BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் – கே வி ஆனந்த் கூட்டணி?

சூப்பர் ஸ்டார் – கே வி ஆனந்த் கூட்டணி?

ப்போதெல்லாம் ரஜினி நடிக்கிறார் என ஒரு படத்தின் செய்தி வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை கிளறும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்த யூகங்கள் வந்துவிடுகின்றன.

சுல்தானில் நடிப்பார் என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே ராணா பற்றிய செய்தி வந்தது. பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக மாறியது. ரசிகர்களின் உற்சாகம் எல்லை கடந்தது.

ராணா படம் பற்றி பேசிக் கொண்டிருந்த நேரத்தில்தான், தலைவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மறுபிறவி எடுத்து வர, கோச்சடையான் அறிவிப்பு வந்தது.

கோச்சடையான் படப்பிடிப்பே இன்னும் தொடங்கவில்லை. ஆனால் அதற்குள் ஷங்கர் – ரஜினி படம் பற்றி பேச்சு கிளம்பியது.

அந்தப் பேச்சுகள் மறையுமுன், அட… இப்போது இன்னும் ஒரு படம் குறித்த பரபர செய்திகள்.

இந்த முறை, சூப்பர் ஸ்டாரின் வழக்கமான இயக்குநர்கள் இல்லை. இது வேறு செட்டப்.

அயன், கோ இயக்குநரும், சிவாஜி – பாஸ் படத்தின் ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்திடம் ரஜினி கதை கேட்டுவிட்டார், ஈராஸ் நிறுவனம் அந்தப் படத்தை தயாரிக்கிறது, கேஎஸ் ரவிக்குமார் தவிர்த்து ராணா யூனிட் அப்படியே வேலை பார்க்கிறது, இது ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன.

இதுகுறித்து மீடியா வட்டாரத்தில் விசாரித்தபோது, “சிவாஜி படத்திலிருந்து, ரஜினியின் அபிமானத்துக்குரியவர்களுள் ஒருவராகிவிட்டார் ஆனந்த். மேலும் அயன், கோ இரண்டுமே ரஜினிக்கு பிடித்திருந்தன. ரஜினிக்கேற்ற கதை பண்ணும் வித்தை கேவி ஆனந்துக்கும் தெரியும். எனவே இது நடக்க வாய்ப்பிருக்கிறது,” என்றனர்.

இது எந்த அளவு நிஜம்? கேவி ஆனந்தையே விசாரிக்கலாம் என்றால், மாற்றானுக்காக மைசூர் பக்கத்தில் கேம்ப் போட்டிருக்கும் மனிதர் போனை எடுக்கவே மாட்டேனென்கிறார்!

-என்வழி ஸ்பெஷல்
5 thoughts on “சூப்பர் ஸ்டார் – கே வி ஆனந்த் கூட்டணி?

 1. aalwar

  அரசியல் கூட்டணி பற்றி உரையாட வேண்டிய தலைவர், இன்றும் சினிமா கூட்டணி பற்றியே சிந்தித்து கொண்டிருக்கிறார்.இது மகிழ்ச்சியான செய்தி அல்ல, விரக்தியான செய்தி. hmmm

 2. Ganesh

  M.G.R , N.T.R , அமிதாப் எல்லோறோம் 60 வயசிற்கு அப்புறம் ஒரு hit படம் கொடுக்கல , தொடர்ந்து 2 ,3 படம் flop கொடுததுர்க்கு அப்புறம் தான் எரியவா மாத்தினாங்க !..
  .
  ஆனா நம்ம தலைவர் , he is the most wanted HERO in Indian film even he is 62.
  .
  கொஞ்சம் பொறுப்போம் , நம்ம தலைவர் late வந்தாலும் latest வருவார் , ஆளுவர் , சரித்திரம் படைப்பர் !

 3. மிஸ்டர் பாவலன்

  கணேஷ் – கமல் எண்ணிக்கையில் அதிக படம்
  தந்திருக்கிறார்! “உன்னைப் போல் ஒருவன்” படம்
  சில மாதங்களில் எழுதி, இயக்கப்பட்டு, ரிலீசானது.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 4. murugan tvpm

  கொச்சடையான் / ரண / சுல்தான் the வார்ரயொர் / ரஜினி & அமிதாப்பச்சன் ஒரு பிலிம் வராத news கெடச்சு இந்திரன்-௨ இப்பம் கவ். ஆனந்த் ????? ரொம்ப கோன்புசியன் ஆயிடிச்சே கோச்சடையன் ஷூட்டிங் ஆரம்பித்ததாக தெரிவில்ல ???????? ????????? ?????????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *