BREAKING NEWS
Search

‘நாசர், நடிகர் சங்க கோபுரத்தில் உட்கார்ந்துவிட்டதால் நீங்கள் கலசமாகிவிட முடியாது!’

நாசர், எங்க தலைவர் தன் தமிழுணர்வை பல முறை நிரூபிச்சிட்டார்… ஆனா நீங்க?  

rajini-vishal

டிகர் சங்கத் தலைவர் நாசர்…

இந்தக் கட்டுரையைப் படிச்சா தலைவர் சிம்பிளாக இப்படிச் சொல்வார்.. ‘கண்ணா.. எதுக்கு இதெல்லாம். யாரையும் புண்படுத்த வேணாம்… மனசுல பட்டதைச் சொல்ல எல்லாரும்  சுதந்திரம் இருக்கு!’ என தூய தமிழில் எங்களுக்கெல்லாம் அட்வைஸ் பண்ணுவார். ஆனால்.. அவர் அளவுக்கு எங்களுக்கு சகிப்புத் தன்மை கிடையாது. அடிக்கு அடி.. உதைக்கு உதை. உங்களைப் போன்ற பச்சோந்திகளுக்கு இதுதான் சரியான வழி.

தமிழ் நடிகர்கள் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.. இந்த இரு அமைப்புகளிலும் தனக்கென ஒரு இடம்பிடித்துவிட நீங்களும் உங்கள் மனைவி கமீலாவும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் முட்டி மோதிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மனைவியால் தயாரிப்பாளர் சங்கத்தில் எந்த இடமும் பிடிக்க முடியவில்லை. விஷாலின் ஸ்டன்ட்களால் ஒருவழியாக தட்டுத் தடுமாறி நடிகர் சங்கத் தலைமைப் பதவிக்குள் உட்கார்ந்துவிட்டீர்கள்.

ஆனால் நாவடக்கம்… ம்ஹூம். அது சுட்டுப்போட்டாலும் வராத தமிழ்த் தவளையாச்சே நீங்கள்லாம்!

நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நேரத்தில்தான் உங்களின் தற்குறித்தனமான பேட்டியை தந்தி டிவி ஒளிபரப்பியது. பாவிகள்… இதை மட்டும் தேர்தல் நடந்து கொண்டிருந்த 8 மணி நேரத்திலும் ஒளிபரப்பியிருந்தால், சரத்குமார் எந்தத் தடையுமின்றி தலைவராகத் தொடர்ந்திருப்பார். திக்கித் திணறி, ஜகா வாங்கி.. கேவலமாக பின்னங்கால் பிடறியில் பட நீங்கள் ஓடிய பேட்டி. நாசரால் சரியாக பேசக் கூட முடியாது. அவர் எப்படி நடிகர் சங்கத்துக்கு தலைவராக? என்று கேட்டவர்கள், ராதிகா – சிம்பு அட்ராசிட்டியால் போட்ட ஓட்டுக்களில் தலைவரானவர் நீங்கள்.

கடைசி வரை விஷாலின் நிழலில் பதவிக்கு வந்த நீங்கள், வென்ற மமததையில் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் ரஜினிக்கு எதிராக உதிர்த்த வார்த்தைகள்… மன்னிக்க முடியாதவை.

எத்தனையோ பிரபலங்கள் பல ஆண்டுகளாக நடிகர் சங்கப் பெயரை மாற்றுமாறு கோரியுள்ளனர். அவை எதுவும் எடுபடவில்லை. கடைசியாக தலைவர் ரஜினி சொன்ன ஆலோசனைதான் ‘தமிழ்நாடு நடிகர் சங்கம்’ எனப் பெயரை மாற்றுங்கள் என்பது. அது தீயாய்ப் பற்றிக் கொண்டது. காரணம் ஒரு ஹீரோ சொன்னதாலல்ல.. தமிழ்த் திரையுலகின் முதல்வர் சொன்னதால்!

இதை குதர்க்கமாகக் குறிப்பிட்டு நக்கல் செய்யும் துணிச்சல் உங்களுக்கு எங்கே வந்தது?

ரஜினியை விட அதிகத் தமிழுணர்வை நீங்கள் காட்டிய தருணங்களில் ஒன்றையேனும் உங்களால் குறிப்பிட முடியுமா?

‘இனம், மதம், சாதி என எந்த அடிப்படையிலும் தனக்கான கதைகள் வேண்டாம்… இருக்கிற பிரிவினைகள் போதும்’ என்ற ஒப்பற்ற எண்ணங்களுக்குச் சொந்தக்காரர் எங்கள் தலைவர்.

ஆனால் நீர்… நீர் கால்பிடிக்கும் நடிகர்.. சாதியாலும் மதத்தாலும் இந்த இனத்தைக் கூறுபோட்டவர்களாயிற்றே.. கலைஞனுக்கு இருக்க வேண்டிய பொது நாகரீகம் உங்களுக்கு இருந்திருந்தால் தேவர் மகன் என்ற சாதி சினிமா ஏன்?

‘அதெல்லாம் இல்லை.. நான் கூலிக்கு மாரடிக்கும் கலைஞன்’ என்று சொல்வதாயிருந்தால், உமக்கு ஏன் இந்த தமிழ்ப் பீத்தல்?

ஒரு திரைப்படத்தில் நடிக்கும் முன், அது சரியான கதையா.. தமிழ் மக்களை சாதி ரீதியில் பிளவுபடுத்துமா? என்றெல்லாம் பார்க்காமல், பட எண்ணிக்கையிலும் வருமானத்திலும் ஒன்று கூடினால் போதும் என்ற வியாபாரக் கண்ணோட்டம் கொண்ட நீர், தமிழுணர்வு பற்றிப் பேசலாமா?

ஆனால் ரஜினி அப்படியல்ல…

எண்ணமும் செயலும் நடவடிக்கையும் தமிழ் சினிமா, தமிழ், தமிழ் மக்கள் என்ற நினைப்புடனே எந்த முடிவுகளையும் எடுப்பவர். உங்களை விட தமிழ் நன்கறிந்தவர், எழுத, பேச, படிக்க, சிந்திக்க!

கடந்த 38 ஆண்டுகளாக, தன் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்த தமிழனுக்கு பிரதியுபகாரம் செய்துவரும் தன்னிகரற்ற மனிதன். இந்தத் தமிழகத்தில் காமராஜருக்குப் பின், அப்பழுக்கற்ற ஒரு தலைவன் தமிழரை ஆள வேண்டுமென்றால், அதற்கான தகுதியும் திறமையும் முழுமையாக அமைந்த தலைவன் ரஜினி மட்டும்தான். இன்றைய தேதிக்கு வேறு எவருக்கும் அந்தத் தகுதி இல்லை!

அது தெரிந்தும் தலைவர் அமைதி காப்பதால்தான் கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி.. நம்மை ஓட்டாண்டி ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

காவிரி, மத நல்லிணக்கம், ஈழத் தமிழனுக்கு முதல் குரல் கொடுக்கும் துணிச்சல், எந்த மாநிலத்தில் தமிழன் பாதிக்கப்பட்டாலும் அதைத் தடுக்க முயலும் மனித நேயம், பிறப்பால் தமிழன் உணர்வு, அந்த உணர்வால் வாழுமட்டும் தமிழனுக்காக மட்டுமே வாழ வேண்டும் என்ற சபதம்… இவை எதிலும் ரஜினிக்கு நிகர் இங்கு யார் இருக்கிறார்கள்? அட சினிமாக்காரனை விடுங்க.. ஒரு அரசியல் தலைவனைக் காட்டுங்களேன் பார்ப்போம். அந்த ‘காண்டு’தான் உங்களையெல்லாம் இப்படிப் பேச வைக்கிறது!

நாசர்.. பார்த்துப் பேசுங்கள். காணாமல் போய்விடுவீர்கள்.

படையப்பாவில் உங்கள் குணமறிந்துதான், நேரம், வாய்ப்புகளுக்கேற்ப நிறம் மாறும் அந்த பச்சோந்திப் பாத்திரத்தை எங்கள் தலைவர் தந்திருக்கிறார் போலும்…

கருமம்.. நான் இந்த அளவுக்கு எழுத எள்ளளவும் தகுதியில்லாத நபர் நீங்கள்.. நடிகர் சங்கத் தலைவர் என்ற கோபுரத்தின் உச்சியில் போய் உட்கார்ந்துவிட்டதால், நீங்கள் கலசமாகிவிடமாட்டீர்.. வெறும் குப்பைதான் என நிரூபித்துவிட்டீர்!

குப்பையை, ரஜினி ரசிகர்கள், ரஜினியின் சமூகம் உடனே அடையாளம் காட்டத்தான் இந்தக் கட்டுரை.

-விதுரன்

என்வழி
44 thoughts on “‘நாசர், நடிகர் சங்க கோபுரத்தில் உட்கார்ந்துவிட்டதால் நீங்கள் கலசமாகிவிட முடியாது!’

 1. S VENKATESAN, NIGERIA

  நேற்று முதல் மன உளைச்சல். இன்று உங்கள் பதிலடி பார்த்தவுடன் நிம்மதி ஆக இருக்கிறது.

 2. arulnithyaj

  விதுரன் அண்ணா ,

  நாசர் பாபா படத்தை பத்தி எப்படி ஒருவர் 2000 வருஷம் வாழ முடியும்னு கிண்டல் செய்ததா ஒரு செய்தி உண்டு .. ஆனால் தலைவர் சந்திரமுகில வாய்ப்பு கொடுத்தார் ..இவர் இதை பேசினமாதிரி தெரியல ..தலைவரின் பெருமை புகழ் பிடிக்காத அந்த நல்ல நண்பர் என்ற வயிறெரிச்சல் பிடித்தவரின் ஊது குழல் மாதிரி இருக்கு.. இன்னும் கீழ்தரமா இவர்கள் பேசினாலும் ஆச்சரிய படுவதுற்கு ஒன்றும் இல்லை….கைகளால் சூரியனை மறைக்க முடியுமா? தெரியாத நல்லவர்கள் ??..

 3. sivam

  ரஜினிகாந்தை விட எனக்கு தமிழ் உணர்வு அதிகம்…- ஆரம்பிச்சிட்டார் நாசர்! Posted by: Shankar Published: Saturday, October 24, 2015, 12:00 [IST] Share this on your social network: FacebookTwitterGoogle+ Comments (51) Mail தீட்டிய மரத்தில் கூர் பார்ப்பது என்று ஒரு வழக்குச் சொல் தமிழில் உள்ளது. இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ அரசியல்வாதிகளுக்கும், அவர்களைவிட பெரிய அளவில் அரசியல் செய்யும் சினிமாக்காரர்களுக்கும் ரொம்பவே பொருந்தும். நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும்போது ரஜினியின் ஆதரவுக்காக அவர் வீட்டுக்கும் கல்யாண மண்டபத்துக்கும் நடையாய் நடந்தவர்கள் நாசர் அன்ட் கோ. இன்று அதே ரஜினிகாந்தை கிண்டலடிக்கும் விதமாகப் பேச ஆரம்பித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ் நாடு நடிகர்கள் சங்கம் என்று மாற்றி விடுங்கள் என ரஜினி கூறியது பற்றிய ஒரு கேள்விக்கு நாசர் அளித்த பதிலில், “இதை சென்ற நிர்வாகத்தினால் ஏன் நிறைவேற்ற முடியவில்லை என்று பார்க்க வேண்டும்.சட்டச்சிக்கல் ஏதுமுண்டா என்று ஆராய வேண்டும். மாற்றினால் பிரச்சினைகள் எழுமா என்று அலச வேண்டும். முக்கியமாக இச் சங்கத்தின் அறுபதாண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். இந்தத் தீர்மானத்தை பரபரப்பாக்கிய திரு.ரஜினிகாந்த் அவர்களை விட எனக்கு ஒரு சதவிகிதமாவது அதிக தமிழ் உணர்வு உண்டு. மெட்ராஸூக்கு ஒரே இரவில் சென்னை என்று சூட்டப்படவில்லை,” என்று கூறியுள்ளார். “நடிகர் சங்கம் என்பது ஒரு சாதாரண சங்கம்… அவ்வளவுதானே. அதற்கு ஏன் இவ்வளவு பில்ட்அப் நாசர்? ரஜினி ஏதோ நேற்று இதைச் சொல்லவில்லை. தேர்தல் நடந்த நாளன்று காலையிலேயே வாக்களித்துவிட்டு நடிகர் சங்கப் பெயரை மாற்றுமாறு கூறினார். அன்றைக்கு அதை வரவேற்பதாக உடனே பேட்டி கொடுத்துவிட்டு, இப்போது திடீரென தமிழுணர்வு பற்றியெல்லாம் பேசுவது, வெற்றி தந்த மிதப்பா?” -சமூக வலைத் தளங்களில் ரஜினி ரசிகர்கள் இப்படி கேட்க ஆரம்பித்துள்ளனர். சிலர் இன்னும் சிலபடிகள் மேலே போய், நாசரை கடுமையாக விமர்சித்து மீம்ஸ் போட்டு வருகின்றனர். எனிவே… நடிகர் சங்கத் தலைவர் நாசரின் ஆரம்பமே நல்லால்லையே! Read more about: rajinikanth, nasser, nadigar sangam, ரஜினிகாந்த், நாசர், நடிகர் சங்கம்

 4. MK

  டியர் விதுரன்,
  உங்கள் கட்டுரை, ஒழுங்கா தமிழ் பேச தெரியாத நட்டுவா பய நாசருக்குக் நெத்தியடி. அவனை பேச சொல்லி வேடிக்கை பார்க்கும், உலக (ஊம்….) நாய்(கனு)க்கும் சரியான செருப்படி.
  இன்னும் தலைவரை பத்தி பே(ஏ)சுவர்கள். பாவம் நம் குழந்தைக்கு(தலைவருக்கு) எல்லோரையும் அரவணைக்கத்தான் தெரியும். ஓங்கி அடிக்க தெரியாது. அன்பு செய்ய மட்டும் தான் தெரியும்.

  “கடந்த 38 ஆண்டுகளாக, தன் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்த தமிழனுக்கு பிரதியுபகாரம் செய்துவரும் தன்னிகரற்ற மனிதன். இந்தத் தமிழகத்தில் காமராஜருக்குப் பின், அப்பழுக்கற்ற ஒரு தலைவன் தமிழரை ஆள வேண்டுமென்றால், அதற்கான தகுதியும் திறமையும் முழுமையாக அமைந்த தலைவன் ரஜினி மட்டும்தான். இன்றைய தேதிக்கு வேறு எவருக்கும் அந்தத் தகுதி இல்லை!”

  சூப்பர் பஞ்ச்.

  தன் ரசிகர்களுக்கும் அன்பைத்தான் சொல்லி கொடுக்கிறார். ஒருபோதும் தன் பிரச்சனைக்காக தன்னுடைய ரசிகர்களை உசுப்பேற்றியது கிடையாது.
  தலைவரை தன் உயிரினும் மேலாக அன்பு செய்யும் கோடான கோடி ரசிகர்கள் இருக்கும் வரை நாசர் என்ன அவன் அப்பன், இல்ல ஒளிந்து ஒளிந்து வேலை பார்க்கும் அந்த (உலக ஊம்….) மயி…..ராண்டியும் வந்தாலும் ஒன்றையும் ஆட்ட முடியாது தலைவரின் நீண்ட புகழை அசைக்கவே முடியாது.

 5. Ravi

  என்ன சொன்னாலும், நம்மைப் போல நாசரும் தமிழர் தானே.. அவர் தப்பாக கூறவில்லை.

 6. srikanth1974

  \\காவிரி, மத நல்லிணக்கம், ஈழத் தமிழனுக்கு முதல் குரல் கொடுக்கும் துணிச்சல், எந்த மாநிலத்தில் தமிழன் பாதிக்கப்பட்டாலும் அதைத் தடுக்க முயலும் மனித நேயம், பிறப்பால் தமிழன் உணர்வு, அந்த உணர்வால் வாழுமட்டும் தமிழனுக்காக மட்டுமே வாழ வேண்டும் என்ற சபதம்… இவை எதிலும் ரஜினிக்கு நிகர் இங்கு யார் இருக்கிறார்கள்? அட சினிமாக்காரனை விடுங்க.. ஒரு அரசியல் தலைவனைக் காட்டுங்களேன் பார்ப்போம். அந்த ‘காண்டு’தான் உங்களையெல்லாம் இப்படிப் பேச வைக்கிறது!//

  திரு.விதுரன் சார் அவர்களுக்கு வணக்கம்’
  தலைவரை கிண்டலடித்த தறுதலைக்கு
  சரியான சவுக்கடி செம விளாசல்.

 7. venkat

  Vino,

  i knew this before. The said intellectuals aways had an hidden agenda. Among these two sarth is better. The problem started with Simbhu and radharavi his school of old thought put sarath in bother. Coming to nadigar sangam the building plan what sharath proposed is a practical one. Today no one knows how many days a film would run except for thalivar which Minimum guarantee. Except for lingaa issue where they spoiled with intention. The new memebers will make a grand package on media and paper and is not going to solve any issues. They will make headlines everyday with some sort of activites. This is my two cents.

 8. enkaruthu

  காமராஜருக்கு பிறகு நமது தலைவர்தான் என்று பல காலம் கூறி வருகிறேன்.எனக்கு என்னமோ இந்த பதவி ஆசை என்பது இவர்களுக்கு விஸ்வரூபம் பிரச்சனையின்பொழுதே ஆரம்பித்துவிட்டது.அன்றிலுருந்தே கமல் தனக்கு முன்பு இருந்த சந்தானபாரதி போலவே ஒரு நாய் இந்த நடிகர் சங்கத்துக்கு வேண்டும் என்று தனக்கு அடிமையான நாசரை முன்மொழிந்தது இந்த கமல்.ஏன் அனைத்து பாண்டவர் அணிக்கும் முன்மொழியவேண்டியதுதனே.இது தெரியாமல் அந்த நாசரை தூக்கிவைதுகொண்டடும் இந்த விஷால் அணி கூடிய சீக்கிரம் ஒருவருக்கொருவர் செருப்பால் அடித்துக்கொள்ள போகிறார்கள் என்பது திண்ணம்.ஏனென்றால் இவனுங்கல்லேலாம் வெறும் பதவி ஆசைக்காக வந்தவர்கள்.aanaal

 9. குமரன்

  1% நாசர் அவர்களின் கடந்த காலம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. அவர் தான் கடந்து வந்த பாதை குறித்து நம் தலைவர் போல வெளிப்படையாக பொதுவில் வைப்பவர் அல்ல. அது அவரது தனிப்பட்ட விஷயம் என்று இருப்பதுதான் பண்பாடு.

  ஆனால், எப்போது தன்னைத் தலைவருடன் ஒப்பிட்டுத் தன தமிழ் உணர்வின் 1% அதிகத்தைத் தம்பட்டம் அடித்தாரோ அப்போதே, அவரைத் தலைவருடன் பிறவிஷயத்திலும் ஒப்பிடுதல் தவறில்லை என்பது தோன்றியது.

  தலைவர் பஸ் கண்டக்டராக வாழ்க்கை நடத்தி நடிக்கவந்து முன்னேறியவர் என்ற வரலாறு அனைவருக்கும் தெரியும், இதனால் எவராயினும் முன்னேற முடியும் என்ற தன்னம்பிக்கை விதையை மக்கள் மனதில் விதைத்தவர் தலைவர். தனது கடந்த காலத்தை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தும் பெருந்தன்மை, அகந்தை இன்மை, பக்குவம் வாய்க்கப் பெற்ற பெருந்தகை ரஜினி.

  நாசர் தாஜ் கோரமண்டலில் வெயிட்டராக இருந்ததை வெளியில் சொன்னால் கவுரவக் குறைவு என எண்ணுபவர்.

 10. மிஸ்டர் பாவலன்

  இந்த விஷயத்தில் உலக நாயகன் காத்து வரும் அமைதி
  பாராட்டத்தக்கது.. பொறுத்தார் பூமி ஆள்வார்..

  -== மிஸ்டர் பாவலன் ==-

 11. enkaruthu

  என்ன வினோ சார் ஒரு ஸ்மார்ட் போனில் இருந்து கமெண்ட் பண்ணும் கொஞ்சம் நேரத்தில் தமிழ் வார்த்தை வராமல் அப்படியே நின்று விடுகிறது. அவ்வளவு நேரம் அடித்த பின்பு மொக்கை வாங்குவது ரொம்ப கடுப்பா இருக்கு.கொஞ்சம் பாருங்கள்.

 12. enkaruthu

  நானும் அந்த பேட்டியை பார்த்தேன்.அதுவும் பாண்டேவின் ஒரு கேள்விக்கு இவன் கொஞ்சம் நேரம் கழித்து இவன் பேசியதை கேட்டுஎன் நண்பர்கள் மட்டும் அல்ல பாண்டேவும் ஒரு நக்கல் சிரிப்பு சிரித்தார் பாருங்கள்.அன்றே நாசர் வடிவேலு ஆகிவிட்டான்.என்னை பொறுத்தவரை சரத்குமார் முன்பே ஒப்பந்தத்தை இவர்களிடம் காட்டிருந்தலும் இவர்கள் வேறு ஒரு காரணம் சொல்லி போட்டி போட்டிருப்பார்கள்.

 13. enkaruthu

  என்னடா கமல் நேற்று எனக்கு பதவி வேண்டாம் என்று நினைத்தேன்.ஆனால் மருதநாயகம் படம் எடுக்கிறேன் என்று பல பேரிடம் அன்றே ரஜினி முதற்கொண்டு கொடுத்த பிச்சையை சிரித்துக்கொண்டே வாங்கிகொண்டு
  இன்று வரை அந்த படத்தை எடுக்காத முதல் கணவரை துரத்திவிட்டு என்னமோ தாலி கட்டியததுபோல் வரும் சீதயை மன்னிக்கவும் கெளதமியை kalyanam

 14. enkaruthu

  நடிகர் கார்த்தி அவர்கள் எனக்கு தமிழா ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்களை தான் எனக்கு பிடிக்கும் என்று சொன்னார்.இந்த கமல் நாய் எனக்கு மலையாள கரையோரம்தான் தமிழ் நாட்டைவிட பிடிக்கும் என்று சொன்னார்.கொய்யல தமிழ் ஆர்வலர்களே இப்ப எங்கேடா போனீர்கள்.உங்களுக்கு கொடுத்த இடம்தான் இன்று தமிழின தலைவர் என்று அழைக்கப்படும் பிரபாகரன் அவர்களின் இடத்தில இந்த சீமாறு இருந்த்திருந்தால் ஓரி சிங்களவன் கூட உயிரோடு இருக்கமட்டானாம்.எப்படி இந்த சீமாறு நடிகிறதோ அதுபோல் தான் எல்லோரும் அமைப்பும்.ஒரு thamula

 15. விஸ்வநாதன்

  உண்மையிலேயே தலைவரின் கால் தூசிக்கு இவனெல்லாம் வர மாட்டான்.
  தலைவர் அவர்கள் ஒரு யோகியை போல , ஒரு ஞானியை போல வாழ்ந்து கொண்டு இருக்கிறார் .

  இப்படிக்கு,
  இறைவன் ரஜினியின் பக்தன் விஸ்வநாதன்

 16. MK

  “பொறுத்தார் பூமி ஆள்வார்……”

  கண்டிப்பாக நம் தலைவரை போல. பொறுமையாக இருக்கும் நம் தலைவர் ரசிக நெஞ்கங்களில் தெய்வத்தை போல ஆள்கிறார்.
  ஆனால்….. பொறுமையாக ஒளிந்து கொண்டு நரி வேலை பார்ப்பவர் நிச்சயம் படுகுழியில் விழுவார்.
  தலைவரின் நெருங்கிய நண்பர் என்று சொல்லும் இந்த நரி, நாசரின் பேச்சுக்கு ஏன் இன்னும் கண்டனம் தெரிவிக்க வில்லை. காரணம் தலைவரின் புகழ் பிடிக்கவில்லை. பொறாமை.
  நடிகர் சங்க தேர்தல் அன்று தலைவர் கொடுத்த ஒரே ஸ்டேட்மென்ட்க்கு (தமிழர் நடிகர் சங்கம் மாற்றம்) அனைத்து தரப்பிலிருந்தும் வரவேற்ப்பு கிடைத்தது. அதே சமயம் நரி கொடுத்த ஸ்டேட்மென்ட்ஐ எவரும் கண்டு கொள்ளவில்லை. அந்த காண்டுதான் நாசரை ஏவி விட்டு பேச வைத்தது.
  பாவம் அந்த புகழ் விரும்பும் நரி.
  தலைவர் ரஜினி நாமம் என்றென்றும் வாழ்க.

 17. visa

  நாசர் அப்படி சொல்லியிருக்க வாய்ப்பில்லை. அவர் மமதையில் சொல்லவில்லை. ஏற்கனவே உள்ள பெயரே போதுமே, தற்போது மாற்ற வேண்டிய அவசியம் வரவில்லை என்று கூறியுள்ளார். எது எப்படி இருப்பினும் பொதுக்குழு மற்றும் செயற்குழுவினை கூட்டியே மாற்றம் குறித்த முடிவை எடுக்கவேண்டும் என்பது உங்களுக்கு தெரியாததா.

 18. மிஸ்டர் பாவலன்

  உலக நாயகன் நரி அல்ல.. அவர் ஒரு இனிய நண்பர்..

  ரஜினி உலக நாயகன் மீது நல்ல நட்பும், மதிப்பும் வைத்துள்ளார்.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 19. sathish

  நாசர் கமலின் பினாமி .அப்படித்தான் பேசுவார்.நடிகர் சங்கத்தில் எதுக்கு கமலுக்கு எதுக்கு ஒரு பதவி..? நன்றிகடனா..? ரஜினி இப்படி பதவியை தேடிப்பொகிறவர் அல்ல.நாசர் தமிழ் என்பதை உபயோகப்படுத்தும்போதே அதில் கொஞ்சம் நக்கல் தொனி எட்டிதான் பார்க்கிறது!!!

 20. sathish

  ரஜினி தயவு நாசருக்கு எதிர்காலத்தில் நிறைய தேவைப்படும்.கமலை மட்டுமே வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் சாதித்து விட முடியாது எதிர்காலத்தில் பெரிய விழாக்களின் போது ரஜினிஎனும் வைரகிரீடம்..நிச்சயம் தேவைப்படும்….அப்போது அவர் வாசலில் மீண்டும் காத்திருக்க வேண்டும்

 21. kabilan.k

  Mr .Visa ..நாசர் அப்படி கூறி இருக்க வாய்ப்பில்லையா???இது எதோ வாய் வழி வந்த தகவல் அல்ல ..ஆனந்த விகடன் இணையத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளது தான்…அப்புறம் இன்னொன்னு..இங்க நடிகர் சங்கத்தின் பெயர் மாற்றத்தை பற்றி அவர் கூறியதை யாரும் விமர்சிக்கவில்லை…தனக்கு ரஜினிகாந்தை விட ஒரு சதவிகிதம் தமிழ் உணர்வு அதிகம் என்று கூறியது தான் பற்றி எரிகிறது….வாய் கொழுப்பு நாசருக்கு அதிகம்….

 22. CHOZHAN

  நடிகர் சங்கம் தேர்தல் அன்று விஷாலை அடித்ததாக அடித்த trend நல்ல பலனை தந்தது சரத் வீழ்ந்தது அவர்களின் அடாவடி, நாக்கு தடித்த வார்த்தைகள் தான் இல்லையெனில் சரத்தான் வென்றிருக்கவேண்டும் ரஜினியின் ஆதரவும் சரத்துக்குதான். என்ன செய்ய…

 23. இந்திரன்

  உண்மையில் கமலுக்கு ரஜினி யபத்தி நல்ல எண்ணம் எப்போதும் கிடையாது. எல்லா மேடையிலும் கமலபத்தி தலைவர் புகழ்ந்து பேசுவார் .ஆனால் கமல்கபோதி தலைவர் பத்தி ஒரு வார்த்தை நல்லா சொல்ல மாட்டான் பொறாமை பிடித்த கபோதி

 24. இந்திரன்

  கமல் ஒரு சிறந்த நடிகர்தான் அத தலைவர் ரஜினியே சொல்லிருக்கார்.but மனித நேயம் பன்பு கருனை ஒருவனுக்கு ஒருத்தி ,நல்ல குடும்பம் ,இந்த விசயத்தில தலைவரோட கால் தூசி பெறமாட்டான்

 25. மிஸ்டர் பாவலன்

  //ரஜினியின் ஆதரவும் சரத்துக்குதான். என்ன செய்ய…///

  இதனால் தான் – விஷால் இதை எதிர் கொள்ள – உலக நாயகனின்
  துணை நாடினார்.. உலக நாயகன் இளைஞர்களுக்கு பெரும் ஆதரவு
  கொடுத்த அருமை நண்பர் நாசருக்காக களம் இறங்கினார்..
  உலக நாயகனின் ஆதரவும், பணிவான பேச்சும் விஷால் அணியின்
  வெற்றிக்கு பெரிதும் உதவின. தேர்தல் அன்று ரஜினி போட்ட பவுன்சரால்
  விஷால் அணி ஆடிப் போனது.. “யாமிருக்க பயம் ஏன்?” என கௌதமியுடன்
  கமல் களம் இறங்கி, “தென்னிந்திய நடிகர் சங்கம்” என்ற பெயர் வேண்டாம்..
  “இந்திய நடிகர் சங்கம்” என்ற பெயர் வைப்போம் என குரல் கொடுத்தார்..
  இந்த சிக்ஸரினால் தேர்தல் களம் பெரிதும் குழம்பிப் போனது..
  தமிழ்நாடு நடிகர் சங்கம், இந்திய நடிகர் சங்கம் இரண்டு பெயரும் மிகவும்
  குழப்பமாக உள்ளது.. இருக்கும் பெயரே போதும்.. என்ற நல்ல முடிவுக்கு
  வந்தனர்… மிக்க நன்றி!!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 26. குமரன்

  விசா அவர்களே

  ///நாசர் அப்படி சொல்லியிருக்க வாய்ப்பில்லை. ///

  விகடன் பேட்டியில் இருக்கிறதே? தலைவர் தலைவர் ரஜினியை விடத் தனக்கு 1% ஆவது கூடுதலாகத் தமிழ் உணர்வு இருப்பதாகக் கூற நாசருக்கு எத்தனைத் திமிர் இருக்க வேண்டும்? கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாமல் தலைவர் பற்றி இப்படிப் பேச எத்தனை அகந்தை இருக்க வேண்டும். சத்திய ராஜ் அவ்வப்போது தலைவர் பற்றி தமிழ் என்றெல்லாம் நக்கல் அடிப்பது சரி என்ற மன நிலையில் இருந்து வந்தவர்தான் இந்த நாசர் என்பது இப்போது வெளிச்சமாகி விட்டது. இத்தனை நாள் வாயைப் பொத்திக் கொண்டு அதை எல்லாம் ரசித்து விட்டு இன்று நடிகர் சங்கப் பதவி கிடைத்ததும் தனது முதல் பேட்டியிலேயே தலைவர் ரஜினியைப் பற்றி அவரது தமிழ் உணர்வைப் பற்றி இப்படிப் பேசுகிறார் என்றால் நாசரின் கபட மனம் என்ன என்பது தெரிகிறதே?

  ஹோட்டல் வெயிட்டராக 5%, 10% டிப்ஸ் வாங்கிய பழக்கம் பர்செண்டேஜ் அடிப்படையில் பேசுகிறது போலும்.

 27. simbu

  சரத் ஒரு சோம்பு தூக்கி என அனைவரும் அறிந்ததே ….. ரஜினி ராதிகாவுக்கு நல்ல நட்பு உண்டு அதை நீங்கள் காவேரி உண்ணாவிரதத்தில் ரஜினியை கை குலுக்கி ஆதரவு அளித்தபோதே பார்த்திருக்கலாம் . மற்றும் தாணுவின் கடைசி kata அந்தர் பல்டியும் ரஜினியின் பங்காக இருக்கும் …. ஆனால் கடந்த 10 ஆண்டாக சர்வாதிகாரமாக தலைவர் மற்றும் செலர் பதவியை வைத்துகொண்டு அடாவடி செய்ததை போல அல்லாமல் விஷால் நாசர் அணி நல்ல முறையில் வேண்டார்கள் .. சிவகுமார் போன்ற ஒரு நடுநிலையாளரின் ஆதரவை வைத்து பாருங்கள் …

 28. இந்திரன்

  mr.simbu தலைவர்க்கு இந்த மாதிரி மட்டமான புத்தி கிடையாது இது என்ன சட்ட மன்ற தேர்தலா இதல்லாம் தலைவர்க்கு முன்னாடிதூசி . தாணு சரத்த ஆதரிச்சதுல ரஜினி யோட பங்கு ஏன் இருக்க போது .தலைவர் ரோட ஆதரவு தான் இருவருக்கும் தேவை.பிறகு எதற்கு இரண்டு அனியினர்களும் தலைவர் வீட்டுக்கு போனாங்க .
  சினிமா மேடை எது வாக இருந்தாலும் அங்க தலைவர் இருந்ததான் அந்த சபை நிறைஞ்சி இருக்கும் . அதுதான் நம்ம தலைவர் முகராசி

 29. மிஸ்டர் பாவலன்

  //ரஜினி ராதிகாவுக்கு நல்ல நட்பு உண்டு// (சிம்பு)

  உண்மை !

  //மற்றும் தாணுவின் கடைசி kata அந்தர் பல்டியும் ரஜினியின் பங்காக இருக்கும் …//

  தாணு அந்தர் பல்டி அடித்தார் என்பது உண்மை..
  அதில் ரஜினியின் பங்கு எதுவும் உண்டா என்பது சந்தேகமே..
  ரஜினிக்கு இது போல் ‘கேம்’ ஆடி பழக்கமில்லை..
  கமல் ரசிகர்கள் இது போல் எதுவும் குறை சொல்வதில்லை!

  //சிவகுமார் போன்ற ஒரு நடுநிலையாளரின்
  ஆதரவை வைத்து பாருங்கள் …//

  கமல், சிவகுமார் என்ற இரு நடுநிலையாளர்களும் விஷால் அணிக்கு
  ஆதரவு கொடுத்த போது ரஜினியும் ஆதரவு கொடுத்திருக்கலாம் என்று
  தான் எனக்கு தோன்றுகிறது.. நல்ல நண்பர் ராதிகா தவறாக எடுத்துக்
  கொள்ளக்கூடாது என ரஜினி ஒதுங்கி இருந்தார் போல் இருக்கிறது..
  சரத்-ராதிகா pressure கொடுக்க போய், அவர் தேர்தல் நாள் என்று
  “தமிழ் நாடு நடிகர் சங்கம்” என பெயர் மாற்ற வேண்டும் என்று
  சொல்ல வேண்டி நேர்ந்தது..

  -== மிஸ்டர் பாவலன் ==-

 30. simbu

  தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற பெருமை தியாகராஜ பாகவதரையே சேரும். இவர் நடித்த 14 படங்களில் 7 படங்கள் பாக்ஸ் ஆபிசில் மாபெரும் வெற்றி பெற்று பிளாக்பஸ்டர் படங்களாக மாறியது.

  _________

  அவர் காலத்தில் சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தையோ பட்டப் பெயரோ கிடையாது. ரஜினி சூப்பர் ஸ்டாராக அடையாளப்படுத்தி அறிவிக்கப்பட்ட பிறகுதான், பாகவதர், ராஜேஷ் கண்ணா போன்றவர்களை சூப்பர் ஸ்டார்கள் என்றனர் சிறுமதியாளர்கள்.

  சூப்பர் ஸ்டார் என்றால் அவர் ஒருவர்தான்.. அவர் ரஜினிகாந்த்.

  -என்வழி

 31. MSN

  I don’t understand why people go behind actors or hide behind them and fight among themselves. Every thing they do in front of camera is already scripted by some one and they do with utmost precautionary. How come then become your role models. And more important they only care about themselves and none of you. I respect the entertainment they provide but they don’t deserve the status that people are giving or even half worth. it may be whoever.

 32. enkaruthu

  சிம்பு அவர்கள் பேசுவது சிரிப்புதான் வருகிறது.எங்கள் தலைவர் நடிகர்களை தன குடும்பம் போல் கருதுகிறார்.அதனால்தான் தேர்தல் நடக்காமல் இருக்க அணைத்து முயற்சிகளையும் எடுத்தார்.ஆனால் தன நேரடி படமான் உத்தம வில்லன் சப்ப வில்லன் ஆன பிறகு தலைவரின் ரசிகனான லிங்குசாமியிடம்தலைவரே பேசியதாக கேள்வி.இப்படி இருக்க தலைவராவது தானுவை தூண்டுவதவது.தலையோட தன படத்தை ரிலீஸ் பண்ணினால் விஜய் ரசிகர்கள் நம் படத்தை பார்பார்கள் என்ற திருட்டு எண்ணத்தோடுதான் தூங்காவனத்தை கமல் ரிலீஸ் பண்ணுகிறார்.எதுவும்

 33. enkaruthu

  என்னை பொறுத்தவரை கமலின் வியாபாரம் முடிந்துவிட்டது.இவரால் இந்திய ரசிகர்களையே திருப்தி படுதமுடியது இதில் எங்கே உலகத்தை சந்தோஷ படுத்துவது.உலக நாயகனாம் வெட்கமாக இல்லை கமல் அவர்களுக்கு இதை கேட்பதற்கு.இன்னும் தலைவரின் எந்திரன்சிவாஜி போன்ற படங்கள் போல் கமல் படம் வசூல் செய்திருந்தால் இவரை கையில் பிடிக்க முடியாது.கமல் எங்கள் தலைவரின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்.ரஜினி என்ற பெயர் இருக்கும் வரைதான் கமல் என்ற பெயர் இருக்கும்.உன்னைப்போல் தன்னோட முந்தைய குடும்பத்தை துரத்திவிட்டு இன்று வேறு ஒரு குடும்பத்தோடு வாழ்பவர் அல்லடா என் தலைவர்.நீயெல்லாம் கருத்து தெரிவிக்கிற.அஜித் தன மனைவி ஷாலினியோடு வாழ்கிறார்.விஜய் தன மனைவி சந்கீதவோடு வாழ்கிறார்.ஆனால் எழுந்து நிக்கவே வக்கில்லாமல் இந்த டை அடித்த மீசையை தடவி விடும் நீங்கள் மட்டும் பல பெண்களின் வாழ்கையை வெறும் முத்தம் மட்டுமே(இது அலி கூட கொடுக்கும்) கொடுத்து கெடுக்கிறாய்.செத்துப்போன கிளியை வைத்துகொண்டு எப்படி படம் காட்டலாம் என்பதற்கு நீதானப்பா உதாரணம்.

 34. மிஸ்டர் பாவலன்

  //ஆனால் எழுந்து நிக்கவே வக்கில்லாமல் இந்த டை அடித்த மீசையை தடவி விடும் நீங்கள் மட்டும் பல பெண்களின் வாழ்கையை வெறும் முத்தம் மட்டுமே(இது அலி கூட கொடுக்கும்) கொடுத்து கெடுக்கிறாய்// (என் கருத்து)

  இது கருத்து போல தெரியவில்லை!

  உலகநாயகன் மீது அநாகரிகமாகவும், அவதூறாகவும் உள்ளது!!!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 35. Senthilkumar

  சகோதரன் விதுரன் அவர்களே …..இந்த ரஜினிய காமராரசற்ட ஒப்பிட்டு பேசுறிங்களே…!!! காமராசர் தன்னோட உயப்பை அனைத்தையும் மக்களுக்க கொடுத்தார்…ரஜினி????

 36. simbu

  “சிம்பு அவர்கள் பேசுவது சிரிப்புதான் வருகிறது.எங்கள் தலைவர் நடிகர்களை தன குடும்பம் போல் கருதுகிறார்.அதனால்தான் தேர்தல் நடக்காமல் இருக்க அணைத்து முயற்சிகளையும் எடுத்தார்”

  தம்பி 9 வருடமாக தேர்த்தல் நடக்காமல் இருந்ததற்கு என்ன கூறுகிறீர்கள் ..??? பலரின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டபோது அனைவரும் என்ன செய்தார்கள் …??? சினிமா ஒரு வியாபாரம் அனைவரும் சிறந்த வியாபாரிகள் !!!!

 37. simbu

  என்னை பொறுத்த வரை திரைத்துறையில் நடிகர் சங்கத்தை பொறுத்தவரை விஜயகாந்துக்கு பிறகே மற்ற அனைவரின் பெயரையும் பட்டியலிட முடியும் ….

 38. simbu

  கமல் இன்னும் நிறைய சாதிப்பார் அதில் சந்தேகமே இல்லை ……
  உலக அரங்கில் ஒரு நாள் உச்சத்தில் இருப்பார் அவர் …..
  சலங்கை ஒலி , மூன்றாம் பிறை , நாயகன் இந்த படங்கள் போதும் அவருக்கு ….

 39. மிஸ்டர் பாவலன்

  //கமல் இன்னும் நிறைய சாதிப்பார் அதில் சந்தேகமே இல்லை ……
  உலக அரங்கில் ஒரு நாள் உச்சத்தில் இருப்பார் அவர் …..///

  உச்சத்தில் இருப்பதால் தானே அவரை “உலக நாயகன்” என அழைக்கிறோம்!!

  கமல் ஹாசனிடம் ரசிகர்கள் பாராட்டும் குணங்கள்:
  (1) எளிமை
  (2) தன்னடக்கம்
  (3) பணிவு
  (4) தேர்ந்த நடிப்பு
  (5) நல்ல நட்பு
  (6) தமிழ் ஆர்வம்
  (7) இசை தேர்ச்சி
  (8) கண்ணியம்

  இன்னும் எவ்வளவோ அடுக்கலாம்.. ஆனால் இதற்கே “என்கருத்து”
  என்ன பதிலடி கொடுப்பாரோ தெரியலை! அதனால் எட்டு போதும்!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 40. enkaruthu

  சரி சிம்பு அண்ணே இந்த ஒன்பது வருடங்களாக சரி அட்லீஸ்ட் விஸ்வரூபம் படத்திற்கு முன்பு வரை ஏன் இந்த நாசர் கேள்வி எழுப்பவில்லை.என்னை பொறுத்தவரை கமல் ஒரு நரி.அவருக்கு பிரச்சினை என்றால் எந்த மதத்தை சேர்ந்தவர்களைய காயம் படுத்துவார்.உதாரணம் அவ்வை சண்முகி மூலம் மாமிகளை கிண்டல் பண்ணினார்.அப்படியும் முஸ்லிம் நண்பர்களின் ஆதரவு கிடைக்காதால் உடனே விஸ்வரூபத்தில் முஸ்லிம் நண்பர்களை கிண்டல் பண்ணினார்.ஒன்று சொல்கிறேன் சிம்பு அவர்களே என் நல்ல தலைவர் மட்டும்தான் ருத்ரட்சையை போட்டு கொண்டே முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு ஆதரவு கொடுக்க முடியும்.ஏனென்றால் எங்கள் தலைவர் எல்லா மதத்தினரும் சந்தோசமாக அன்பாக சேர்ந்து வாழலாம் என்ற மனம் கொண்டவர்.கமல் போல் நான் பொதுவானவன் என்று சொல்லிக்கொண்டே முஸ்லம் நண்பர்களை அதுவும் சாருக்கான் பார்த்தே நீ ஒரு கால்வாயில் வந்தவன் என்ச்று சொல்லும் இவரின் பொது தனம் சாந்தி சிரிகிறது.

 41. Jegan S

  சூரியனை பார்த்து குலைக்கும் நாய்…. மிகசரியான பதிவு …

 42. Jegan S

  Mr பாவலன் அவர்களே,

  9 ஐ விட்டுட்டிங்களே…

  9. முத்தக்காட்சிகள் …
  வெறும் முத்தக்காட்சிகளை மட்டும் வைத்துகொண்டு உலக நாயகன் பட்டம் பெற்றவர், 30 கோடிகளை கூட வசூல் செய்ய முடியாமல் தவிக்கின்றார்..

  ரஜினி இவரை எங்கயும் விட்டுகொடுததில்லை .. அனல் இவர் ரஜினியை எங்கும் சப்போர்ட் செய்ததில்லை.. தலைவருக்கு இவனோட சப்போர்ட் எல்லாம் தேவையில்லை.. தொடர்ந்து 50 + கோடிகளை வசூலிக்கும் எங்கள் தலைவருக்கு தெரியும் அவர் பின்னல் என்னை போல் பலர் இருப்பது..

  நன்றிகெட்ட நாய்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *