BREAKING NEWS
Search

ரஜினி ஒரு கிங் மேக்கர்… மோடி அவரைச் சந்தித்ததால் பாஜக இமேஜ் உயர்ந்துள்ளது! – ஹேமமாலினி

ரஜினி ஒரு கிங் மேக்கர்… மோடி அவரைச் சந்தித்ததால் பாஜக இமேஜ் உயர்ந்துள்ளது – ஹேமமாலினி

ashram-thalaivar1
டெல்லி: ரஜினி ஒரு கிங் மேக்கர். அவரை மோடி சந்தித்த பிறகு பாஜகவின் இமேஜ் உயர்ந்துவிட்டது என்று நடிகை ஹேமமாலினி தெரிவித்துள்ளார்.

முன்னாள் நடிகை ஹேமாமாலினி பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளராக உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

சமீபத்தில் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, தங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்து பேசிய பின்னர், தமிழகத்தில் மட்டும் இன்றி நாட்டின் பல பகுதிகளில் பாரதீய ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்து இருப்பதாகக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “ரஜினி என்றைக்குமே ஒரு கிங் மேக்கர். அப்படி இருக்கத்தான் அவரும் விரும்புகிறார் என்று நினைக்கிறேன். அவர் மட்டும் அரசியலுக்கு வந்தால், எங்களைப் போன்ற பல தலைவர்களை வீட்டுக்கு அனுப்பிவிடும் செல்வாக்கு அவருக்கு இருக்கின்றது.

ரஜினி-மோடி சந்திப்பு விளைவாக தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் பாரதீய ஜனதாவின் செல்வாக்கு கூடியிருக்கிறது,” என்றார்.

ரஜினியுடன் அந்தாகானூன் படத்தில் நடித்தவர் ஹேமாமாலினி என்பது குறிப்பிடத்தக்கது. ஆஷ்ரம் பள்ளி விழாவில் ரஜினி கையால் அவருக்கு விருதும் வழங்கப்பட்டது.

தமிழில் கமல்ஹாசனின் ஹேராம் படத்தில் நடித்திருக்கிறார்.

என்வழி ஸ்பெஷல்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *