BREAKING NEWS
Search

இதற்குப் பெயர் தமிழின உணர்வு இல்லை… வெற்றுக் கூச்சல்!

இதற்குப் பெயர் தமிழின உணர்வு இல்லை… வெற்றுக் கூச்சல்!

Lingaa - Thalaivar2 copy1

ரு பிரச்சினை என்றவுடன் அத்தனைப் பேருக்கும் முதலில் தெரிவது ரஜினிகாந்தின் போயஸ் தோட்ட வீடுதான் போலிருக்கிறது.

நரேந்திர மோடியுடன் கூட்டணி வைத்துக் குலாவியர்களோ, அதற்குப் பின்னும் அவருடன் கொஞ்சிக் கொண்டிருந்தவர்களோ… அல்லது அந்த மோடியின் கட்சி அலுவலகமோ இவனுங்களுக்குத் தெரிவதே இல்லை.

எளிதில் பப்ளிசிட்டி வேணும்… அதுக்கு, உடனே போ போயஸ் தோட்டத்துக்கு என்று கிளம்பிவிட்டார்கள் போல. பக்கத்துலதான் முதல்வர் அம்மா வீடு இருக்கு. முடிஞ்சா போய் பாருங்களேன்… நசுக்கி பிதுக்கிடுவாங்க!

ரஜினி என்ற விவிஐபியை தன் விழாவுக்கு பிரதமர் அழைத்திருக்கிறார். ஆனால் அந்த அழைப்பை ஏற்று டெல்லி செல்ல ரஜினி முடிவெடுக்கவே இல்லை. அவர் இன்னும் மைசூரில் படப்பிடிப்பில் இருக்கிறார். டெல்லிக்குப் போவாரா இல்லையா என்று கூடத் தெரியாது.

இந்த அடிப்படை உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்பாமல், போய் போயஸ் தோட்டத்தில் நிற்கும் அரைவேக்காடுகளை என்ன செய்வது.. உங்களைத் தூண்டிவிட்ட கூலிக்காரர்களைப் போய் துவைத்து எடுக்காமல், ‘தமிழனுக்குத் தனி ஈழம் வேண்டும்’ என தைரியமாய் முழங்கிய ஒரு நல்ல மனிதன் மனதைப் புண்படுத்தாதீர்கள். காலத்துக்கும் நீங்களும் கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாகவே வீணாய் போவீர்கள்..!

ஒரு பெரிய ப்ளாஷ்பேக்…

கொழும்பில் ஐஃபா விழா நடக்கிறது.. அதற்கு சிறப்பு விருந்தினராக முதல் அழைப்பு விடுக்கப்பட்டது ரஜினிக்குத்தான் (இதையும் என்வழிதான் முதலில் வெளிப்படுத்தியது!). அவரோ, அந்த அழைப்பிதழைக் கையில்கூட வாங்கவில்லை. நான் இந்த விழாவில் பங்கேற்கவில்லை, எனக்கு அழைப்பிதழே வேண்டாம் என்று சொன்னதுடன், பங்கேற்கவிருந்த ஐஸ்வர்யா ராயையும் அமிதாப்பையும் போக வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.

இதையெல்லாம் அவர் வெளிப்படையாகக் கூடச் சொல்லவில்லை. விசாரித்து தெரிந்து மீடியாதான் உண்மையை வெளிப்படுத்தியது.

இன்றைய மூடர்களுக்கு எங்கே இதெல்லாம் தெரியப்போகிறது!!

-வினோ

என்வழி
7 thoughts on “இதற்குப் பெயர் தமிழின உணர்வு இல்லை… வெற்றுக் கூச்சல்!

 1. noushadh

  ஏன் வினோ,
  என்ன பிரச்சினை ரஜினி வீட்டு முன்பு?

 2. குமரன்

  //// பக்கத்துலதான் முதல்வர் அம்மா வீடு இருக்கு. முடிஞ்சா போய் பாருங்களேன்… நசுக்கி பிதுக்கிடுவாங்க!///

  இவர்கள் அதற்கெல்லாம் “திராணி” இல்லாதவர்கள். சரியாகத்தான் சொன்னீர்கள், கூலிக்கு மாரடிப்பவர்கள்.

 3. sathya

  புறக்கணிப்பதால் எல்லாம் சரியாகிவிடாது. நமது தலைவர்களுக்கு உண்மையான உணர்வு இருந்தால் அவர் வரும் தருணத்தில் இதை பயன்படுத்தி ஒரு சந்திப்பை ஏற்படுத்தி கொண்டு நேருக்கு நேராக கேள்விகள் கேட்டு தமது உணர்வுகளை தெரிவித்து இருக்க வேண்டும். மறக்க கூடாது நமது இனத்துக்கு ஏற்பட்ட கொடுமைகளை அதே தருணம் நமது இனத்தினர் இன்னும் அங்கே வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் நல்வாழ்வு நமது குறிக்கோளாக இருக்கவேண்டும். நேரில் சந்தித்து அதற்கு உண்டான வழிகளை உருவாக்கி இருக்கவேண்டும். எத்தனை நாட்கள்தான் இந்த சிறுபிள்ளை தனமான அரசியல் செய்வார்கள்? நமது உணர்வுகளை இப்படியே பகடை காயாகி வைத்து விளையாடுகின்றனர், நாமும் அதற்க்கு பலியாகிறோம்

 4. Sheshank

  Utter nonsense! Its not anyone’s business to say what functions Rajini can attend and what he needs to boycott! How on earth these demonstrations are going to help anyone!? And why target Rajini for any tamil issue, karnatakka issue or srilanka issue!? Can anyone touch their heart and say that he would/could betray anyone!?

 5. Velu

  Good.. Rajini sir always understands Tamil people. It could have been still better if his family also avoided the ceremony.

 6. Manoharan

  இதில் சில தமிழ் உணர்வாளர்களும் ஈடுபடுவதுதான் வேதனை…நம் தமிழ்நாட்டிலேயே எதிர்ப்பை சம்பாதிக்கப் போகிறார்கள்…நமக்குள்ளேயே ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *