BREAKING NEWS
Search

கேன்ஸ் விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி செல்லவில்லை… விரைவில் கோச்சடையான் ட்ரைலர்!

கேன்ஸ் விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி செல்லவில்லை… விரைவில்  கோச்சடையான் ட்ரைலர்!  

kochadai-2

சென்னை: கேன்ஸ் பட விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி செல்வார், அங்கு வைத்து கோச்சடையான் ட்ரைலரை வெளியிடுவார் என்று அதன் தயாரிப்பாளர் அறிவித்திருந்த நிலையில், அங்கு ரஜினி செல்லவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

படத்தின் ட்ரைலர் சிறப்பாக வந்திருப்பதாகவும், விரைவில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் ட்ரைலர் வெளியாகும் என்றும் இயக்குநர் சௌந்தர்யா தெரிவித்துள்ளார். அது கேன்ஸில் வெளியாகுமா, தனியாக வெளியிடப்படுமா என்பது குறித்து தகவல் இல்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் புதிய பரீட்சார்த்த முயற்சியாகவும், இந்திய சினிமா வரலாற்றில் முதல் மோஷன் கேப்சரிங் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் படம் என்ற பெருமைக்குரியதாகவும் பார்க்கப்படும் கோச்சடையானுக்காக உலகம் முழுக்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

திரையுலகின் முதல் நிலை கலைஞர்கள் இந்தப் படத்தில் கைகோர்த்துள்ளனர். கிட்டத்தட்ட இரண்டாண்டுகளாக உருவாகிவரும் கோச்சடையானின் இறுதிக்கட்ட பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டன.

படத்தின் ட்ரைலரை முதல்கட்டமாக வெளியிட்டுவிட்டு, இசை வெளியீட்டை ஜப்பானில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

ட்ரைலரை கேன்ஸில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினியே நேரில் கலந்து கொண்டு வெளியிடுவார் என்று படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான டாக்டர் முரளி மனோகர் தெரிவித்திருந்தார்.

கேன்ஸ் விழா நேற்று தொடங்கிய நிலையில், விழாவுக்கு அவர் இதுவரை புறப்பட்டுச் செல்லவில்லை. ட்ரைலர் வெளியீடும் அங்கு நடக்குமா என்று யாரும் உறுதிப்படுத்தவில்லை.

இதுகுறித்து கோச்சடையான் குழுவினரைத் தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது, ரஜினி சார் கேன்ஸ் செல்லவில்லை என்று தெரிவித்தனர்.

மேலும் படத்தின் ட்ரைலர் சிறப்பாக வந்திருப்பதாகவும், விரைவில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் வெளியிடப்படும் என்றும் படத்தின் இயக்குநர் சௌந்தர்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

-என்வழி சினிமா செய்திகள்
8 thoughts on “கேன்ஸ் விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி செல்லவில்லை… விரைவில் கோச்சடையான் ட்ரைலர்!

 1. Raj

  i think there are lot of confusions prevailing in the kochadayan team…
  First movie release was stated as Dec 12,2012. Then changed to Apr 14, 2013.
  Now no idea when it will see the limelight. Not even the songs are released till date…

  Only god to save Kochadayan…

 2. Swaminathan T

  Initially the movie was supposed to be released for Diwali 2012 as promised by Thalaivar from London while shooting… and then the movie release was postponed to 12th Dec 2012 for Thalaivar Birthday… both the dates were not met…. and now the Trailer was supposed to be released for April 14, Tamil New Year and that got postponed to May 20th at the Cannes Festival… again both the dates for Trailer also not met… hope Kochadaiyaan is not one more “Sultan the Warrior”…. though the stills and the look of Thalaivar resembles the Sultan the Warrior look and all… Not sure why Thalaivar signed up a movie for his daughter…

 3. Raja Boopathi

  முன்பெல்லாம் தலைவர் படம் னா ட்ரைலர் எல்லாம் கிடையாது .Direct டா ரிலீஸ் பண்ணுவாங்க(மன்னன்)பிலிம் மட்டும் ட்ரைலர் விட்டாங்க.பட் எல்லாம் Actor க்கும் ட்ரைலர் இருக்கும்.தலைவர் படம் advertisement
  இல்லாமலே 100 days மேல ஓடும்.எப்போ போய் தலைவருக்கு ட்ரைலர் அது எது ன்னு ????????????

  தலைவருக்கு ட்ரைலர் எல்லாம் வேண்டாங்க . Straight பிலிம் ம ரிலீஸ் பண்ணுங்கப்பா

  அன்புடன்
  பூபதி

 4. Dinesh Murugesan

  // தலைவருக்கு ட்ரைலர் எல்லாம் வேண்டாங்க . Straight -அ பிலிம் ம ரிலீஸ் பண்ணுங்கப் //
  சபாஷ் பூபதி …………….

 5. மிஸ்டர் பாவலன்

  கோச்சடையான் படத்திற்கு துவக்கம் முதல் ட்ரைலர் வரை
  எந்த வித குழப்பமும் இல்லாமல், நேர்த்தியாக நடத்திச்
  செல்லும், சௌந்தர்யாவின் புதிய அணுகுமுறை வியக்கத்
  தக்கது. ட்ரைலரை வெளியிட்டபின் இந்த ஆண்டு இறுதிக்குள்
  படம் உறுதியாக வந்து விடும் என நம்புவோம். நன்றி.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 6. SURYA

  கரெக்டா சொண்ணீங்க ராஜா பூபதி – நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை

 7. உண்மை

  நண்பர்களே..!
  உங்கள் காத்துஇருப்புக்கு மிக பெரிய பலன் இருக்கிறது..! பொறுமையாக இருங்கள்., படம் பார்த்தல் அசந்து விடுவிர்கள். இத்தனை நாட்கள் ஏன் ஆனது என்று அப்பொழுது தெரியும்..!
  படம் பார்த்தவர்கள் பிரமித்துவிட்டார்கள்..!!
  இது நிச்சியம் நம்ப தகுந்த செய்தி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *