BREAKING NEWS
Search

ரஜினி எங்கேயும் போகமாட்டார்… சென்னையில்தான் இருப்பார் – உதவியாளர்

ரஜினி எங்கேயும் போகமாட்டார்… சென்னையில்தான் இருப்பார் – உதவியாளர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எங்கும் குடியேற மாட்டார். அவர் சென்னையில்தான் இருப்பார், என அவரது உதவியாளர் விளக்கம் அளித்துள்ளார்.

ரஜினிக்காக கோவை ஆனைகட்டியில் வீடு தயாராவதாகவும், அங்கு அவர் சில காலம் தங்கியிருப்பார் என்றும் குமுதத்தில் செய்தி வெளியானது. ரஜினிக்காக உருவாகும் வீடு என ஒரு படமும் வெளியாகியிருந்தது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் இல்லை.

உடல்நலக்குறைவு ஏற்பட்டு வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பியபோதே போயஸ்கார்டன் வீட்டில் இருந்து வெளியேறி கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் குடியேறப் போவதாக கூறப்பட்டது. ஆனால் மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்கினார்.

தற்போது கோவையில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமம் அருகே குடியேறப் போவதாக செய்தி பரவியது. இதற்காக அங்கு இடம் தேர்வு செய்து அழகான பங்களா கட்டி வருவதாகவும், அந்த பங்களாவின் கட்டுமான பணி முடியும் தருவாயில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

விரைவில் அந்த பங்களா வீட்டில் கிரகப்பிரவேசம் செய்து ரஜினி குடியேறப் போவதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் இதனை ரஜினியின் உதவியாளர் மறுத்துள்ளார்.அவர் கூறும்போது, ‘ரஜினி குடியேறப் போவதாக வெளியான செய்தி உண்மையானது அல்ல. ரஜினி எங்கேயும் போகமாட்டார். சென்னையில்தான் குடியிருப்பார்’ என்றார்.

-என்வழி செய்திகள்

Rajini’s assistant today told that the super star isn’t any idea of shifting his house to Coimbatore any any other place.




2 thoughts on “ரஜினி எங்கேயும் போகமாட்டார்… சென்னையில்தான் இருப்பார் – உதவியாளர்

  1. shrimanigandan

    திருமலையில் ஸ்ரீனிவாசன்; மந்திராலயத்தில் ஸ்ரீராகவேந்திரர் ; போயஸ் தோட்டத்தில் ரஜினிகாந்த் இது என்றும் மாற்றமுடியாத பொக்கிஷம் ……..நன்றி . ஸ்ரீமணிகண்டன்- கோவை

  2. enkaruthu

    அந்த வீட்டின் பிரமாண்டத்தை குமுதத்தில் பார்த்தவுடனே தெரிந்துகொண்டேன் இது ஒரு கப்சா என்று.தலைவரின் பூர்விக வீடான போயஸ் கார்டன் வீடே பார்பதற்கு மிகவும் சிம்பிளாக இருக்கும் அதெப்படி தலைவர் தனக்காக அதுவும் தன் குருநாதரை அமைதியாக தரிசிக்க இவ்வளவு பெரிய வீடு கட்டுவார். அனேகமாக தலைவரின் குருநாதரான தயானந்தா சுவாமிகளின் பக்தர்கள் வந்தால் அவர்கள் தங்குவதற்கு வசதியாக இந்த கெஸ்ட் அவுஸை தலைவர் கட்டலாம் என்பதுதான் என் எண்ணம் .தலைவர்தான் தான் மற்றவர்களின் நலனுக்காக செய்வதை சொல்லாதவர் ஆயிற்றே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *