BREAKING NEWS
Search

என் வாழ்வில் மிகச் சிறந்த மனிதரைச் சந்தித்தேன்! – ரஜினியுடனான சந்திப்பு குறித்து தயாநிதி அழகிரி

என் வாழ்வில் மிகச் சிறந்த மனிதரைச் சந்தித்தேன்! – ரஜினியுடனான சந்திப்பு குறித்து தயாநிதி அழகிரி

BirzHptCQAAMMfS.jpg large

சென்னை: என் வாழ்க்கையில் ஒரு மிகச் சிறந்த மனிதரை இன்று சந்தித்தேன், என்று ரஜினியுடனான தன் சந்திப்பு குறித்து குறிப்பிட்டுள்ளார் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி.

தன் தந்தை முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியுடன் இன்று காலை போயஸ் கார்டன் சென்ற தயாநிதி அழகிரி, சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

முக அழகிரியுடன் நீண்ட நேரம் ரஜினி பேசிக் கொண்டிருந்தார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முக அழகிரி, ரஜினியுடன் பேசியது மனதுக்கு நிம்மதியாக இருந்தது என்றார். மேலும் தன் மகனுக்கு ரஜினியின் ஆசியைப் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த தயாநிதி அழகிரி, “என் வாழ்க்கையில் ஒரு மிகச் சிறந்த மனிதரை இன்று சந்தித்தேன். இவரைப் போன்ற ஒருவரை இதுவரை சந்தித்ததில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ்க,” என்று கூறியுள்ளார்.

மேலும், தான் சிறுவனாக இருந்தபோது, இதே போல தந்தை அழகிரியுடன் போய் ரஜினியைச் சந்தித்த படத்தை வெளியிட்டு, “அன்று.. இன்று.. என்றும் அதே இனிமையான சூப்பர் ஸ்டார்,” என்று கூறியுள்ளார்.

-என்வழி




3 thoughts on “என் வாழ்வில் மிகச் சிறந்த மனிதரைச் சந்தித்தேன்! – ரஜினியுடனான சந்திப்பு குறித்து தயாநிதி அழகிரி

  1. குமரன்

    அட, பழைய படம் கூட இருக்கிறதே !!

    இந்த மூணு சீட்டு மங்காத்தா ஆட்டத்தில் யாரும் முன்பிருந்த இடத்தில் இல்லாத படி சீட்டுக் குலுக்கிப் போட்டுவிட்டார்களே !!!!

  2. குமரன்

    //// என் வாழ்க்கையில் ஒரு மிகச் சிறந்த மனிதரை இன்று சந்தித்தேன்///

    ரஜினி மிகச் சிறந்த மனிதர் என்பதுதான் உலகறிந்த விஷயம் ஆயிற்றே !

    கடவுள் குறித்து கருணாநிதி ஒரு முறை சொன்னார்:
    கடவுள் இருக்கிறாரா, இல்லையா, எனக்குக் கடவுள் பிடிக்கிறதா இல்லையா என்பதல்ல முக்கியம் …
    நான் கடவுளுக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்கிறேனா என்பதுதான் முக்கியம்…..
    (இந்த விஷயத்தில் கமலுடன் வித்தியாசப் பட்டு நிற்கிறார் கருணாநிதி)

    அதுபோல ……

    ரஜினியைச் சந்திப்பவர்கள் எல்லாரும் சொல்வதைத்தான் துரையும் சொல்லி இருக்கிறார். அது ஒன்றும் புதிதல்ல.

    ஆனால் ரஜினியைச் சந்தித்தபின்னர், ரஜினி தன வாழ்க்கையில் ஒரு மிகச் சிறந்த மனிதரை இன்று சந்தித்ததாக நம்மைப் பற்றிச் சொல்லும்படிக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதுதான் முக்கியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *