BREAKING NEWS
Search

காலையிலேயே முதல் வாக்காளராக சூப்பர் ஸ்டார் ரஜினி!

காலையிலேயே முதல் வாக்காளராக சூப்பர் ஸ்டார் ரஜினி!

24-rajini-vote-11-600

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கிய உடனேயே முதல் வாக்காளராக தனது வாக்கைப் பதிவு செய்தார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுவையில் உள்ள 1 தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் முன்பு காலையிலேயே வாக்களிக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை 7 மணிக்கு சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு வந்தார்.

அவர் வாக்குப்பதிவு துவங்கியவுடன் முதல் வாக்காளராக வாக்களித்தார். தனது வாக்கை பதிவு செய்த ரஜினிக்கு வாக்குச்சாவடியில் இருந்த தேர்தல் அதிகாரி அவரது விரலில் மை வைத்தார்.

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *