இளையராஜாவுக்கு இசையமைக்கத் தெரியாதாமே?!
கேள்வி: இளையராஜாவுக்கு இசையமைக்கத் தெரியாது… என்று சாரு நிவேதிதா என்ற எழுத்தாளர் சொன்னாராமே!
பதில்: சாரு நிவேதிதா ஒரு தற்குறி என்று பல ஆண்டுகளாக பல பண்பாளர்களும் சொல்லி வருவதை அவரே நிரூபித்ததற்காக நீங்கள் நன்றி அல்லவா சொல்ல வேண்டும்!
உலகின் பிரமாண்டமாம் இமய மலையை பலரும் பலவிதத்தில் பார்க்கிறார்கள்.. பயன்படுத்துகிறார்கள். இந்த தற்குறி அந்த மலையை கல்லாகப் பார்க்கிறது. இமயத்தின் பெருமை அது தெரியாத தற்குறிகளின் பார்வையால் குறைந்தா போய்விடும்!
இன்னொன்று, ஒரு உன்னதமான கலைஞனின், உலகம் போற்றும் மாமேதையின் பெயரை தன் அற்ப விளம்ப மோகத்துக்காக பயன்படுத்துவது பக்கா கிரிமினல்தனம். இந்த கிரிமினல்களைத் தண்டிக்க சட்டத்திலேயே இடமிருக்கிறது!
****
கேள்வி: யுவன் சங்கர் ராஜா இசையில் வைரமுத்து பாடல் எழுதுவது குறித்து..
பதில்: மிக்க மகிழ்ச்சி. யுவனிடம் அன்றும் இன்றும் ஒரு குழந்தையின் வெள்ளந்தி மனசு… ஆனால் வைரமுத்து…? 5 முறை தேசிய விருது பெற்ற ‘கவிப்பேரரசு’, ‘நானாக யுவனைத் தேடிப் போகவில்லை.. அவர்தான் என்னைத் தேடி வந்தார்.. பல ஆண்டுகளுக்கு முன்பே கேட்டார்.. இளையராஜா மனைவி கூட யுவனுக்கு எழுதச் சொல்லிக் கேட்டார். நான்தான் பொறுமையாக இருந்தேன்..,” என்று தன் ஜம்பத்தை விடாமல் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்.
இதுதான்.. இதுதான் இசைஞானி இத்தனை ஆண்டு காலமாக வைரமுத்துவை ஒதுக்கியே வைத்திருப்பதற்கு காரணம் என நினைக்கிறேன்.
மீண்டும் இளையராஜா-பாரதிராஜா-வைரமுத்து கூட்டணி பற்றி பல இடங்களில் பாரதிராஜாவும் வைரமுத்துவும் பேசிவிட்டார்கள். ஆனால் ராஜா? அவர் தன் பாட்டுக்கு தன் வேலையை மட்டும் பார்க்கிறார். காரணம் இப்போதாவது புரிகிறதா!
ஆனால் அனைத்தையும் தாண்டி தமிழ் சினிமாவின் இணையற்ற ராஜாக்களுடன் வைரமுத்துவின் பயணம் மீண்டும் தொடர்ந்தால் ரசிக்கும் முதல் ரசிகன்.. நம்மையல்லால் வேறு யார் நண்பரே!
*****
கேள்வி: இளையராஜா – ரஜினி மீண்டும் இணையும் நாள் எப்போது?
பதில்: இருவருக்குமே அது பெரிய விஷயமில்லை. நினைத்த மாத்திரத்தில் சேர்ந்து பணியாற்றும் இணக்கமான நட்புடன் இருப்பவர்கள்தான் இந்த இரு சிகரங்களும்!
(என்னிடம் நண்பர்கள் பலரும் அடிக்கடி கேட்ட கேள்விகள் இவை என்பதால்.. தனிப்பட்ட யாரையும் குறிப்பிடவில்லை!)
-வினோ
என்வழி ஸ்பெஷல்
கனவு மெய்ப்பட வேண்டும்.