BREAKING NEWS
Search

திரையிலும் நிஜத்திலும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி சார்! – இயக்குநர் பா ரஞ்சித்

ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி சார்தான்! – பா ரஞ்சித்

new-1

 திரையிலும் சரி, நிஜத்திலும் சரி ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அவர் ரஜினிகாந்த் என்று இயக்குநர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ரஜினி வைத்து கபாலி படத்தை இயக்கியுள்ள பா ரஞ்சித், அண்மையில் மலையாள மனோரமா நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியின் சில பகுதிகள்:

* கபாலி ஒரு உணர்ச்சிமயமான படம். இந்தப் படத்தில் ரஜினியின் அதி தீவிர ரசிகர்களுக்கு ஏகப்பட்ட விஷயமிருக்கிறது. அதே நேரம், அதைத் தாண்டிய பல சுவாரஸ்யமான சமாச்சாரங்கள் உள்ளன.

* இந்தப் படத்தில் ரஜினிகாந்த் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் வருகிறார்.

Kabali - The King

* படத்தில் பாடல்கள், சண்டைக் காட்சிகள் உள்ளன. ஆனால் அவை வழக்கமானவை அல்ல. ரசிகர்களை மட்டுமே மனதில் கொண்டு எடுக்கப்பட்டவை அல்ல.

* ஆரம்பத்தில் ரஜினியை இயக்குவதை நினைத்து கொஞ்சம் டென்ஷனாகத்தான் இருந்தேன். ஆனால் அவர் ‘ரஞ்சித் இது உனக்காக நான் செய்து தரும் படம். இதற்கு முன் நான் நடித்த எந்தப் படத்துக்காகவும் இத்தனை ஆர்வத்தோடு நான் காத்திருந்ததில்லை. தைரியமாக செய்.. நல்லதே நடக்கும்,’ என்று எனக்கு உற்சாகமூட்டினார்.

* கபாலியில் நீங்கள் ரஜினியின் உண்மையான அதிரடி ஆக்ஷனைப் பார்க்க முடியும்.

* ரஜினி சாரின் அன்பு, அக்கறை, எளிமை பற்றியெல்லாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதைவிட பல மடங்கு கபாலி ஷூட்டிங்கின்போது நான் நேரில் அனுபவித்தேன். செட்டிலிருந்த அத்தனைப் பேரையும் அவ்வளவு அக்கறையோடு பார்த்துக் கொண்டார்.

*சூப்பர் ஸ்டார் என்று சொல்வதற்கு திரையிலும் சரி, நிஜத்திலும் சரி, பொருத்தமான ஒரே ஒருவர் ரஜினி சார்தான். உலகில் ஒருவரால் கூட அவரை வெறுக்க முடியாது.

-என்வழி




4 thoughts on “திரையிலும் நிஜத்திலும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி சார்! – இயக்குநர் பா ரஞ்சித்

  1. srikanth1974

    அமெரிக்காவிலிருந்து தலைவர் எப்போது தாயகம் திரும்புகிறார்?.

  2. Raghul

    Vinoji,
    Eppadi FDFS paarka tkt vaanguvathu ?
    I am one of the millions of most ardent fans of thalaivar, though I am not a member in any association..
    Can you help ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *