BREAKING NEWS
Search

கபாலி… ச்சும்மா அப்படி வந்துருக்கு! – தலைவர் ரஜினி மகிழ்ச்சி

கபாலி… ச்சும்மா அப்படி வந்துருக்கு! 

Kabali-one crore

தோ வந்துவிட்டது கபாலி டீசர். உலக அளவில் 15 மில்லியன் தாண்டி ஜுராஸிக் வேல்ட் படத்தை ஜுஜூப்பியாக்கி விட்டது. ”கோச்சடையான்” படத்தை பொம்மை படம் என்று கூறியவர்களையும்,  ”லிங்கா” ரஜினி அம்புடுதேன்  என்று சொன்னவர்களையும்  வியக்க வைத்திருக்கிறது கபாலி டீசர்.

தெலுங்கு டீசரில் 9மில்லியன் தாண்டி காரபூமிகாரர்களின் வயிற்றில் புளியை கரைத்து இருக்கிறது கபாலி. மே 1 பகல் 11 மணிக்கு கபாலி டீசர் ரிலிசானது. சரியாக 11.10மணிக்கு தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ தாணுவுக்கு ஒரு போன் வந்தது. எதிர்முனையில் பேசிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவரது மனைவி இருவரும் ஆனந்த பெருக்கில் தேம்பித் தேம்பி அழுகின்றனர். அவர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் கலைப்புலி கண்களிலும் கண்ணீர் கசிகிறது.

அன்றைய தினம் ‘2.0’ படத்திற்காக விக் செக்கப் செய்ய வேண்டி இருந்ததால் ரஜினியை தனது ஆபீஸுக்கு வரச்சொல்லி இருந்தார் டைரக்டர் ஷங்கர்.

அதன்பின் சங்கரின் ஆபீஸில் வேலை செய்பவர்கள் அவரது உதவி டைரக்டர்கள் அமர்ந்து லேப்டாப்பில் கபாலி டீசரை பார்த்தார் ரஜினி. அதன்பின் அவர்கள் தோள்களில் கைபோட்ட படி ”ஏம்ப்பா கபாலி டீசர் ஓகே வா… தேறிடுமா…” என்று தாடையை தடவியபடி வெள்ளந்தியாய் கேட்டார் ரஜினி. எல்லோரும் சந்தோஷத்தில் ”சூப்பர் தலைவா” என்று சொல்லி விசில் அடித்து ஓ போட அந்தக் கால மணப்பெண் போல் வெட்கத்தில் நெளிந்தார் ரஜினி.

தமிழில் தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்திக் சுப்புராஜ் எல்லோரும் தங்களது டிவிட்டரில் ”கபாலிக்கு ஜே” என்று வாழ்த்தியிருக்கிறார்கள். ”என்ன இருந்தாலும் தலைவன் தலைவன்தான்” என்று சிம்பு சிலாகித்து இருக்கிறார்.

”தென் இந்தியா சினிமா புகழை உலகத் தரத்துக்கு கொண்டு போன ரஜினிஜி உண்மையிலேயே சூப்பர் மேன்” என்று மகேஷ்பாபுவும், ”ஜுராஸிக் வேல்ட் படத்தை உலக அளவில் இரண்டாம் இடத்துக்கு தள்ளியவர் நம்ம ஊர் ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினி சார்” என்று பவன்கல்யாண் பாராட்டி உள்ளனர்.

ரஜினி ரசிகர்களை எப்படி திருப்திப்படுத்துவது என்கிற உதறலோடு இருந்தார் டைரக்டர் ரஞ்சித். தான் பரபரப்பாக செய்த ”கபாலி” டீசரை போயஸ் கார்டன் சென்று ரஜினியிடம் காட்டினார்.  ரஜினி என்ன சொல்வாரோ என்று பதைபதைத்து கொண்டு இருந்தபோது கபாலி டீசரை அருகில் இருந்து பார்த்த சௌந்தர்யா ”கபாலிடா” என்று ரஜினி சொன்னதும் துள்ளிக் குதித்து கை தட்ட ரஜினி முகத்தில் பரவசம்.

ரஜினி ரியாக்‌ஷன் தான் என்ன? ‘கபாலி’யின் டபுள் பாஸிட்டிவ் பார்த்துவிட்டு வெளியில் வந்த ரஜினி 2 நிமிஷம் மௌனமாக இருந்தார். ”என்ன தாணு… இப்படித்தான் வரும்னு  நினைச்சிருந்தேன். ச்சும்மா அப்படி வந்துருக்கு…” என்று சொல்லி ஆஹாஹா… என உணர்ச்சி பெருக்காய் சிரித்தவர் அடுத்து சொன்னது பெரிய ஹை லைட்:

”முன்னாடி எல்லாம் பாலசந்தர் சார் என்னை நடிக்க வச்சி வேலை வாங்குவார். அதுக்கு அப்புறம் நான் நடிச்ச படங்கள்ல எல்லாம் டைரக்டர்கள் என்ன சொன்னார்களோ அத கேட்டு அப்படியே நடிச்சேன் அவ்வளவுதான். இப்போ கபாலில என்கிட்ட ரஞ்சித் வேலை வாங்குறதப் பார்த்தப்ப எனக்கு பாலசந்தர் சார் ஞாபகம் வந்துச்சு,” என்று நெகிழ்வோடு சொன்னாராம் ரஜினி.

-விகடன்
4 thoughts on “கபாலி… ச்சும்மா அப்படி வந்துருக்கு! – தலைவர் ரஜினி மகிழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *