்த
  ‘அவ்வை சண்முகி’ படம் பார்க்காததால் அவர் கருத்து புரியவில்லை.
  படமே பார்க்காமல் கமலை எப்படி வெறுக்க முடியும்? அதுவும் நான்
  கமல்-ரஜினி படங்களின் ரசிகன் என தான் பதிவுகளில் எழுதி உள்ளேன்.

  விஸ்வரூபம்-2 படம் பற்றி நான் ஹாஸ்யமாக எழுதியது மற்ற
  நண்பர்களுக்கு புரிந்தாலும் இதை வைத்து என்னை தாக்கி எழுதி உள்ளார்.

  ஜாதி வெறி, மொழி வெறி என ஏகப்பட்ட வசவுகள் வேறு அவர் பதிவில்.
  அவற்றில் எழுதுவும் உண்மை இல்லை என நண்பர்கள் அறிவார்கள்.

  இந்த வலையில் நான் எழுதுவது பலருக்கும் பிடிக்கவில்லை என்பதால்
  வழக்கம் போல் ஒரு நீண்ட break விடலாம் என நினைக்கிறேன். வணக்கம்.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 13. குமரன்

  என்கருத்து அவர்களே

  உங்களிடம்தான் எடுத்ததெற்கெல்லாம் ஜாதி பார்க்கும் குணம் அப்படியே இருக்கிறது. உங்களைப்போல அது பிறவிக் குணம் என்றெல்லாம் சொல்வது பகுத்தறிவு அல்ல. உண்மையில் இப்படிப்பட்ட வெறுப்பு இங்கே நடத்தப்படும் வெறுப்பு அரசியலாம் விளைந்ததே அன்றி வேறல்ல. இல்லாவிட்டால், வெறுமே பத்துக்கும் ஐந்துக்கும் சோதிடம் பார்க்கும் எல்லா ஜாதி இந்துக்களையும் உழைத்து சம்பாதிக்காமல் சுரண்டிப் பிழைப்பவர்கள் என்று கூறும் நீங்கள் வெளிநாட்டுக் கார் வாங்கிய ஒறே விஷயத்தில் மட்டும் 45 கோடி ரூபாய் வரி ஏய்த்துப் பிழைக்கும் அளவுக்கு பணம் வைத்திருக்கும் கருணாநிதி குடும்பத்தார் உழைப்பைக் கொண்டாடும் நிலை வராது. இல்லாவிட்டால் சுயமரியாதை, பகுத்தறிவு, தமிழ்ப்பற்று என்றெல்லாம் பசப்பி லட்சம் பேர் செத்தாலும் தம் மக்கள் மந்திரிப்பதவி பெற்று கோடிகளில் புரளவேண்டும் என்று “ஓய்வறியாமல் உழைப்போரை” வாழ்த்திப் பேசமாட்டீர்கள்.

 14. மிஸ்டர் பாவலன்

  //கருத்து சுதந்திரம் இங்கு எல்லோர்க்கும் உள்ளது … நம் என்வழி நண்பர்கள் நீங்கள் இல்லாமல் நிச்சயம் வருத்தபடுவார்கள்!!// (இளங்கோ)

  ‘என் கருத்து’ போன்றவர்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை
  என்றாலும் நான் மாறலாம் இல்லையா? பதிவு செய்தால் தானே பதிலுக்கு
  ஏச்சும், பேச்சும்? சும்மா படிச்சுவிட்டா போனால், எனக்கும் பிரச்சினை
  இல்லை; என்னிடம் இருந்து பதில் இல்லை என்றால் அதனால் அவரும் மகிழ்வு
  அடையலாம். இதுவே ஒரு நல்ல தீர்வாக அமையும். நன்றி.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 15. Boss

  பாவலர் உங்களுடைய பதிவு இல்லை என்பது கண்டிப்பாக வருத்தம் தான் எங்களக்கு… நீங்கள் மறுபரிசீலனை செய்யலாம் உங்க முடிவை…….!!!!! உங்கள் பதிவு நல்ல ஒரு ஆரோகியமான Debate ஆகையால் அதை விட வேண்டாம்…..!!!!

  ” என்கருத்து ” & others பாவலர் பற்றி கடுமையான வார்த்தைகள் உபயோகிப்பது வர்த்தம் அளிக்காது ?????? நண்பர்களே கொஞ்சம் உங்கள் பதிவு மரியாதையுடனும் கண்ணியத்துடனும் இருக்க வேண்டும் என்று நான் மட்டும் அல்ல நம் தலைவர் ரசிகர்கள் அனைவரும் விரும்புவர் அதை தான் தலைவரும் விரும்புவார்????

 16. Boss

  kindly ignore now read this with correction

  பாவலர் உங்களுடைய பதிவு இல்லை என்பது கண்டிப்பாக வருத்தம் தான் எங்களக்கு… நீங்கள் மறுபரிசீலனை செய்யலாம் உங்க முடிவை…….!!!!! உங்கள் பதிவு நல்ல ஒரு ஆரோகியமான Debate ஆகையால் அதை விட வேண்டாம்…..!!!!

  ” என்கருத்து ” & others பாவலர் பற்றி கடுமையான வார்த்தைகள் உபயோகிப்பது வர்த்தமலிக்கறது?????? நண்பர்களே கொஞ்சம் உங்கள் பதிவு மரியாதையுடனும் கண்ணியத்துடனும் இருக்க வேண்டும் என்று நான் மட்டும் அல்ல நம் தலைவர் ரசிகர்கள் அனைவரும் விரும்புவர் அதை தான் தலைவரும் விரும்புவார்????

 17. மிஸ்டர் பாவலன்

  //பாவலர் உங்களுடைய பதிவு இல்லை என்பது கண்டிப்பாக வருத்தம் தான் எங்களக்கு… நீங்கள் மறுபரிசீலனை செய்யலாம் உங்க முடிவை…….!!!!!///
  (Boss)

  Boss என்ற பெயரில் வந்துள்ள பதிவு நான் எழுதியது இல்லை. வேறொருவர்
  எழுதியது. இதற்கு பதில் கொடுக்கலாம் என தோன்றியதால் எழுதுகிறேன்.

  நான் ஒரு நீண்ட break விடுவதாக தான் எழுதி உள்ளேனே தவிர
  முழுமையாக நிறுத்தி விட்டதாக பொருள் கொள்ள வேண்டாம். முன்பும்
  கூட ‘பிரியா விடை’ பெறுவதாக எழுதி பிறகு ஒரு வாரம் கழித்து
  பழையபடி பதில் போட்டு வந்துள்ளதால் நான் ‘வணக்கம்’ போட்டாலும்
  “எவ்வளவு நாளைக்குன்னு பாப்போம், வேற என்ன பேர்ல எழுதுவாரோ?”
  என சந்தேகிக்கும் நண்பர் பலர் உள்ளனர். ‘என் கருத்து’ கடுமையான
  சொற்களை எழுத நண்பர் என்ற முறையில் அவருக்கு உரிமை உள்ளது.
  ஆனால் ‘ஜாதி வெறி’, ‘மத வெறி’ என எழுதி இருக்க வேண்டாம் என
  நினைக்கிறேன். ‘விஸ்வரூபம்’ படத்தை ‘புஸ்வானம்’ என நான் கிண்டல்
  செய்தது போல் காட்சி பின் காட்சியாக வேறொருவர் satire எழுதி
  இருப்பாரா என்பது சந்தேகமே. அப்படி இருக்க அந்த படத்தை நான்
  பெரிதும் பாராட்டுவதாக நினைப்பது என்னைப் போல் பலரும் confuse
  ஆகி உள்ளனர் என தோன்றுகிறது.

  எனது பழைய பதிவுகளைப் படித்து வருபவர்கள் நான் ரஜினி அவர்களை
  எந்த அளவிற்கு பாராட்டி எழுதி உள்ளேன் என அறிவார்கள். ஒரு சிறிய
  சாம்பிளாக வினோ எழுதிய “இசைஞானி இளையராஜாவுக்கு நான்காவது
  முறையாக தேசிய விருது!” என 2010 -ஆம் ஆண்டு செப்டம்பர் 25 தேதியில்
  உள்ள பதிவைப் படிக்கவும்.

  (மின் இணைப்பு: http://bit.ly/17d6vD2 )

  இதில் எழுதி உள்ள ‘சுப்பாண்டி’ என்பவற்றின் பதிவு ரஜினி ரசிகர்கள்
  ஏற்கும் படி இருக்கும் என நினைக்கிறேன். அந்த சுப்பாண்டி..ஹி..ஹி..
  அடியேன் தான் ! (ஒரு தங்கவேலு படத்தில் அவர் தங்க வேலு சாமியார்
  ஆகவும், வேலு தங்கம் என்ற dance master-ஆகவும் ஒரே வீட்டுக்கு வருவார்)

  இந்தப் பதிவில் எனக்குப் பிடித்த இளையாராஜா பாடல்கள் என்ன என்ன
  எனவும், சந்திரமுகி படத்திற்கு அவரால் ஏன் இசை அமைக்க முடியாமல்
  போச்சு எனவும் எழுதி உள்ளேன். இந்தப் பதிவில் நான் குறிப்பிட்டு உள்ள
  இளையராஜா -ரஜினி பாடல்கள் லிஸ்டைப் படித்து நான் ரஜினி ரசிகன்
  எனப் புரிந்து கொண்டால் அதுவே நல்லது!

  வெளிநாட்டு பயணம் ஒன்றில் (Keynote Address) விசா வேலைகளில்
  மிகவும் பிசி ஆக உள்ளதால் ஒரு கேப்பிற்கு பிறகு தொடர்வேன். நன்றி.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 18. மிஸ்டர் பாவலன்

  //@ பாவலர் ::: மிக்க மகிழ்ச்சி தொடருங்கள் …..!!!// (Boss)

  “ஆளை விட்டால் போதும்!” என்கிறீர்கள்!

  பயணங்கள் முடிவதில்லை.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 19. குமரன்

  மிஸ்டர் பாவலன் அவர்களே

  விஸ்வரூபம் குறித்தும் கமல் குறித்தும் நீங்கள் அப்போது எழுதியது அனைத்தும் என்னை வெறுப்பு/ உசுப்பு ஏற்றுவதற்காக என்பதை நான் அப்போதே உணர்ந்தேன், ஆனாலும் உங்கள் திறமை எனக்குத் தெரிந்ததால், அதற்கு ஈடு கொடுத்தே எழுதினேன். நீங்கள் அப்போது என்னைத்தான் குறிவைத்தீர்கள் என்பது எனக்கு அப்போதே தெரியும், அதனால் என்ன நீங்கள்தானே பரவாயில்லை என்று இருந்தேன். இதை அப்போதே நான் வெளிப்படையாக அறிவித்திருந்தால் மற்றவர்கள் உங்களைத் தவறாக நினைத்திருக்க மாட்டார்கள் என்று இப்போது தோன்றுகிறது.

 20. மிஸ்டர் பாவலன்

  //விஸ்வரூபம் குறித்தும் கமல் குறித்தும் நீங்கள் அப்போது எழுதியது அனைத்தும் என்னை வெறுப்பு/ உசுப்பு ஏற்றுவதற்காக என்பதை நான் அப்போதே உணர்ந்தேன், // (குமரன்)

  `முருகன்’ என்ற கற்பனைப் பாத்திரத்தை நீங்கள் குறிப்பிட்டு
  எழுதி உள்ளீர்கள் என நினைக்கிறேன். (Reference புரியாதவர்கள்
  பாவலன், கணேஷ், முருகன், சந்திரன் பேசிக் ‘கொல்லும்’ பதிவை
  http://www.envazhi.com/some-questions-and-one-answer-on-viswaroopam/
  இணைப்பில் படித்து மகிழவும்!)

  -== ஒரு சாம்பிள் ==
  பாவலன்: என் அண்ணன் சந்திரனோட படம் தயாரிக்கலாம்னு இருக்கேன்.
  தீபாவளி release.
  முருகன்: அப்படியானால் தீபாவளியை ஒட்டி ஒரு பெயர் வையுங்கள்.
  கணேஷ்: தீபாவளி release-ஆ? படம் புஸ்வானம் தான்!
  பாவலன்: (குதிக்கிறார்) ஆஹா! ஆஹா! வளர மனோரஞ்சிதமான பெயர்!
  கணேஷ்: என்னது?
  பாவலன்: புஸ்வானம்! (டைரியில் எழுதிக் கொள்கிறார்) இது தான் என்
  புதிய படத்தோட பெயர்! உலக தரத்தில் இயக்கப் போறேன்!
  முருகன்: அப்போ ஹீரோ?
  பாவலன்: நான் தான்.. கதை, வசனம், பாடல்கள், இயக்கம், ஹீரோ..
  இந்த மாதிரி பல பொறுப்புக்கள்..
  -====
  எனக்கு மதவெறி கிடையாது. மதங்களையும் பற்றி அதே பதிவில்
  நான் எழுதி இருந்தேன்.. Cut+paste செய்து தருகிறேன்.

  -========
  பாவலன்: கா..கா..கா.. ..
  சந்திரன்: என்னது இது???
  பாவலன்: காக்கா.. படம் காக்கால தான் ஆரம்பிக்கிறது.. கனடால
  ஒரு சுவத்துல காக்காயா உட்காந்திருக்கு..
  சந்திரன்: கனடால ஏது காக்கா?
  பாவலன்: நான் எதுலையும் புதுமையா காண்பிக்கிறவன்.. கதை
  சொல்லும் போது disturb பண்ணாதீங்க..
  சந்திரன்: அப்பறம்?
  பாவலன்: காக்கா பறந்து போகுது.. காமெரா பின்னாடியே போகுது..
  ஒரு busy ரோட்டுல உட்காருது.. சர்ர்ர்ர்…
  சந்திரன்: என்ன சத்தம்?
  பாவலன்: Shoe.. ஹீரோ நடந்து வர்றார்..
  சந்திரன்: அவர் நல்லவரா, கெட்டவரா?
  பாவலன்: அது படத்துல சஸ்பென்சா வச்சிடறோம்…டர்ர்ர்..
  சந்திரன்: என்னது?
  பாவலன்: ரோடை cross செய்யறார்.. அங்கே ஒரு சர்ச் இருக்கு..
  சந்திரன்: கனடாவில சர்சுக்கு போகறது பெரிய விஷயமா?
  பாவலன்: அங்கே ஒரு twist இருக்கு.. அவர் தலைல ஒரு குல்லா இருக்கு..
  அவர் ஒரு முஸ்லீம். ஹிந்து கோயிலுக்கு போகற மாதிரி
  நடந்து போயிட்டு சர்சுக்கு போயிடறார்..
  சந்திரன்: தலைய இப்பவே எனக்கு சுத்துதே?
  பாவலன்: சுத்தும்.. ஏன்னா.. ஹீரோவும் சர்ச்சுக்கு உள்ளே போகாம
  வெளியிலையே ரெண்டு சுத்து சுத்தறார்..
  சந்திரன்: ஏன்?
  பாவலன்: அவரை பின்னாடி ஒருத்தன் follow பண்ணிக் கிட்டு வர்றான்..
  அதான் சுத்தறார்..
  சந்திரன்: அவன் என்ன பண்றான்?
  பாவலன்: பின்னாடியே சுத்தறான்..
  (டக்க்!!)
  சந்திரன்: என்ன சத்தம்?
  பாவலன்: mobile கீழே விழுந்தது!
  சந்திரன்: படத்திலா?
  பாவலன்: என்னோட mobile கீழ விழுந்தது.. படத்துலையும் follow
  பண்ற detective கைல இந்த ஓட்டை mobile-ஐ கொடுத்துடலாம்..
  சந்திரன்: அப்பறம் என்ன ஆச்சு?
  பாவலன்: hero பயந்து போய் ஓடறார்..
  சந்திரன்: பின்னாடி வர்ற detective?
  பாவலன்: இன்னும் வேகமா ஓடறார்..
  சந்திரன்: ஏன்?
  பாவலன்: அது கனடா.. ரெண்டு பேரையும் நாய் துரத்த ஆரம்பிச்சுடுச்சு.

  -====
  வேறொரு பதிவில் AK-ஐ கலாய்ப்பதற்காக நான் உலக நாயகனின்
  ரசிகன் என சொல்வதாக எழுதி இருந்தேன்.
  இதில் உள்ள மகாபாரதம் கதை சொல்லும் அமைப்பு புதிய நடை.
  கிருஷ்ணாவும் ஒரு பதில் எழுதி இருந்தார். இணைப்பு:
  http://www.envazhi.com/jayalalithaa-tells-short-story-of-karna-and-duriyodhana/

  இதில் ஒரு பகுதி:
  ரகு: உங்களை ஒருத்தர் senior citizen அப்படீன்னுட்டார்.. நீங்க
  நடக்கற speed-ஐ பார்த்தா power star மாதிரீன்னா இருக்கு?
  (பாவலன் குழப்பத்துடன் பார்க்கிறார்)
  கந்தசாமி: அய்யோ.. அவர் சூப்பர் ஸ்டாரை சொல்கிறார் போல..
  (ரகுநாத்திடம்) அவர் கமல் ரசிகர் உங்களுக்கு தெரியாதா?
  பாவலன்: அதெல்லாம் ஏ.கே. -ஐ கலாய்க்கிறதுக்காக நான் எழுதறது..
  ரகு: யார் இது ஏ.கே. ?
  கந்தசாமி: நாம வந்த விஷயத்தை மட்டும் பேசுவோம்!
  -===

  பிறகு தொடர்கிறேன். நன்றி.

  -=== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *