BREAKING NEWS
Search

பெரியார், காமராஜர் போல அனைவருக்கும் பொதுவானவர் ரஜினி! – ஈவிகேஎஸ் இளங்கோவன்

பெரியார், காமராஜர் போல அனைவருக்கும் பொதுவானவர் ரஜினி! – ஈவிகேஎஸ் இளங்கோவன்

rajini-evks

சென்னை: பெரியார், காமராஜர் போல அனைவருக்கும் பொதுவான மனிதர் ரஜினிகாைந்த். அதனால்தான் அவர் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவு தரக் கூடாது என்று சொன்னேன், என்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

அரசியல் பற்றி ரஜினிகாந்த் எதுவும் வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், பாஜகவும் காங்கிரசும் திமுகவும் ஆளாளுக்கு அவரை தங்கள் பக்கம் அழைத்து வருகின்றனர்.

அதிமுகவினரோ, ரஜினியின் ஆதரவு தங்களுக்குத்தான் என்று கூறிவருகின்றனர்.

காங்கிரஸிலிருந்து தனியாகப் பிரிந்து போன வாசன், தனது புதிய கட்சிக்குத்தான் ரஜினி ஆதரவு அளிக்க வேண்டும் என்று உரிமையுடன் கோரி வருகிறார்.

இந்த சூழலில்தான், ரஜினி எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு தரக்கூடாது. அவர் அரசியலுக்கு வராமலிருப்பதே நல்லது என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிரடியாகப் பேட்டி அளித்தார்.

ரஜினியை அரசியலுக்கு வரக்கூடாது என அவர் கூறியது ஏன்? பாஜகவுக்கு ஆதரவு தந்துவிடுவாரோ என்ற அச்சமா என்று ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் கேட்டபோது, “நிச்சயம் அந்த அடிப்படையில் சொல்லவில்லை. ரஜினி பொதுவான மனிதர். சிறந்த மனிதாபிமானி.

பெரியார், காமராஜர் போன்றவர்களை அரசியலுக்கு அப்பாற்பட்டு, மக்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர். இதேபோல் ரஜினிகாந்தும் எல்லோருக்கும் பொதுவானவர். அவரது ரசிகர்கள் எல்லா கட்சியிலுமே உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் உள்ளனர். அப்படிப் பார்த்தால் அவர் காங்கிரஸுக்கு ஆதரவு தரவேண்டும் என்றுதான் நாங்கள் கேட்டிருக்க வேண்டும்.

ஆனால் அடிப்படையில் நல்ல மனிதரான ரஜினி, குறுகிய வட்டத்துக்குள் அடைபடக் கூடாது என்பதுதான் என் கருத்து. விரைவில் அவரைச் சந்திக்கவும் உள்ளேன்,” என்றார்.

-என்வழி




11 thoughts on “பெரியார், காமராஜர் போல அனைவருக்கும் பொதுவானவர் ரஜினி! – ஈவிகேஎஸ் இளங்கோவன்

  1. chozhan

    //அதிமுகவினரோ, ரஜினியின் ஆதரவு தங்களுக்குத்தான் என்று கூறிவருகின்றனர்.//

    எனக்கு தெரிந்து அதிமுகவில் யாரும் ரஜினியை அழைக்கவில்லை. இது தவறான தகவல்.

    _________________

    ஜெயலலிதாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி எழுதிய கடிதத்தை, அதிமுக தலைமைக் கழக லெட்டர் பேடில் அடித்து மீடியாவுக்கு விநியோகித்து, ‘ரஜினி நம்ம பக்கம்தான்’ என்று சொன்னதற்கு அர்த்தம் என்ன?

    -என்வழி

  2. G Udhay UKG

    ஆதிமுக அழைக்கவில்லை என்று சொல்லாதீர்கள் .. உங்களுக்கு தெரியவில்லை என்று சொல்லுங்கள் சோழன் …

    அருமையான ரிப்ளை என்வழி அண்ணா

  3. kumaran

    தலைவர் தமிழ் நாட்டின் நிகரில்லா மாமனிதனாக உருவெடுப்பார் !

  4. Elango

    ஈவிகேஎஸ் இளங்கோவன் இப்படி சொன்னால் என்ன அர்த்தம் என்று அவரை பற்றி தெரிந்தவர்களுக்கு புரியும் 😀

  5. chozhan

    //ஜெயலலிதாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி எழுதிய கடிதத்தை, அதிமுக தலைமைக் கழக லெட்டர் பேடில் அடித்து மீடியாவுக்கு விநியோகித்து, ‘ரஜினி நம்ம பக்கம்தான்’ என்று சொன்னதற்கு அர்த்தம் என்ன?//

    மேனகா காந்திக்கும் லெட்டெர் எழுதி மீடியாவுக்கு விநியோகித்தகவும் ஞாபகம்! ரெண்டுக்கும் வெவ்வேறு அர்த்தம் போல

  6. குமரன்

    வினோ அவர்களே

    அதுமட்டுமா? 2009 தேர்தலில், தலைவர் வாக்களிப்பதை விடியோப் படம் பிடித்து ஜெயா டிவியில் போட்டுத தமக்கு வாக்கு சேகரித்ததை மறக்க முடியுமா?

  7. குமரன்

    ///மேனகா காந்திக்கும் லெட்டெர் எழுதி மீடியாவுக்கு விநியோகித்தகவும் ஞாபகம்///

    யார் எப்போது வின்யோகித்தார்? மேனகா காந்தி தனக்குய் ரஜினி நன்றிக் கடிதம் எழுதியதாக எப்போதும் சொன்னதாகத் தகவல் இல்லை.

  8. குமரன்

    ஈ.வி.கே..எஸ் சொல்வதில் பிழை உள்ளது.

    பெரியார் தி.கவை உருவாக்கிய அரசியல்வாதிதான். திமுகவும் அதிமுகவும் மதிமுகவும் தி.கவின் பிள்ளைகள்! பெரியாரை காங்கிரசோ, கம்யூனிஸ்டோ, அல்லது பா.ஜ.கவோ சொந்தம் கொண்டாட முடியுமா? விட்டுவிடுவார்களா, தி.கவும், அதன் பிள்ளைகளும்?

    ஆக பெரியார் ஒன்றும் எல்லாருக்கும் பொது அல்ல.

    அதூ போலவே காமராஜரை திமுகவும், அதிமுகவும் – பா.ஜ.கவும் சொந்தம் கொண்டாடினால் காங்கிரஸ்காரர்கள் விட்டுவிடுவார்களா? ஆக அவரும் எவருக்கும் பொது அல்ல.

    தலைவர் ரஜினி அரசியலுக்கு வராதவரை அவரை இந்த அரசியல்வாதிகள் பொதுவில் வைப்பார். வந்தால் அடுத்த நிமிடமே, இந்த இளங்கோவனே அவரை ஏசுவார், அவர் மட்டும் பா.ஜ.கவுக்கு ஆதரவு தந்து விட்டால்!

    அவ்வளவு ஏன், தலைவர் தனிக்கட்சி ஆரம்பித்து அதில் இந்த இளங்கோவனைச் சேர்க்காமல், தேர்தலில் வென்று முதல்வர் ஆனால், இதே இளங்கோவன் வாய் வேறு மாதிரிப் பேசும். அப்போது வடிவேலு மாதிரி இது வேற வாய் என்பார்!

  9. srikanth1974

    திரு.குமரன் சார் அவர்கள் கூறுவது முழுக்க முழுக்க உண்மை.
    தலைவர் அவர்கள் தமது திருமணமண்டபத்தில் ஆம் ஆத்மி கட்சியினருக்கு
    இடம் கொடுத்ததற்கு இந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நம் தலைவரை ஏக
    வசனத்தில் மிகக் கேவலமான முறையில் விமர்சனம் செய்தவர் என்பதை
    யாரும் மறந்திருக்க முடியாது.உண்மையிலேயே இந்த வாய் நார வாய்தான்.

  10. மிஸ்டர் பாவலன்

    நண்பர் ஸ்ரீகாந்த் அவர்களின் நினைவாற்றலை நான் பாராட்டுகிறேன்.
    ஆனால அவர் ஆம் ஆத்மி கட்சி (AAP) என்பது சரியல்ல. அண்ணா
    ஹசாரே ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருந்த போது அதற்கு
    இலவசமாக அவர் மண்டபம் கொடுத்தார்.. அப்போதும், இப்போதும் அண்ணா
    ஹசாரே எந்தக் கட்சிக்கும் ஆதரவு கொடுக்க வில்லை என்பதும் இங்கு
    குறிப்பிடத் தக்கது. இந்த நிகழ்வு டிசம்பர் 2011 அன்று நடந்த போது
    காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி
    அவர்களை கடுமையாக சாடினார்..
    http://ibnlive.in.com/news/elangovan-hits-out-at-rajinikanth/216006-60-118.html

    -== மிஸ்டர் பாவலன் ==

  11. srikanth1974

    திரு.மிஸ்டர் பாவலன் சார் அவர்களுக்கு வணக்கம்’
    நான் எழுதிய கருத்தில் எனது கவனக்குறைவால் ஏற்பட்ட தவறை
    மிக அழகோடும்,கண்ணியத்தோடும்,எனக்கு சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
    தாங்கள் வெளியிட்ட செய்தி [link ] பார்த்து தெரிந்து கொண்டேன்.
    எல்லாம் இந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் மீதிருந்த கோபம்
    என்னை தடுமாற வைத்துவிட்டது.தெளிவானத் தகவல் அளித்ததற்கு மிக்க
    நன்றி சார்.
    அன்புடன் தங்கள் சகோதரன்
    ஸ்ரீகாந்த்.ப

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *